பொருளாதார வளர்ச்சிக்கு 'சுதந்திர'மான ரிசர்வ் வங்கி அவசியம்.. ரகுராம் ராஜன் ஆவேசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஒரு நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய ரிசர்வ் வங்கி வேண்டும் எனத் தற்போதைய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

 

ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் 10வது புள்ளியியல் நாள் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி நாட்டின் வளரச்சிக்கு மத்தியிலும் அரசியல் தலையீடுக்கு மத்தியிலும் படும்பாட்டை மறைமுகமாகத் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் துணையாக நின்று பணவீக்கத்தைக் குறைத்து, வளர்ச்சியைத் தொடர் நிலைக்குக் கொண்டு செல்ல மத்திய வங்கிகளுக்கு (ரிசர்வ் வங்கி) முழுமையான சுதந்திரம் வேண்டும் என ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் கூறினார்.

பணவீக்கம்

பணவீக்கம்


அரசியல் தலையீடு இல்லாமல் ஒரு நாட்டின் பணவீக்கம் அதிகரித்தால், முறையாக ஒரு அமைப்பை உருவாக்கி மேக்ரோ-எக்னாமிக்-ஐ நிலைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மொத்த நாட்டுப் பொருளாதாரச் சரிவை நோக்கிய பயணிக்கும்.

இதற்கான வழியைப் பணிகளைச் செய்ய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உதவினால் இதுவே மத்திய வங்கிக்கான சுதந்திரம் என ராஜன் கூறினார்.

 

நாணய கொள்கை
 

நாணய கொள்கை

இதேபோல் மத்திய வங்கிகள் அரசின் திட்டங்கள், பணவீக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பொறுத்து நாணய கொள்கையை வடிவமைக்க வேண்டும் எனக் கூறினார்.

ராஜன் இதுபோன்ற சர்ச்சைக்குள்ளான கருந்தை பல முறை பேசியுள்ளார். இதில் ஒற்றைக் கண் ராஜா மேட்டர் தான் பெருசு.

 

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

உலகப் பொருளாதார மத்தியில் இந்திய பொருளாதாரம் மிகவும் நம்பகதன்மை உடையதாக உள்ளது, இது எப்படி, இதன் ரகசியம் என்ன என்று பிற நாட்டு மத்திய வங்கி அதிகாரிகளும், நிதியமைச்சர்களும் கேட்கும்போது உங்களது பதில் என்னவாக இருக்கும்.?

இது தான் மார்கெட்வாட்ச் நிறுவனம் ஆர்பிஐ தலைவர் ரகுராம் ராஜனிடம் கேட்ட கேள்வி. இதற்கு அவர் சொன்ன அதிரி புதிரி பதிலை நீங்களே பாருங்கள்.

 

ஒற்றைக் கண் ராஜா

ஒற்றைக் கண் ராஜா

இன்றைய நிலையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும், நாங்கள் நினைத்தவாறு இல்லை. நாங்கள் நிம்மதி பெருமூச்சு விட இன்னும் சிறப்பான இடத்தை அடைய வேண்டும். 'குருடர்கள் நாட்டில் ஒற்றைக் கண் உடையவன் தான் ராஜா' என்ற பழமொழி எங்கள் நாட்டில் உள்ளது அதுபோலத் தான் உள்ளது இன்றைய பொருளாதாரம்.

ஒரு படி மேல்

ஒரு படி மேல்

சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலையை ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் ஒரு படி மேல் என்பதையே ஒற்றைக் கண் ராஜா என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

கடந்த 3 வருடத்தில் பணிக்காலத்தில் ரகுராம் ராஜனின் கருத்துகளுக்கு நிதியமைச்சர், வர்த்தகத் துறை அமைச்சர் எனப் பலவேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அரசும்.. ராஜனும்..

அரசும்.. ராஜனும்..

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நாட்டின் பணவீக்கத்தைக் குறுகிய காலகட்டத்திற்கு 4 சதவீதத்திற்கும் குறைவான அளவில் கொண்டு வர புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

பணி நீட்டிப்பு

பணி நீட்டிப்பு

ராஜனின் பணிநீட்டிப்புக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தும் ரகுராம் ராஜன் மறுத்துள்ளார். இதனால் இவரது பணிக்காலம் அடுத்த 2 மாத்தில் முடிவடைகிறது.

புதிய ரிசர்வ் வங்கி கவர்னரை தேர்ந்தெடுக்கும் பணியில் மத்திய அரசு தற்போது மூழ்கியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

‘Independent RBI, a must for growth'

An independent central bank is essential for ensuring stable and sustainable growth in any economy, said Raghuram Rajan, Governor Reserve Bank of India (RBI).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X