இந்தியாவில் இப்போ இதுதான் டிரெண்ட்..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன... வீடு வாங்கப் போரீங்களா? அப்ப நீங்க ஏழைதான்.. என்னங்க அப்படிச் சொல்லிட்டீங்கனு நீங்க கேட்பது புரிகிறது. இப்போ வீடு வாங்குறதெல்லாம் கீழ் நடுத்தர வர்க்கம் அல்லது ஏழைகளுடைய குறிக்கோளாக மாறிவருகிறது.

 

அதேவேளையில் சொகுசு வீடுகள் தற்போது இந்தியாவில் வீடு-மனை வர்த்தகத்தின் பரபரப்பான மற்றும் சக்திவாய்ந்த ஒரு அங்கமாக மாறிவருகிறது. உண்மையில் இது ஆச்சரியமாகத் தான் உள்ளது. சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளில் ஆடம்பர சந்தையில் இப்படி ஒரு வளர்ச்சியை இந்தியா பார்த்ததில்லை.

சொகுசான வாழ்க்கைக்கு சொகுசான வீடே இந்தியாவில் இப்போ இதுதான் டிரெண்ட்..!

நடுத்தர மக்கள்

நடுத்தர மக்கள்

கீழ் நடுத்தர மக்கள் அனைவரும் தற்போது சிறிய அளவிலோ அல்லது கூட்டணி முயற்சியில் பெரிய அளவிலோ சுய தொழில் செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் அதிகளவிலான பணம் புழக்கம் இருந்து வருகிறது. இது இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய முன்னேற்றம். மத்திய அரசு செய்த ஆய்வில் இந்தியாவில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரில் குறைந்தது 70 சதவீதம் பேர் தற்போது ஒரு சொந்த வீடாவது வைத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

சொகுசு வீடு

சொகுசு வீடு

அதிகம் வருமானம் பெறும் ஹை நெட்வொர்த் இண்டிவிஜுவல்ஸ் எனப்படும் உயர் வருவாய் வகுப்பினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், பன்னாட்டுப் பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் காலூன்றுவதும், மக்களின் குறிக்கோள்கள் உயர்ந்து வருவதும் இந்தச் சொகுசு வீடுகளுக்கான தேவை உயர்ந்து வருவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கிறது.

உயர் வருவாய் வட்டம்
 

உயர் வருவாய் வட்டம்

நாட்டின் தொழிற்துறையில் மிக அதிக வளர்ச்சியுடன் திகழும் சேவைகள் துறை பல நடுத்தர வருவாயினரை உயர் வருவாயினர் வட்டத்திற்குள் தள்ளியிருக்கிறது.

என்ஆர்ஐ

என்ஆர்ஐ

நாட்டில் நிலவி வரும் தொழில் துறையின் மீதான நம்பிக்கை மற்றும் அண்மை காலமாகப் பன்னாட்டுச் சந்தைகளில் குறைந்துள்ள ரூபாயின் மதிப்பு வெளிநாடு வாழ் இந்தியர்களை இந்தச் சொகுசு வீடுகளை நோக்கி ஈர்த்துள்ளது.

அதிகரித்து வரும் திட்டங்கள்

அதிகரித்து வரும் திட்டங்கள்

இந்தச் சொகுசு வீடுகள் வர்த்தகம் பல பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனங்களைப் புதிய திட்டங்களை வகுக்க ஊக்குவித்துள்ளது. இதனால் பல புதிய தொழில் நுட்பங்கள், வசதிகள் கொண்ட வீடுகள் இந்தியாவில் உருவாகத் துவங்கியுள்ளன.

குறிப்பாகக் குடியிருப்பைக் கவனித்துக்கொள்ளும் சேவைகள், முற்றிலும் தானியங்கிமயமாக்கப் பட்ட வீடுகள் (ஹோம் ஆட்டொமேஷன் சிஸ்டம்ஸ்), குளிர்பதன மதுபான சேமிப்பறைகள், அசைவு நோட்டமிடும் கருவிகள் (மோஷன் சென்சர்கள்), மொட்டைமாடி ஒய்வுப் பகுதிகள் (ரூஃப் டாப் லௌஞ்ச்), கட்டுப்படுத்தக்கூடிய வெப்ப நிலை நீச்சல் குளங்கள், செயற்கை நீரூற்றுகள் மற்றும் பலதரப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் எனப் பல்வேறு வசதிகள் இவற்றில் அடங்கும்.

 

விலைப் புள்ளிகள்

விலைப் புள்ளிகள்

இந்தச் சொகுசு வீடுகளின் விலைகள் அவை அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு நகரத்திலும் வேறுபடுகின்றன. ஒரு சொகுசு வீட்டின் ஆரம்ப விலை 2016 ஆண்டு நிலவரப்படி மும்பையில் 2 கோடியும், குர்கானில் 1.5 கோடியும் நோய்டாவில் 1 கோடி வரையும் நிர்ணயிக்கப்படுகின்றது. பெங்களூருவில் சொகுசு வீட்டின் ஆரம்ப விலை 75 லட்சமாக உள்ளது.

அதே வேளையில் அகமதாபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில். இது போன்ற வீடுகளை முறையே 65 மற்றும் 60 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் வாங்க முடியும். பின்குறிப்பு: இவை அனைத்தும் ஆரம்ப விலை.

 

சொகுசு மையங்கள்

சொகுசு மையங்கள்

இந்தியாவில் இந்த 2016 ஆண்டு, இதுவரை 47,000 சொகுசு வீடுகள் முதல் ஒன்பது முக்கிய நகரங்களில் விற்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் இவற்றின் மதிப்பு மொத்த விற்பனையில் 17 சதவிகிதம் என்கின்றனர்.

பெங்களுரூ தான் டாப்பு

பெங்களுரூ தான் டாப்பு

பெங்களூரு நகரம் இந்தச் சொகுசு வீடுகள் விற்பனையில் 29 சதவிகிதம் கொண்டு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மும்பையில் ப்ரபாதேவி, பாந்த்ரா, லோயர் பரெல் மற்றும் குர்லா காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகள் சொகுசு வீடுகள் அதிகம் காணப்படும் இடங்களாகும். பெங்களூருவில், ஒயிட்ஃபீல்டு மற்றும் நார்த் பெங்களூரு ஆகியவை சொகுசுவீடுகள் அதிகம் விரும்பப்படும் இடங்கள்.

குர்கானில் இதுபோன்ற வீடுகள் அதிகம் விரும்பப்படும் இடங்களாகக் கோல்ஃப் கோர்ஸ் ரோடு, நியு குர்கான் மற்றும் சோனா ரோடு ஆகியவை உள்ளன. அண்மையில், ஐதராபாத்தும் இந்தச் சொகுசுவீடுகளை விரும்பும் பட்டியலில் சேர்ந்துள்ளது. இது பெரும்பாலும் அரசியல் நிலைத் தன்மை மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளின் வளர்ச்சி ஆகியவற்றால் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சென்னையில், மத்திய பகுதிகள் இது போன்ற சொகுசு வீடுகளால் பரபரப்புடன் காணப்படுகின்றன.

 

பன்னாட்டுத் தரம்

பன்னாட்டுத் தரம்

இந்தச் சொகுசு வீடு வர்த்தகத்தின் வளர்ச்சி மிகையாக இல்லை என்றாலும், தேவையானது நிலையாக உள்ளது. இந்தச் சொகுசு வீட்டுத் திட்டங்கள் மிகச்சிறந்த வசதிகளுடனும் பன்னாட்டு வாழ்க்கைத் தரத்திற்கு இணையாகவும் இருப்பதால், மக்களின் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சிவிட்டன.

 

 

பாரிஸ், இத்தாலி, துபாய்

பாரிஸ், இத்தாலி, துபாய்

இந்தியாவின் சில சொகுசு வீட்டுத் திட்டங்கள், பாரிஸ், இத்தாலி, துபாய் போன்ற உலகின் மிகச் சிறந்த நகரங்களின் சொகுசுக்கு இணையாக உள்ளது என்றால் மிகையல்ல.

மக்களின் வாழ்க்கை முறை

மக்களின் வாழ்க்கை முறை

பெருகி வரும் மக்களின் எதிர்நோக்குகள், வருவாய் உயர்வு, மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பின் மீதான எதிர்பார்ப்புகள் ஆகியவை இந்தியாவின் சொகுசு வீடுகள் வர்த்தகத்தை ஒரு சில நகரங்களுக்குள் சுருக்காமல் பல்வேறு நகரங்களிலும் பிரபலமடையச் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சீஇஓ பின்னி பன்சால் பெங்களுரில் 32 கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளார். 10,000 சதுரடி பரப்பளவும் கொண்ட இந்த வீடு பெங்களுரில் ஆடம்பர பகுதிகளில் ஒன்றாக கூறப்படும் கோரமங்களா பகுதியில் அமைந்துள்ளது.

ம்ம்ம்.. எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு.... என்ன.. உங்ககிட்ட பணம் ரெடியா இருக்கா?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Luxury Housing Is Gaining Momentum In India

Luxury housing is emerging as one of the most vibrant and dynamic real estate segments in India. The growing demand for luxury housing can be attributed to a rise in the number of high-networth individuals (HNWIs), the influx of global lifestyle trends, and growing aspirations of people.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X