ரியல் எஸ்டேட் துறையில் இளம் என்ஆர்ஐ-களின் திடீர் ஆதிக்கம்.. என்ன காரணம்..?

By Ashok Cr
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா ரியல் எஸ்டேட் துறை தேக்க நிலையை அடைந்து பாதிக்கப்பட்ட போதிலும் கூட, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ-கள்) அது விருப்பமான முதலீடாக நீடிக்கிறது.

என்ஆர்ஐ-களின் அதிகரித்த முதலீட்டிற்கு பின்னணியில் இருக்கும் முக்கிய காரணங்களாக அதன் விலை நிலைத்தன்மையும், சாதகமான சந்தை வாய்ப்புகளாக இருக்கிறது.

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

அசோசியேடட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் செயலாளர் ஜெனரல் டி.எஸ்.ராவத் ஒரு அறிக்கையில் கூறியது என்னவென்றால், "புதிய அரசாங்கத்தின் மீது என்ஆர்ஐ-கள் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.

பல்வேறு துறைகளிலும் தோழமையான முதலீட்டு நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள். மக்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். முதலீடு செய்வதற்காக அவர்கள் சொத்துக்களை தேடுகின்றனர்.

 

அமெரிக்கா, இங்கிலாந்து என்ஆர்ஐ

அமெரிக்கா, இங்கிலாந்து என்ஆர்ஐ

சிறிய மற்றும் பெரிய டெவலப்பர்கள் என இருவருமே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆசியா பசிபிக் வட்டாரத்தில் உள்ள என்ஆர்ஐ-களின் மீது இந்த வருடம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்".

18 முதல் 35 வயது வரையிலான என்ஆர்ஐ

18 முதல் 35 வயது வரையிலான என்ஆர்ஐ

இந்திய சொத்துக்களின் கண்காட்சி அமைப்பாளர்களான சுமன்சா எக்சிபிஷன்ஸ் கூறுவது என்னவென்றால், "ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 18 முதல் 35 வயது வரையிலான என்ஆர்ஐ-களில் 43 சதவீதம் பேர்கள் இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர்".

ரியல் எஸ்டேட் சந்தையில் இளைஞர்கள்

ரியல் எஸ்டேட் சந்தையில் இளைஞர்கள்

சுமன்சா எக்சிபிஷனின் தலைவர் சீனில் ஜெய்ஸ்வால் கூறியதாவது, "முன்னதாக வயதான நபர்கள் தான் சொத்துக்களை வாங்குவதற்குத் திட்டமிடுவதையும் அதற்காக பணம் சேர்ப்பதையும் நாம் பார்த்துள்ளோம். இன்று, அதிகமான இளைஞர்கள் ரியல் எஸ்டேட் சந்தையில் தங்களது சேமிப்பை முதலீடு செய்ய விரும்புகின்றனர்".

சொந்தமாக வீடு வாங்குவது மிகவும் முக்கியம்

சொந்தமாக வீடு வாங்குவது மிகவும் முக்கியம்

வருங்காலத்தில் இந்தியாவில் குடியேற விரும்பும் இள வயது என்.ஆர்.ஐ.-களுக்கு இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்குவது மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் வீடு வாங்குவதன் மூலம் தன் நாட்டின் மீதும் தன் மக்களின் மீதும் ஒரு இள வயது என்.ஆர்.ஐ.-ஆல் வேரூன்ற உதவும்.

சீரான வாடகை வருவாய்

சீரான வாடகை வருவாய்

இந்தியாவில் சொத்தின் மீது முதலீடு செய்வதால், சீரான வாடகை வருவாயை அறுவடை செய்ய என்.ஆர்.ஐ.-களுக்கு உதவும். பல இள வயது என்.ஆர்.ஐ.-கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்கி, அவற்றை வாடகைக்கு விட்டு பணம் பார்ப்பதன் மூலம் சாமர்த்தியமான முதலீட்டைச் செய்கின்றனர். இந்தியாவில் உழைக்கும் மக்களின் கூட்டம் வளர்ச்சியடைவதால் ரியல் எஸ்டேட் முதலீட்டை வாடகைக்கு விடுவதில் மிகவும் விருப்பத்தைக்க நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது இந்தியா.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை

இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை அதிவேக வளர்ச்சியடைந்துள்ளது. குஷ்மேன் அண்ட் வேக்பீல்ட்டின் ஒரு அறிக்கையின் படி, 2020-ம் ஆண்டில் இந்தியாவின் சொத்து சந்தையின் மதிப்பு $180 மில்லியனாக இருக்கும்.

இத்தகையை வருங்கால வாய்ப்புகளைக் காண்பதால், இள என்.ஆர்.ஐ-கள் நீண்ட கால சொத்தாக, இங்குச் சொத்துக்களை வாங்கிப்போட விரும்புகின்றனர்.

 

இலாபகரமான தேர்வு

இலாபகரமான தேர்வு

இந்திய ரியல் எஸ்டேட் பல்வேறு இள வயது என்.ஆர்.ஐ-களை ஈர்ப்பதற்கு மிகப்பெரிய காரணமாக இருப்பது சொத்துக்களை வாங்கக்கூடிய இயலும் நிலையில் இருப்பது.

செலாவணிகளின் மதிப்பில் வேறுபாடுகளின் காரணமாக, இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது இலாபகரமான தேர்வாகி விட்டது.

 

என்.ஆர்.ஐ.-களின் முதலீடு அதிகரித்துள்ளது

என்.ஆர்.ஐ.-களின் முதலீடு அதிகரித்துள்ளது

மேலும், என்.ஆர்.ஐ.-யை மையப்படுத்திய திட்டங்கள் மற்றும் இயலும் நிலையை அதிகமாக வளர்ப்பதில் டெவலப்பர்கள் தங்களின் கவனத்தை அதிகரித்துள்ளதால், இள வயது என்.ஆர்.ஐ.-களின் முதலீடும் அதிகரித்துள்ளது. 18 முதல் 35 வயதிலான இரட்டை வருமான என்.ஆர்.ஐ. குடும்பங்களும் கூட இந்திய சொத்துக்களில் அதிகமாக முதலீடு செய்கின்றனர்.

அதிக என்.ஆர்.ஐ முதலீடு எதிர்பார்க்கலாம்

அதிக என்.ஆர்.ஐ முதலீடு எதிர்பார்க்கலாம்

பொருளாதாரத்தைப் புதுப்பிக்கும் நோக்கில், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்பும் என்.ஆர்.ஐ.-களுக்காக முதலீட்டுத் தேர்வுகளை அதிகரிக்கக் கொள்கைகளையும் திட்டங்களையும் நம் அரசாங்கம் வகுத்துள்ளது.

அரசாங்கத்தின் இத்தகையை முயற்சிகளால், அதிக என்.ஆர்.ஐ.-கள் இங்கு முதலீடு செய்வதை நாம் எதிர்பார்க்கலாம்.

 

இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்

இலவசமாக வருமான வரி தாக்கல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Young NRIs Invest More In Indian Realty?

Despite a stagnant phase that might have affected it, India’s real estate remains a favorite investment destination for Non-Resident Indians (NRI).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X