ரூ.24,000 கோடி மதிப்பிலான ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் 24,374 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாட்டின் அதிக வர்த்தக வாய்ப்புகள் வழித்தடங்கள் அமைக்கவும், மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள 24,374 கோடி ரூபாய் தொகையை 9 திட்டங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,937.38 கிலோமீட்டர் தொலைவிலான ரயில் தடம் அமைக்கப்பட உள்ளது. புதிதாக அமைக்கப்படும் ரயில் தடங்கள் 9 மாநிலங்களில் உள்ளடக்கியது.

இதேபோல் ரியல்வே திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பொருளாதார விவகார துறையின் நாடாளுமன்ற அமைப்பு 1,120 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கான மதிப்பீட்டை 5,193 கோடி ரூபாயில் இருந்து 6,461 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இத்திட்டம் கர்நாடகா, ஒடிஷா, பிகார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில்வே திட்டங்கள் அனைத்தும் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் அல்லாமல் இப்புதிய ரியல் திட்டங்கள் இந்திய ரயில்வே துறையின் சரக்குப் போக்குவரத்தை மையமாக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cabinet green-lights ₹24,000-cr rail projects

The Cabinet Committee on Economic Affairs on Wednesday approved ₹24,374 crore of rail projects that will give a major boost to transport infrastructure by de-congesting key routes.
Story first published: Thursday, August 25, 2016, 11:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X