இந்தியாவின் டாப் 10 மீடியாக்களில் முக்கிய இடத்தில் சன் நெட்வொர்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. ஒளிபரப்பில் புதிய தொழில்நுட்பங்களின் எழுச்சி ஆகியவை முற்றிலும் இந்தத் தொழிலை மாற்றியுள்ளது.

ஹாலிவுட்டிற்கு பிறகு அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதும் இந்தியாவில் தான். நீண்ட தூரம் சேவைகள், ஃபைபர் ஆப்டிக் கேபிள் ஆபரேட்டர்கள் அடிப்படை சேவைகள் நுழைய அனுமதித்தது, போன்றவை நிச்சயமாக இந்தத் தொழிலில் சந்தை ஊடுருவல் அதிகரிக்க உதவியது.

ஜீ பொழுதுபோக்கு எண்டர்பிரைசஸ்

ஜீ பொழுதுபோக்கு எண்டர்பிரைசஸ்

இந்தியாவில் மீடியா, தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் ஜீ பொழுதுபோக்கு எண்டர்பிரைசஸ் ஆகும்.

1982 ஆம் வருடம் முதல் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம் அதற்கு முன்பு ஜீ டெலிஃபிலிம்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது. உலகளவில் இந்தியில் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது மற்றும் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது.

3,000 திரைப்படங்களுக்கு மேல் தொலைக்காட்சி சேட்டிலைட் உரிமையை வங்கி வைத்திருக்கும் இந்நிறுவனம் உலகளவில் 1 பில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

ஜீ தமிழ், ஜீ டிவி, ஜீ சினிமா என 33 சேனல்களுடன் இயங்கி வரும் இந்நிறுவனம் 1998-ஆம் ஆண்டு முதல் ஜீ சினி அவர்ட்ஸ் நிகழ்ச்சியைத் துவங்கியது.

1999 முதல் 2000 ஆண்டு வரை பல நிறுவனங்களைக் கையகப்படுத்தியது மற்றும் இணைந்து தற்போது இந்தியாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக உருவாகி உள்ள ஜீ நிறுவனத்தின் சென்ற நிதி ஆண்டின் லாபம் 2851 கோடி ரூபாய், மொத்த வருவாய் 5426.18 கோடிகள்.

 

சன் நெட்வொர்க்

சன் நெட்வொர்க்

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனம் சன் நெட்வொர்க் ஆகும். 20 பிரபல டிவி சேனல்கள், 41 எஃப்எம் வானொலி சேனல்கள், 2 தின சரி செய்தித்தாள்கள், 4 வாரப் பத்திரிக்கைகள் எனப் பல இந்திய மொழிகளில் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

உலகளவில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, தென் ஆப்ரிக்கா, என 27 நாடுகளில் தனது தொலைக்காட்சி சேவைகளை அளித்து வரும் இந்நிறுவனம் 33 சேனல்களுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாகத் தென் இந்திய மொழிகளில் தனது பெரும்பாலான பிரபல சேனல்களைக் கொண்ட இந்நிறுவனம் 95 மில்லியன் பார்வையாளர்களுடன் இந்தியாவின் இரண்டாம் பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

முதன் முதலாக 2003 ஆண்டு வானொலி சேவையை அளிக்கத் துவங்கிய இந்நிறுவனம் வட இந்தியாவின் ரெட் எஃப்எம் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது வரை தன்னிடம் 45 எஃப்எம் வானொலி செவைக்கான உரிமங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் சென்ற வருட லாபம் 913.38 கோடி ரூபாய், மொத்த வருவாய் 2243.62 கோடி ரூபாய்.

 

டிபி கார்ப்

டிபி கார்ப்

தைனிக் பாஸ்கர், திவ்ய பாஸ்கர், தைனிக் திவ்யா மராத்தி, வணிக பாஸ்கர், டி.பி. ஸ்டார், டி.பி. கோல்ட், டிஎன்ஏ (வாக்குரிமை அடிப்படையில்) மற்றும் சவுராஷ்டிரா சமாச்சார் போன்ற பத்திரிக்கை சேவையை அளித்து வரும் நிறுவனம் டிபி கார்ப்.

1995 ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஓர் மணி நேரத்தில் 1.94 மில்லியன் பிரதிகளை அச்சிடக் கூடிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

ஜெய்ப்பூர், அகமதாபாத், இந்தூர், போப்பால் என 17 நகரங்களில் தனது பத்திரிக்கை சேவையை அளித்து வரும் இந்நிறுவனம் 2009 கோடி ரூபாய் வருவாயுடன் 316.98 கோடி லாபம் பெற்று இயங்கி வருகிறது.

 

ஜாக்ரன் பிரகாசன்

ஜாக்ரன் பிரகாசன்

ஜாக்ரன் பிரகாசன் நிறுவனம் 1975 ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம் அதிகமாகப் புத்தகம் வெளியீட்டாளர் வணிக செய்துவருகிறது.

இதழ்கள், பத்திரிகைகள் மற்றும் தொடர்புடைய மேலும் பல ஊடக வணிகங்கள் போன்றவற்றை செய்து வரும் இந்நிறுவனம் கான்பூர் மற்றும் கோரக்பூரில் தைனிக் ஜாக்ரன் என்ற தினசரி செய்தித்தாள் நிறுவனத்தை நடத்தி வருகிறது.

2007 ஆம் ஆண்டு யாஹூ நிறுவனத்துடன் இனைந்து கூட்டு முயற்சியாக இணைய தள செய்தி சேவையை அளித்து வந்தது. பின்னர் நெட்வொர்க் 18 நிறுவனத்துடன் இணைந்து 50:50 கூட்டு முயற்சியாக்கப் பத்திரிக்கை அச்சிடும் பனியை செய்து வந்தது.

இதே போல சுவி இன்ஃபோ, நை துனியா போன்ற மீடியா நிறுவனங்களிலும் இனைந்து தனது சேவையை அளித்து வரும் இந்த நிறுவனம் 223.55 கோடி லாபம், 1616 .69 கோடி வருவாயும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

எச்டி மீடியா

எச்டி மீடியா

இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரிய அச்சு ஊடகம் என்றால் அது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் பெறும்.

லைவ்மிண்ட் ஃபினான்ஸ் இணையதள சேவை, வெர்ஜின் ரேடியோவுடன் இணைந்து ஃபேவர் 104 எஃப்எம் சேவை போன்றவற்றை வழங்கி வரும் இந்நிறுவனம் ஆண்டுக்கு 113.67 கோடி லாபமும், வருவாய் 1436.56 கோடி ரூபாய் ஆகும்.

 

என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (இந்தியா) லிமிடெட் (ENIL)

என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (இந்தியா) லிமிடெட் (ENIL)

இந்தியாவின் மிகப் பிரபலமான என்டர்டெயின்மென்ட் மீடியாவில் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் இந்தியா நெட்வொர்க்கும் ஒன்று ஆகும்.

இந்நிறுவனம் மிகப் பிரபலமாக அனைவரும் அறிவதற்காகக் காரணம் ரேடியோ மிர்ச்சி வானொலி சேவை ஆகும். அது மாட்டும் இல்லாமல் 360 டிகிரி, டைம்ஸ் அவுட் ஆஃப் ஹோம் மீடியா போன்ற மீடியா செவைகளையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது.

1999 ஆம் ஆண்டு டைம்ஸ் இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்தின் கீழ் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் கீழ் இப்போது 32 நகரங்களில் 108 எஃப்எம் அலைவரிசை சேவையை அளிக்கிறது.

இந்நிறுவனம் 438.48 கோடி வருவாயுடன் 105.97 கோடி மொத்த லாபம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ட்வி டுடே நெட்வொர்க்

ட்வி டுடே நெட்வொர்க்

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் செய்தி சேனல் நடத்தி வரும் டிவி டுடே நெட்வொர்க் 1999 டிசம்பர் 28-ம் தேதி துவங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து முதல் 24 மணி நேர இந்தி நியூஸ் சேவையை அளித்தது வருகிறது இந்நிறுவனம்.

ஆஜ் தக், ஹெட்லைன்ஸ் டுடே இரண்டுமே இந்நிறுவனத்தின் மிகப் பிரபல சேனல்களாகும்.

ஓய் 104.8 எஃப்எம் என்ற வானொலி சேவையையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. 474.70 கோடி வருவாயுடன் மொத்த லாபமாக 81.03 கோடி இந்நிறுவனம் பெற்று 8 வது இடத்தில் உள்ளது.

 

டிவி 18 பிராட்காஸ்ட் லிமிடெட்

டிவி 18 பிராட்காஸ்ட் லிமிடெட்

ஐபிஎன்18 என்ற செய்தி சேனலை நடத்தி இந்நிறுவனம் ஒலிபரப்பு, ஒளிபரப்பு, ரிலேயிங் மற்றும் பொது செய்தி சேவை ஒளிபரப்பை அளிக்கிறது.

இந்நிறுவனம் சிஎன்என் ஐபிஎன், ஐபிஎன்7 என்ற 24 மணி நேர செய்தி சேவையை அளிக்கிறது. 2008 ஆம் ஆண்டும் வெப்18 நிறுவனப் பங்குகளை இந்நிறுவனம் வாஅங்கியது. வையாகாம்18 மீடியா, ஜாக்ரன் டிவி, பிகே ஃபின்கேப் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு முயற்சி ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பிவிஆர்

பிவிஆர்

பிவிஆர் லிமிடெட் இந்தியாவின் புகழ்பெற்ற மல்டிபிளக்ஸ் சினிமா கண்காட்சி நிறுவனம் ஆகும்.

1995 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 500-க்கும் மேற்பட்ட திரை அரங்குகளுடன் இயங்கி வருகிறது. இந்தியாவின் முதல் மல்டிபிளக்ஸ் சினிமா சேவை அறிமுகப்படுத்தியது இந்நிறுவனத்தின் பெருமையாகும்.

சினிமா தயாரிப்பது போன்ற தொழில்களில் ஈட்டுப்பட்டு வந்தாளும் சினிமா திரையிடுதல் மற்றும் உணவு மற்றும் பானங்கள் வழங்குவதையே முதன்மை தொழிலாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் 1383.98 கோடி ரூபாய் வருவாயில் மொத்த லாபம் 13.62 கோடி ரூபாயாகும்.

 

ஹாத்வே கேபிள் மற்றும் டேட்டாகாம்

ஹாத்வே கேபிள் மற்றும் டேட்டாகாம்

140 நகரங்களுக்கும் மேலாக கேபிள் டிவி மற்றும் இணையதள சேவை அளித்து வரும் இந்நிறுவனம் 8.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும், 2.3 மில்லியன் இணையதள சேவை வாடிக்கையாளர்களையும் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையின் படி 1831.60 கோடி ரூபாய் மொத்த வருவாய் இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஏர்செல்

ஏர்செல்

ஏர்செல் நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!ஏர்செல் நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Media and Broadcasting Companies in India

Top 10 Media and Broadcasting Companies in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X