ஜீ நிறுவனத்தின் டென் ஸ்போர்ட்ஸ் சேனலை ரூ.2,600 கோடிக்கு வாங்குகிறது சோனி பிக்சர்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது விளையாட்டு ஒளிபரப்பு வணிகத்தை 2,600 கோடி ரூபாய்க்கு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விற்கப் போவதாக அறிவித்துள்ளது.

கிரிக்கெட் மற்றும் கால் பந்து

கிரிக்கெட் மற்றும் கால் பந்து

தென் ஆப்ரிக்கா, பாக்கிஸ்தான், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளில் டென் ஸ்போர்ட்ஸ் பல முக்கிய கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றுள்ளது.

அது மட்டும் இல்லாபல் யூஈஎஃப்ஏ சாம்ப்பியன்ஸ் லீக், யூரோபா லீக், பிரஞ்சு லீக் மற்றும் இங்கிலிஷ் கால்பந்து கோப்பை போன்ற போட்டிகளை ஒலிபரப்பும் உரிமையையும் பெற்றுள்ளது.

 

தலைமை செயல் அதிகாரி என்.பி.சிங் கருத்து

தலைமை செயல் அதிகாரி என்.பி.சிங் கருத்து

சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்.பி.சிங் இது பற்றி கூறும்போது டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் கிரிக்கெட், கால் பந்து, சண்டை விளையாட்டுகள் எனப் பல உள்நாட்டு, வெளிநாட்டு விளையாட்டுகளை ஒலிபரப்பி தங்களது பலத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் மற்றும் ஃபிஃபா 2018

ஐபிஎல் மற்றும் ஃபிஃபா 2018

சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் பணம் குவியும் இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ளது அது மட்டும் அல்லாமல் இப்போது 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்க இருக்கும் ஃபிஃபா உலக கோப்பைப் போட்டியை ஒளிபரப்பும் உரிமையையும் பெற்றுள்ளது.

ஆய்வாளர்கள் கருத்து

ஆய்வாளர்கள் கருத்து

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பற்றி ஆய்வாளர்கள் கூறும் போது கடந்த சில வருடங்களாக ஸ்போர்ட்ஸ் பிரிவில் நட்டத்தைப் பெற்று வந்ததால் இப்பிரிவை மட்டும் இந்நிறுவனம் விற்கிறது என்றும் வரும் நிதி ஆண்டுகளில் லாபம் இல்லாமல் இயங்கி வந்த பிரிவை விற்றதால் வர்த்தகத்தில் மேலும் வளர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளனர்.

37.2 கோடி ரூபாய் நட்டம்

37.2 கோடி ரூபாய் நட்டம்

ஜீ ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு வணிகத்தில் ஆண்டுக்கு 631 கோடி வருவாய் இருந்தாலும் 37.2 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்குவதாக இந்நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sony Pictures To Buy Ten Sports From Zee Entertainment

Sony Pictures To Buy Ten Sports From Zee Entertainment For Rs 2,600 Crore
Story first published: Wednesday, August 31, 2016, 19:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X