'ஜியோ' உருவாக இதுதான் உண்மையான காரணம்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 2,50,000 கோடி ரூபாய் முதலீடு செய்து இவ்வளவு பெரிய நிறுவனத்தை துவக்க என்ன காரணம் தெரியுமா..? முழுமையாக சுயநலத்துடன் உருவாக்கப்பட்ட நிறுவனம் 'ஜியோ'.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 5 வருடங்களுக்கு முன்பு 1 ரூபாய் கூடக் கடன் இல்லாமல் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இருப்புடன் சிறப்பான வர்த்தக நிலையில் இருந்தது.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பிளாஸ்டிக், பாலிமர் உற்பத்தியை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இயங்கி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டெலிகாம் துறையில் 1,34,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் எதற்காக ஜியோ நிறுவனத்தை உருவாக்க வேண்டும்..?! இதில் அப்படி என்ன இருக்கிறது.?! என்பது தான் அனைத்தரப்பினரின் தற்போதைய கேள்வி.

தற்போது இதற்கு முழுமையான விடை கிடைத்துள்ளது.!

<strong>(ஒன்றறை லட்சம் கோடியில்லை, 2.5 லட்சம் கோடி போட்டிருக்கோம்: 'ஜியோ' குறித்து மனம்திறக்கும் முகேஷ் அம்பானி..!)</strong>(ஒன்றறை லட்சம் கோடியில்லை, 2.5 லட்சம் கோடி போட்டிருக்கோம்: 'ஜியோ' குறித்து மனம்திறக்கும் முகேஷ் அம்பானி..!)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் மிக முக்கியமான ஒன்று ரிலையன்ஸ் சாம்ராஜியம். இக்குழுமத்தின் தலைவர் திருபாய் அம்பானியின் மறைவிற்குப் பின் இரு பரிவுகளாகப் பிரிந்தது ரிலையன்ஸ்.

இதில் திருபாய் அம்பானியின் மூத்த பிள்ளையான முகேஷ் அம்பானி கையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முதல் பிளாஸ்டிக் உற்பத்தி வரையிலான வர்த்தகம் வந்தது.

 

 

எதற்காக இப்படி ஒரு ரிஸ்க்..?!

எதற்காக இப்படி ஒரு ரிஸ்க்..?!

2,000 கோடி ரூபாய் நிதி இருப்பில் மிகவும் செழிப்பான நிலையில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது லாப அளவுகளைக் குறைத்து, வர்த்தகச் சரிவை சந்திக்கும் நிலையில் எதற்காக 1.34 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து இப்படியொரு நிறுவனத்தை உருவாகியது என்பதே மக்கள் மத்தியில் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது. காரணம் ஜியோ-வின் அதிரடியான இலவசங்கள்.

துவக்கம்..

துவக்கம்..

6 வருடங்களுக்கு முன்பு இன்போடெல் பிராட்பேண்ட் நிறுவனத்தில் 95 சதவீத முதலீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கத் துவங்கியது. இதன் பின்னர் இந்த நிறுவனத்திலும், டெலிகாம் பிரிவிலும் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியது ரிலையன்ஸ்.

இதன் விளைவாகவே தற்போது இந்தியா முழுக்க ஜியோ மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வாடிக்கையாளரும்.. வருமானமும்..

வாடிக்கையாளரும்.. வருமானமும்..

தற்போது இந்நிறுவனத்தில் இருக்கும் 8 கோடி முதல் 10 கோடி வரையிலான வாடிக்கையாளர் கூட்டம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 180 ரூபாய் வருமானம் அளிக்கிறது. அடுத்த 2-3 வருடங்களில் இந்த வருமானத்தின் அளவு கண்டிப்பாக இரண்டு மடங்கு உயரும் என்பது உறுதி.

கணக்கு..

கணக்கு..

தோராயக் கணக்கு: 8 கோடி வாடிக்கையாளர் X 180 ரூபாய்
மாத வருமானம்: 1,440 கோடி ரூபாய்
வருடத்திற்கு: 17,280 கோடி ரூபாய்

2 வருடங்களுக்குப் பின்: குறைந்தபட்சம் 3,000 கோடி ரூபாய் மாத வருமானம்.

இதுதான் காரணம் காரணமா..? இல்லை..

 

சந்தையும் வளர்ச்சியும்..

சந்தையும் வளர்ச்சியும்..

வளரும் நாடுகளில் பலதுறை நிறுவனங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ச்சி அடையாமல் சரிவை நோக்கி பயணம் செய்யத் துவங்குகிறது. காரணம் உள்நாட்டில் இந்த நிறுவனம் போதுமான வளர்ச்சியை எட்டியிருக்கும். (வெளிநாட்டுச் சந்தையில் வெற்றி பெற முடியாமல் முடங்கிப் போயிருக்கும்)இத்தகைய சூழ்நிலையில் இந்த நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தை நோக்கி தனது புதிய பயணத்தைத் துவங்கும். இதுவே கடந்த 40 வருடச் சர்வதேச சந்தையில் நிறுவனங்களின் கதை.

இத்தகைய பயணத்தைத் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துவங்கியுள்ளது.

 

சந்தையில் ரிலையன்ஸ்..

சந்தையில் ரிலையன்ஸ்..

கடந்த 7 வருட வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்தகளின் பங்குகள் இந்திய சந்தையில் ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டது. (இனிமேல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லை என்பதன் எதிரொலி).

இத்தகைய சூழ்நிலையில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் வர்த்தகத்தில் தனது கால்தடத்தைப் பதித்தது. ஆனால் அதிலும் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் இறங்கவில்லை என்பது மிகவும் சோகமான விஷயம்.

 

வேறு வழி தெரியவில்லை..

வேறு வழி தெரியவில்லை..

ரிடைல் வர்த்தகத்தில் போதுமான வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற முயற்சி செய்து வரும் சூழ்நிலையில் தான் டெலிகாம் துறை முகேஷ் அம்பானியின் கண்களில் பட்டது.

ரிஸ்க் என்றாலும் பாதாளத்தில் வழும் அளவிற்கு ரிஸ்க் இல்லை என்பதை நீங்கள் மேலே போடப்பட்ட சிறிய கணக்கில் பார்த்திருக்கலாம். இதனை முன்னிறுத்தியே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் துறையில் இறங்கியுள்ளது.

 

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

ஒரு நிறுவனம் தனது வர்த்தகப் பிரிவுகளை அதிகளவில் பிரிந்து வெற்றி பெறும்போது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள், பங்குதாரர்களின் முதலீட்டின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயரும்.

உதாரணமாக

உதாரணமாக

பிளாக்பெர்ரி, நோக்கியா போன்ற வர்த்தகச் சாம்ராஜியங்கள் டெலிகாம் துறையில் மட்டும் இருந்த காரணத்தில் மட்டுமே தோல்வியை அடைந்துள்ளது.

இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டாஸ் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு வருடத்திற்கு முன்பு தனது தயாரிப்பை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

வெற்றி பெற்ற நிறுவனங்கள்

வெற்றி பெற்ற நிறுவனங்கள்

ஒரு மிகப்பெரிய நிறுவனம் முழுமையான வரிவாக்கம், வருவாய் அடைந்த நிலையில் கண்டிப்பாகப் பிற துறையில் தனது வர்த்தகத்தைக் கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் சந்தையில் நிலைத்திருக்க முடியாது என்பதற்கு

உதாரணம்

உதாரணம்

ஜெனரல் எலக்ட்ரிக் கோ வெறும் டியூப் லைட் தயாரிப்பில் இருந்த இந்நிறுவனம் தற்போது உலகச் சந்தையில் சுமார் 700 பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

வால்ட் டிஸ்னி வெறும் பேப்பர் கார்டூனான சந்தைக்கு வந்து தற்போது அனிமேஷன், டிவி, பார்க், ரெஸார்ட், க்ரூஸ், ரியல் எஸ்டேட், போன்ற பல துறைகளில் உள்ளது.

இந்தியாவில் ஐடிசி, டாடா குழுமங்கள் மிகப்பெரிய உதாரணமாகும்.

 

8 வருடம்

8 வருடம்

<strong>ஓரே அறிவிப்பில் 8 வருடத்தை முழுங்கிவிட்டார் முகேஷ் அம்பானி..!</strong>ஓரே அறிவிப்பில் 8 வருடத்தை முழுங்கிவிட்டார் முகேஷ் அம்பானி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JIO created on 1.34 lakhs crore Investment: Biggest risk taken by Mukesh Ambani RIL tamil rockers

JIO created on 1.34 lakhs core investment by reliance industries. Biggest risk taken by RIL chief Mukesh Ambani in a decade. - Tamil GoodReturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X