ஜியோவின் மூத்த நிர்வாகி பவன் யாதவ் திடீர் ராஜினாமா: அதிர்ச்சியில் உறைந்த ரிலையன்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் பொது வைஃபை பிரிவின் தலைவராக இரண்டு ஆண்டாகச் செயல்பட்டு வந்த பவன் எஸ் யாதவ் திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.

ஜியோ நிறுவனம் கருத்து

ஜியோ நிறுவனம் கருத்து

பவன் எஸ் யாதவ் ஜியோ வைஃபை சேவையை 18 முதல் 20 பேர் கொண்ட குழுவுடன் நாடு முழுவதும் செயல்படுத்தும் பணியைச் செய்து வந்தார். இவருடைய ராஜினாமா குறித்து இதுவரை ஜியோ நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

1 மில்லியன் வைஃபை

1 மில்லியன் வைஃபை

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குக் குரல் மற்றும் டேட்டா சேவைகளை செப்டம்பர் மாதம் முதல் அளித்துவருகிறது. அதுமட்டும் இல்லாமல் வைஃபை சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.

2017 ஆண் ஆண்டு அரை இறுதிக்குள் 1 மில்லியன் வைஃபை சாதனங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

இதற்காக இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்களிடம் ஜியோ நிறுவனம் தங்களது ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு மாணவர்களுக்கான இணையதள சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

யாதவ் ராஜினாமாவை அடுத்து

யாதவ் ராஜினாமாவை அடுத்து

இது மாதிரியான பொது வைஃபை திட்டங்களை செயல்படுத்துவதில் பவன் எஸ் யாதவ் கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டும் இல்லாமல் ஜியோ நிறுவன தயாரிப்புகளை வைஃபை மூலமாகப் பிரபலப்படுத்துவது, வணிக செயல்முறைகள் மற்றும் செயலிகள் உருவாக்குவது போன்றவற்றிலும் உதவி செய்து வந்துள்ளார்.

இவருடைய இந்த திடீர் ராஜினாமாவை அடுத்து ஜியோவின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் அல்லது ஐடியாவில் சேரலாம் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ril Jio's public wifi head senior executive Pawan Yadav quits

Reliance Jio's public wifi head senior executive Pawan Yadav quits job
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X