'தங்கம்': நீங்கள் கேள்விப்படாத உண்மைகள் சில..!

By Siva lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகில் தங்கத்தை விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? குறிப்பாக இந்திய பெண்கள் தங்கத்திற்கு அடிமை என்றே கூறலாம். இதில் சில சதவீத ஆண்களும் அடக்கம்.

 

பொதுவாகத் தங்கம் என்றாலே அணிகலன், சேமிப்பு என்ற வகையில் மட்டுமே அதன் பயன்பாடு நமக்கு இதுவரை தெரியும். ஆனால் அதையும் தாண்டி தங்கத்தினால் பல நன்மைகளும் தீமைகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ தங்கம் குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்படாத உண்மைகள்

தங்கம் சாப்பிடுவது நல்லதா?

தங்கம் சாப்பிடுவது நல்லதா?

தங்கம் அணிவதால் நமது உடலுக்கு எவ்வித நன்மையையும் அளிப்பதில்லை. மாறாக உங்கள் செரிமான சக்தியைக் குறைக்கின்றது. ஒருசிலர் தங்கத்தை உணவாக உட்கொண்டால் நல்லது என்று கூறுவார்கள்/ ஆனால் அதில் சிறிதும் உண்மையில்லை. வல்லுனர்களும் இதைப் பரிந்துரை செய்வதில்லை.

ஆரோஃபோபியா:

ஆரோஃபோபியா:

ஒரு சிலருக்கு தங்கம் என்றாலே அலர்ஜியாக இருக்கும். தங்க நகைகளை அணியும் அவர்களுக்குள் ஒரு இனம் புரியாத பயம் வரும். இவ்வகையான நோய்க்கு ஆரோஃபோபியா என்று பெயர். மேலும் இதனால் குமட்டல், தலைச்சுற்றல், பயம் குறித்த நோய்கள் ஆகியவை தாக்கும் அபாயங்களும் உண்டு.

தங்க ஏ.டி.எம் இருக்குது தெரியுமா?
 

தங்க ஏ.டி.எம் இருக்குது தெரியுமா?

இந்தியாவில் உள்ள அனைவரும் ஏ.டி.எம் மெஷின் மூலம் தங்கள் பணம் பெற்றுத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் துபாயில் ஏ.டி.எம் மிஷினில் இருந்து 10 கிராம் தங்கக்கட்டி வரும். தங்கக் கட்டிகளை அந்நாட்டு மக்கள் ஏ.டி.எம் மிஷினில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர்.

தங்கத் தோடு இதற்கும் உதவுமா?

தங்கத் தோடு இதற்கும் உதவுமா?

ஐரோப்பாவில் கடலில் பயணம் செய்யும் மாலுமிகள் அனைவரும் தவறாமல் தங்கத்தோடு அணிவார்கள். இது பேஷனுக்காக அல்ல, கடலில் பயணம் செய்யும்போது இறந்துவிட்டால் அந்தத் தோடு அவர்களுடைய கிறித்துவர்கள் முறை உடல் அடக்கத்திற்குப் பெரிதும் உதவும் என்பதுதான் முக்கிய காரணம்

ஒலிம்பிக் மெடலில் உண்மையில் இருப்பது தங்கமா?

ஒலிம்பிக் மெடலில் உண்மையில் இருப்பது தங்கமா?

ஒலிம்பிக்கில் கோல்ட் மெடல் வாங்கிவிட்டால் ஒரு நாட்டின் ஹீரோ போன்று பெருமை அடைவது உண்டு. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கும் தங்க மெடலில் உண்மையில் தங்கம் 1% தான் உள்ளது. மீதியுள்ள 99% சில்வர் மற்றும் காப்பார்தான் உள்ளது. கடைசியாக முழுவதும் தங்கத்தினால் கோல்ட் மெடல் கொடுத்தது 1912ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கைப்பேசியிலும் தங்கம் இருக்குது தெரியுமா?

கைப்பேசியிலும் தங்கம் இருக்குது தெரியுமா?

செல்போனில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் இருக்கின்றது. நீங்கள் 900 கிலோ பழைய செல்போனை கலெக்ட் செய்தால் உங்களுக்கு அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் கிடைக்கும். செல்போனினால் உலகில் உள்ள அனைவருக்கும் நான்கு கிலோ தங்கம் கிடைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

தங்கமும்.. மனிதர்களும்..

தங்கமும்.. மனிதர்களும்..

என்ன பாஸ் தங்கத்தை இதுவரை அடகு வைக்க மட்டுமே பயன்படுத்தினோமே, ஆனால் இவ்வளவு விஷயங்கள் தங்கத்தில் இருக்கின்றது என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா.

இருப்பினும் தங்கம் பல நூற்றாண்டுகளாக ஒருசிறந்த சேமிப்பாகவும், பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் தங்கம் போன்று மின்னும் பெண்களின் உடலை மேலும் ஜொலிக்க வைப்பதில் தங்கத்திற்கு ஈடு இணை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facts you dont know about gold

Facts you dont know about gold- Tamil Good returns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X