வருமான வரித்துறையின் ஐடிஎஸ் திட்டம் 'வெற்றி'.. 1,100 கோடி ரூபாய் 'வசூல்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வைரம் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்குப் பெயர்போன சூரத் நகரத்தில் மட்டும் இந்திய வருமான வரித்துறையினரின் ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட சுமார் 1,100 கோடி ரூபாய் வருமானம் கணக்கில் கொண்ட வரப்பட்டுள்ளது.

 

வருமான வரித்துறையின் கடந்த சில மாதங்களாகக் கருப்புப் பணம், வரி ஏய்ப்பு போன்ற நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைக்கும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வகைக்கும் விதமாகப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இதுவரை அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணம் சேர்த்த ஆசாமிகளுக்குக் கடைசி வாய்ப்பாக வருமான வரித்துறை Income Declaration Scheme (IDS) கீழ் சமர்ப்பிக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் செயல்பாடுகளின் ஒன்றாகேவே மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் நடந்த ஹோட்டல் மற்றும் ரோட்டுக்கடைகளில் செய்யப்பட்ட திடீர் ரெய்டு.

1,100 கோடி ரூபாய்

1,100 கோடி ரூபாய்

இந்நிலையில் வருமான வரித்துறையின் ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான காலத்தில் சுமார் 1,100 கோடி ரூபாய் வருமானம் குவிந்துள்ளதாக இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கியத் தொழிலதிபர்கள்

முக்கியத் தொழிலதிபர்கள்

6க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட், டெக்ஸ்டைல் வர்த்தகர்கள், டெக்ஸ்டைல் டையிங் மற்றும் பிரின்டிங் மில் நிறுவனங்கள் ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் தலா 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை இத்திட்டத்தின் கீழ் சமர்ப்பித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட்
 

ரியல் எஸ்டேட்

சூரத் பகுதியில் இருந்து ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 90 சதவீத வருமானங்கள் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தது எனவும், இத்துறையைத் தொடர்ந்து டெக்ஸ்டைல் வியாபாரிகள் மற்றும் மில் நிறுவனர்கள் அதிகளவில் வரி ஏய்ப்பு செய்த வருமானத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால் வைர வியாபாரிகளிடம் மிகவும் குறைந்த அளவிலான தொகையை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

 

புள்ளிவிபரம்

புள்ளிவிபரம்

பால், சரோலி மற்றும் மகோப் ஆகிய 3 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டும் சுமார் 67 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை இத்திடத்தின் கீழ் சமர்ப்பித்துள்ளது, டெக்ஸ்டைல் நிறுவனங்கள் 10 கோடி ரூபாய், டெக்ஸ்டைல் மின் தலைவர்கள் 1.50 கோடி ரூபாய், டெக்ஸ்டைல் குழுமங்கள் 3.50 கோடி ரூபாய், சில்லறை பங்கு முதலீட்டுப் பிரிவில் 18 கோடி ரூபாய் எனக் கணக்கில்காட்டப்படாத வருமானங்கள் குவிந்துள்ளது.

மேலும் சில்லறை பங்கு முதலீடு மூலம் 90 கோடி ரூபாய் வரையில் வருமானம் பெற்றுள்ளதாக வருமான அறிக்கைகள் தெரிவிக்கிறது.

 

செப்டம்பர் 30

செப்டம்பர் 30

ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை வரி ஏய்ப்பு, கருப்புப் பணமாக இருக்கும் வருமானங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT department gets Rs.1,100 crore through IDS from Surat

IT department gets Rs.1,100 crore through IDS from Surat- Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X