ஜிஎஸ்டி: 4 அடுக்கு வரி விதிப்பு.. ஆடம்பர பொருட்களுக்கு 26% வரி.. ஆடி கார், ஐபோன் விலை உயரலாம்..!

சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டாவது கூட்டம் இன்று நடைப்பெற்றுவருகிறது. இதில் உள்ள நிகழ்வுகள் மற்றும் சவால்கள் என்னவென்று தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கியமான மூன்று நாள் கூட்டம் செவ்வாய்க் கிழமை துவங்குகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் உடன் மாநில நிதி அமைச்சர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தின் மத்திய நிதிமையச்சகம் ஜிஎஸ்டி விரியில் 4 அடுக்கு விரி விதிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஆடம்பர சந்தையில் இருக்கும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பென்ஸ், ஆடி கார், ஐபோன் விற்பனைக்கான சந்தை குறையலாம்.

சிகரெட், உற்பத்தி பொருட்கள் என பிற முக்கிய பொருட்களுக்கும் மத்திய அரசு விரி விதிப்பை அறிவித்துள்ளது.

வரி விகிதம்

வரி விகிதம்

ஜிஎஸ்டி வரியில் வரி விகிதம் எவ்வளவு என்பது முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய விவாதமாகும்.

இதில் மாநிலங்களின் வருவாய் பாதிக்காத அளவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக இருத்தல் வேண்டும் என்பதே முக்கிய சவாலாகும்.

சேன்ற ஆண்டு தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மொத்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 17 முதல் 18 சதவீதம் வரியும், குறைந்த அளவான பொருட்கள் மற்றும் கொள்முதலுக்கு 12 சதவீத வரியும் ஆடம்பர பொருட்கள், குளிர்பானங்கள், பான் மசாலா மற்றும் புகை பொருட்களுக்கு 40 சதவீதம் வரியும், விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு 2 முதல் 6 சதவீதம் வரியும் விதிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருந்தார்.

ஜிஎஸ்டி வரியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு வரி அதிகமாக இருக்கும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேய்ட்லி சென்ற வாரம் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

 

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு

முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் ஜிஎஸ்டி வரி குறித்து ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே வைத்துள்ளதே என்றால் அது 18 சதவீதத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே. ஒரு வேலை அதிகப்படியான வரியை விதித்தால் காங்கிரஸ் கண்டிப்பாக இதை எதிர்க்கும்.

மாநில அரசுகள்

மாநில அரசுகள்

காங்கிரஸ் கட்சி அதிக வரி விதிக்கக் கூடாது என்று கூரும் நிலையில் மாநில அரசுகள் இதை 20 சதவீதத்திற்கு மேலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக ஜிஎஸ்டி வரியினால் 12 சதவீதம் வரை தங்களது வருவாய் பாதிக்கப்படும் என்று மாநில அரசுகள் கூறுகின்றன.

நடப்பு குழு கூட்டத்திலும் சரியான முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், மாநில அரசுகள் ஏற்க மறுத்தாலும், காங்கிரஸ் ஏற்க மறுத்தாலும் ஜிஎஸ்டி வரி இன்னும் நீண்ட கால தாமதத்தை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

 

இழப்பீடு சூத்திரம்

இழப்பீடு சூத்திரம்

முதலாவது ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் 3 முதல் 4 நான்கு மாற்றுச் சிந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் இது வரை எட்டப்படவில்லை.

மேலும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் மாநில அரசுக்கு முதல் ஐந்து வருடங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்கும், அதில் முதல் மூன்று வருடங்களுக்கு 100 சதவீதமும் பிறகு படிப் படியாகவும் குறைக்கப்படும்.

 

சேவை வரி மதிப்பீடு

சேவை வரி மதிப்பீடு

மத்திய அரசு புதிய பகிர்ந்தளிப்புகள் மூலம் 11 லட்சம் சேவை வரி தாக்கல் செய்பவர்களை இணைப்பது குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ய உள்ளது.

ஆனால் தமிழ்நாடு உட்பட சில மாநில அரசுகள் இதை ஏற்க மறுத்தும் வருகின்றன.

 

முக்கிய கூட்டம்

முக்கிய கூட்டம்

இந்தக் கூட்டம் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்பட காரணம் மத்திய அரசு 2017 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டி வரியை அமலுக்குக் கொண்ட வர இருப்பதால் இன்னும் உள்ள ஐந்து மாதத்திற்குள் அதற்கான பணியை நிறைவு செய்ய வேண்டும்.

நிதி அமைச்சகம் நவம்பர் 22 ஆம் தேதிக்குள் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்று முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே தீர்க்கப்பட்ட சிக்கல்கள்

ஏற்கனவே தீர்க்கப்பட்ட சிக்கல்கள்

ஜிஎஸ்டி குழுவின் முதல் கூட்டத்தில் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மலை பிரதேசங்களுக்கான முடிவுகள் எடுக்கட்டது.

இதுவரை பதிவுசெய்தல், பணமளிப்பு சம்மதமான விதிகள், வறிதாக்கல் செய்தல், பணம் திரும்பப் பெறுதல், விபரபட்டியை போன்ற 6 சிக்கல்களை ஜிஎஸ்டி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST Council meeting starts today: All you need to know about the agenda, challenges

GST Council meeting starts today: All you need to know about the agenda, challenges
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X