ஒன்றறை லட்சம் கோடியில்லை, 2.5லட்சம் கோடி போட்டிருக்கோம்:'ஜியோ' குறித்து மனம்திறக்கும் முகேஷ் அம்பானி

இந்தியாவில் இருக்கும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கு ஓரே எதிரியான ஜியோ நிறுவனம் குறித்த ரகசியங்களை வெளிப்படையாக கூறுகிறார் முகேஷ் அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் ஜியோ என்ற புதிய தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் துவங்கியதில் இருந்தே பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்.

 

இந்நிலையில் தி பிரின்ட் ஏற்பாடு செய்திருந்த டெலிகாம் நிறுவனங்கள் மத்தியிலான கூட்டத்தில் முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனம் குறித்தும், தனது போட்டி நிறுவனங்கள் கொடுக்கும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் ஜியோ குறித்த பல கேள்விகளுக்கு அதிரடியாகப் பதில் அளித்துள்ளார்.

ஜியோ

ஜியோ

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைவர் முகேஷ் அம்பானி இந்நிறுவனம் சந்தித்த பிரச்சனைகளை விவரித்துள்ளார்.

பாயின்ட் ஆஃப் இண்டர்கனெக்ஷன்

பாயின்ட் ஆஃப் இண்டர்கனெக்ஷன்

ஜியோ நிறுவனம் துவங்கிய முதல் நாளில் இருந்தே போட்டி நிறுவனங்களிடம் இருந்து பாயின்ட் ஆஃப் இண்டர்கனெக்ஷன் பிரச்சனையைச் சந்தித்தோம், இதனால் ஏற்படும் நஷ்டத்தை நான் அல்லது எனது நிறுவனம் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது. ஆனால் இதனால் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று கூறினார்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

பாயின்ட் ஆஃப் இண்டர்கனெக்ஷன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜியோ டிராய் அமைப்பு மற்றும் டெலிகாம் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இப்பிரச்சனைக்குக் கூடிய விரைவில் முழுமையான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

 

முதலீடு..
 

முதலீடு..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்கரீஸ் நிறுவனம் புதிதாகத் துவங்கியுள்ள ஜியோ நிறுவனம் 1,50,000 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டது எனப் பலரும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தொகை 2,50,000 கோடி ரூபாய்.

இன்று சந்தையில் பணத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ஐடியாக்களுக்குத் தான் பஞ்சம், சொல்லப்போனால் ஒட்டுமொத்த உலகமே தற்போது புதிய ஐடியாக்கள் மூலம் நகரத் துவங்கியுள்ளது.

 

பந்தயம்

பந்தயம்

பொதுவாக நிதியியல் சந்தைகள் டெக்னாலஜி நிறுவனங்களைச் சரியாகக் கணிப்பதில்லை, உதாரணமாக ஆப்பிள், கூகிள் நிறுவனங்களின் துவக்கத்தின் போது நிதியியல் ஆய்வாளர்கள் மோசமான கருத்துக்களை அளித்தனர்.

ஜியோ நிறுவனத்தை யாரும் சந்தையில் நிலவும் பந்தயத்திற்காக உருவாக்கப்பட்டது என நினைக்க வேண்டாம். சரியான திட்டமிடலுடன் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது என முகேஷ் அம்பானி கூறினார்.

 

வருவாய் மற்றும் லாபங்கள்

வருவாய் மற்றும் லாபங்கள்

தற்போது இருக்கும் போட்டியில் முதலீட்டாளர்களுக்கு நிதியியல் வல்லுனர்களுக்குப் பல மாறுபட்ட கருத்துகள் இருக்கும், ஆனால் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளைப் பாருங்கள், ஜியோ எப்படிப்பட்ட நிறுவனம் என்று உங்களுக்குத் தெரியும்.

மொழிகள்

மொழிகள்

2018-19ஆம் ஆண்டில் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மட்டும் சுமார் 12 மொழிகளில் அனைத்து விதமான மேம்படுத்தப்பட்ட சேவைகளையும் அளிக்க உள்ளது. இதில் வீடியோ, செய்திகள், என அனைத்தும் அடக்கம்.

இண்டர்நெட் வேகம்

இண்டர்நெட் வேகம்

2010ஆம் இந்தியாவில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் இண்டர்நெட் வேகம் குறித்து ஈஷா அம்பானி பேசும்போது ஜியோ-வின் அவசியம் புரிந்தது. அதுமட்டும் அல்லாமல் வர்த்தகத் திட்டம், சந்தையில் பிற நிறுவனங்கள் செயல்படும் முறையை ஆகாஷ் அம்பானி பேசும்போது ஜியோ உருவாக்கும் உறுதியானது.

இப்படித் தான் ஜியோ சரியான திட்டத்துடனும், திட்டமிடல் உடன் உருவானது.

 

ஜியோயோயோயோ...!

ஜியோயோயோயோ...!

<strong>15% ஊதிய உயர்வு.. ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'முகேஷ் அம்பானி'..!</strong>15% ஊதிய உயர்வு.. ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'முகேஷ் அம்பானி'..!

<strong>ரிலையன்ஸ் 'ஜியோ' உருவாக இதுதான் காரணமாம்.. முகேஷ் அம்பானி கலக்கல்..!</strong>ரிலையன்ஸ் 'ஜியோ' உருவாக இதுதான் காரணமாம்.. முகேஷ் அம்பானி கலக்கல்..!

<strong>முகேஷ் அம்பானி வாயால் கெட்டது 'ஏர்டெல்'.. ரூ.13,800 கோடி ஊ.. ஊ..!</strong>முகேஷ் அம்பானி வாயால் கெட்டது 'ஏர்டெல்'.. ரூ.13,800 கோடி ஊ.. ஊ..!


 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani sharing secrets of RIL newly incumbent JIO

Mukesh Ambani sharing secrets of RIL newly incumbent JIO - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X