சவுதி அரேபியா-வின் ஆதிக்கத்தைப் பதம் பார்க்கும் இந்தியா-ரஷ்யா டீல்..!

இந்திய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் புதிய துவக்கம். ரஷ்யா உடன் கூட்டணியால் இனி சவுதி அரேபியா-வை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவல நிலை இல்லை.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுனமான எஸ்ஸார் நிறுவனத்தை, ரஷ்யா ரோஸ்நெப்ட் நிறுவனம் சுமார் 13 பில்லியன் டாலருக்குக் கைப்பற்ற உள்ளது.

 

இதன் மூலம் இந்தியாவில் எப்போதும் குறையாத வர்த்தகம் சந்தை கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்ய நிறுவனம் புகுந்து விளையாடப் போகிறது.

இந்த டீல் மூலம் இந்தியா எப்போதும், மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் அவல நிலை இனி இல்லை.

13 பில்லியன் டாலர்

13 பில்லியன் டாலர்

இந்தியாவில் அன்னிய முதலீட்டு மூலம் கையகப்படுத்தப்பட்ட மிகப்பெரிய நிறுவனம் இது.

இந்த ஒப்பந்தத்தில் எஸ்ஸார் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் இந்திய சந்தையின் 49 சதவீத பங்குகளை ரஷ்யா ரோஸ்நெப்ட் நிறுவனமும், மீதமுள்ள 51 சதவீத பங்குகளில் 49 சதவீத பங்குகளை யுனைடெட் கேபிடெல் பார்ட்னர்ஸ் (மாஸ்கோ) மற்றும் ரஷ்யா டிராபிஜூரா (நெதர்லாந்து) ஆகியவை இணைந்து வாங்குகிறது.

 

2040ஆம் ஆண்டு

2040ஆம் ஆண்டு

இந்தியாவின் தொடர் தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் 2040ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிகக் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் நாடாக இந்தியா உருவெடுக்கும் எனச் சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய அளவில் இந்தியா சுமார் 80 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தேவையை இறக்குமதியின் மூலம் பூர்த்திச் செய்து வருகிறது.

 

இறக்குமதி
 

இறக்குமதி

இந்தியா தனது பெட்ரோல், டீசல் தேவைக்குக் கச்சா எண்ணெய்-ஐ வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை அதிகளவில் நம்பியுள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு சரியான வாய்ப்புகளை எதிர்பார்த்து இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் தான் எஸ்ஸார் குழுமத்தின் இந்திய வர்த்தகத்தை வாங்க முன்வந்தது.

 

இந்தியா-ரஷ்யா

இந்தியா-ரஷ்யா

இந்தியாவிற்குப் பல முக்கியமான கட்டங்களில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் மத்தியிலான நட்புறவு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் அவ்வளவு முக்கியமானது.

எஸ்ஸார் நிறுவனத்தில் ரஷ்யா-வின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வர்த்தக நிறுவனமான ரோஸ்நெப்ட் முதலீடு செய்துள்ளதால், இனி ரஷ்யாவில் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும்.

எப்படியும் வெளிச் சந்தையில் இருந்து தான் வங்குகிறோம். ரஷ்யாவிடம் இருந்து வாங்கினால் என்ன. இதன் மூலம் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் புதிய அத்தியாயம் துவக்க உள்ளது.

 

இந்திய வர்த்தகம்

இந்திய வர்த்தகம்

இந்தியாவில் எஸ்ஸார் நிறுவனத்திற்குச் சொந்தமாகச் சுமார் 2,700 பெட்ரோல் பங்குகள் உள்ளது, இதனை முழுவதும் ரோஸ்நெப்ட் கையில் மாறப்போகிறது. அனைத்திற்கும் மேலாக ரோஸ்நெப்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் இருக்கும் 1.8 பில்லியன் மக்களிடம் வியாபாரம் செய்யும் புதிய சந்தை கிடைத்துள்ளது.

25 வருடம்

25 வருடம்


இந்தியா, ரஷ்யா நாட்டை முன்னிறுத்தி அனைத்து வர்த்தகம் மற்றும் உற்பத்தி திட்டங்களை வகுத்து வருவதால் அடுத்த 25 வருடத்திற்கு ரஷ்யாவின் வர்த்தக வளர்ச்சிக்கும் இந்தியா மிகப்பெரிய பங்காற்றும் என் ஹாங்காங் நாட்டு முன்னணி முதலீட்டு நிறுவனத்தின் ஆய்வாளர் கூறியுள்ளார்.

ஈரான் மற்றும் சவுதி அரேபியா

ஈரான் மற்றும் சவுதி அரேபியா

இதில் என்ன ஆச்சரியம் என்றால் எஸ்ஸார் நிறுவனத்தை வாங்க எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பழம்திண்று கொட்டைப் போட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் ஆஃபர்களையும் தாண்டி ரஷ்ய நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது எஸ்ஸார்.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

ஆசிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் சவுதி அரேபியா நாட்டிற்கு இந்தியா-ரஷ்யா மத்தியிலான இந்த டீல் மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

நிதிநெருக்கடி

நிதிநெருக்கடி

ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை குறைவால் சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் மிகப்பெரிய அளவிலான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் இவ்வேளையில் சவுதி அரேபியா இது மிகவும் சோகமான செய்தி.

ரோஸ்நெப்ட்

ரோஸ்நெப்ட்

ரஷ்யா நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமானது ரோஸ்நெப்ட், இந்நிறுவனத்தில் தனியார் முதலீட்டாளர்கள் தலையீடு இருந்தாலும் இதில் ரஷ்ய அரசின் முதலீடும் ஆதிக்கமும் மிகவும் அதிகம்.

இறக்குமதி

இறக்குமதி

இந்த வர்த்தக விற்பனை ஒப்பந்த்தின் மூலம் ரஷ்ய நிறுவனம் அடுத்த 10 வருடத்தில் 10 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை தனது வெனிசூலா நாட்டுக் கிளையில் இருந்து எஸ்ஸார் விதினார் சுத்திகரிப்பு நிறுவனத்திற்குச் சப்ளை செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஆயுத ஒப்பந்தம்

ஆயுத ஒப்பந்தம்

சமீபத்தில் கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யா மத்தியில் 50 பில்லியன் டாலர் அதாவது ரூ.33,000 கோடி மதிப்புடைய எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டு உள்ளது.

எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் திட்டத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் 2015ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - சீனா எல்லை

பாகிஸ்தான் - சீனா எல்லை

தற்போது வாங்கப்படும் ஏவுகணைகளை நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சீனா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் வைக்க இந்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

 

 

சவுதியும்.. மக்களும்..

சவுதியும்.. மக்களும்..

சவுதி அரேபியா: வர்த்தக சந்தையை காப்பாற்ற 20 பில்லியன் ரியால் முதலீடு..!சவுதி அரேபியா: வர்த்தக சந்தையை காப்பாற்ற 20 பில்லியன் ரியால் முதலீடு..!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Essar india - Rosneft deal: End of Saudi supremacy in Asian oil trading

Essar india - Rosneft deal: End of Saudi supremacy in Asian oil trading
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X