பாபா ராம்தேவ்-விற்கு சவால் விடும் 'மலையாளி'.. சபாஷ் சரியான போட்டி..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக 'சுதேசி ஜீன்ஸ்' தயாரிக்கும் திட்டத்தை தொடக்குவதாக அறிவித்தார். அவருடைய அறிவிப்பு சுதேசி ஆர்வலர்களைப் புருவம் உயர்த்தச் செய்தது.

 

எனினும் சுதேதி ஜீன்ஸ் ஆர்வலர்கள் குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டும். ஏனெனில் பாபா ராம்தேவின் சுதேசி ஜீன்ஸ், சந்தைக்கு வருவதற்குக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும்.

நீங்கள் பாபா ராம்தேவின் சுதேசி ஜீன்ஸிற்காக காத்திருக்கத் தயாராக இல்லை எனில், நீங்கள் 'தேசி டூயுட்', என்கிற இந்திய பிராண்ட் ஜீன்ஸை முயற்சித்துப் பார்க்கலாம். இது ஒரு இந்திய தயாரிப்பு ஆகும். மேலும் இது ஒரு தூய கைத்தறி கதர் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படும் ஒரு சுதேசி ஜீன்ஸ் ஆகும்.

'கதர் மனிதன்'

'கதர் மனிதன்'

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட, தேசி டூயுட், சித்தார்த் மோகன் நாயர் என்பவரின் சிந்தனையில் உருவான ஒரு சுசேசி சிந்தனை ஆகும். சித்தார்த் மோகன் நாயர் , கேரளாவில் வசிக்கும் ஒரு எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டதாரி ஆவார்.

இது எவ்வாறு தொடங்கியது?

இது எவ்வாறு தொடங்கியது?

ஒரு காதி ஆர்வலரான சித்தார்த், தனக்கு இந்த யோசனை எதேச்சையாகத் தோன்றியது எனத் தெரிவிக்கின்றார். முன்னதாக அவர் இந்த ஆண்டு மும்பையில் நடந்த ஒரு கண்காட்சியில் அதைப் பற்றி கேள்விப்பட்டபின் தனக்கு சுதேசி ஜீன்ஸ் தயாரிக்கும் யோசனை தோன்றியதாக தெரிவிக்கின்றார்.

அதன் பின்னர் அவர் தொழில் அதிபராக உருவெடுத்தார். சுயதொழில் பற்றி தனக்கு எந்த ஒரு முன் அனுபவம் இல்லை என்றாலும் தான் துணிந்து தொழில் துவங்க முடிவெடுத்ததாக அவர் மேலும் தெரிவிக்கின்றார். தன்னுடைய பிராண்ட் ரூ 30,000 கடன் வாங்கித் தொடங்கப்பட்டது என்று அவர் கூறுகின்றார்.

 

'சுதேசி ஜீன்ஸ்'
 

'சுதேசி ஜீன்ஸ்'

டெனிம் மூலப்பொருள் காதி சங்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதற்குப் பின்னர் அந்தத் துணி பலமுறை துவைக்கப்படுகின்றது. இதன் மூலம் மூலப் பொருட்களின் இயல்பான குணமாகிய வண்ணம் இழப்பு, சுருங்குதல் போன்றவை உறுதி செய்யப்படுகின்றது. டெனிம் துணியின் வண்ணம் மற்றும் சுருங்கும் தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஜீன்ஸாக தைக்கப்படுகின்றது.

லோகோ கூட காதியில்

லோகோ கூட காதியில்

ஜீன்ஸின் லோகோ கூட காதியில் உருவாக்கப்படுகின்றது. அதற்கு தோல் உபயோகிக்கப்படுவதில்லை.
அவர் இந்த ஜீன்ஸை தூய கதர் பொருளால் உருவான பொருளாகச் செய்வதற்கு, லோகோ உட்பட பல்வேறு நுண்ணிய விபரங்களைக் கவனித்து சரி செய்கின்றார்.

மற்ற ஜீன்ஸ் போல் அல்லாமல் தேசி டூயுட் லோகோ இயற்கை சாயம் கொண்டு காதி துணியில் அச்சிடப்படுகிறது. இதற்கு தோல் பயன்படுத்துவதில்லை.

 

தனித்த

தனித்த "சுதேசி 'பேக்கேஜிங்

இந்த ஜீன்ஸின் பேக்கேஜிங் கூட தனிப்பட்ட முறையில் உள்ளது. பேக்கிங்கிற்கு பருத்தி பொருட்கள் உபயோகிக்கப் படுகின்றது. இந்தப் பருத்தி பொருட்கள் ஆந்திராவில் உள்ள கிராமப்புற பெண்களால் தைக்கப்படுகின்றது. அது அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகின்றது.

தேசி டுயூட்ன் சமூகப் பொறுப்பு இத்துடன் நின்று விடவில்லை. அவர்கள் விற்கும் ஒவ்வொரு ஜீன்ஸிற்கு சமமான எண்ணிக்கையில் அவர்கள் மரக்கன்று நடுகின்றார்கள்.

 

இந்திய தன்மையை தக்கவைத்தல்

இந்திய தன்மையை தக்கவைத்தல்

சித்தார்த்திற்கு இந்தியத்தன்மை மீது காதல் அதிகம். அதை அவருடைய பிராண்ட்டுடன் இணைந்து வெளிப்படுத்தியதுடன், அவருடைய ஜீன்ஸ்களின் அனைத்து ஆர்டர்களையும் இந்திய போஸ்ட் மூலமே அனுப்பி வருவதாக தெரிவிக்கின்றார். பிற தனியார் கூரியர் சேவை நிறுவங்கள் மலிவான விலையில் சேவை வழங்க முன் வந்த போதிலும் தான் எப்பொழுதும் இந்தியா போஸ்ட் மூலமே ஆர்டர்களை அனுப்பி வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

தேசி டுயூட் ஏற்கனவே மக்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கி விட்டது

தேசி டுயூட் ஏற்கனவே மக்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கி விட்டது

சித்தார்த், "தேசி டுயூட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் எனக்கு நேர்மறையான பதில்களே கிடைக்கின்றன. மக்களுக்கு முதலில் ஜீன்ஸின் தரத்தைப் பற்றி சந்தேகம் எழுந்தாலும், பிறகு அவர்கள் மத்தியில் தேசி டுயூட் பற்றிய ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது" எனத் தெரிவிக்கின்றார்.

எனினும் அவர் ஜீன்ஸின் விலை சற்று அதிகமாக சுமார் ரூ 3500 க்கு அருகில் உள்ளதை ஏற்றுக்கொள்கிறார்.

இந்தச் சிறப்பு கதர் டெனிம் பொருள் மற்றும் உற்பத்தி செயல்முறை கைகள் கொண்டு செய்யப்படுவதன் காரணமாக விலை சற்று அதிகமாக இருக்கின்றது என அவர் கூறுகின்றார்.

இது சாத்தியமான வாடிக்கையாளர்களைத் தடுக்கவில்லை. அவர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை வளர்ந்து வருகிறது என்று அவர் கூறுகின்றார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This Kerala man beats Baba Ramdev in ‘Swadeshi’ jeans race

This Kerala man beats Baba Ramdev in ‘Swadeshi’ jeans race
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X