டாடா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ‘சைரஸ் மிஸ்ட்ரி’அதிரடியாக நீக்கப்பட்டார்..!

ரத்தன் என் டாடா இடைக்கால தலைவர் பொறுப்பு ஏற்பார் என்று நிர்வாக குழு கூறியுள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான முடிவு இன்று நடைபெற்ற நிர்வாகத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இடைக்கால தலைவர் யார்?

இடைக்கால தலைவர் யார்?

மேலும் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் வரை ரத்தன் என் டாடா இடைக்கால தலைவர் பொறுப்பு ஏற்பார் என்று நிர்வாக குழு கூறியுள்ளது.

புதிய தலைவர் எப்போது? கூட்டத்தில் யாரெல்லாம் பங்கேற்றவர்கள்?

புதிய தலைவர் எப்போது? கூட்டத்தில் யாரெல்லாம் பங்கேற்றவர்கள்?

இன்னும் நான்கு மாதங்களில் இந்தக் குழு புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

டாடா குழுமத்தின் அடிப்படையின் படி ரத்தன் என் டாடா, வேணு சீனிவாசன், அமித் சந்திரா, ரோனன் சென் மற்றும் இறைவன் குமார் பட்டாச்சார்யா ஆகியோ இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

 

சைரஸ் மிஸ்ட்ரியும் டாடாவும்
 

சைரஸ் மிஸ்ட்ரியும் டாடாவும்

2006 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் துணை தலைவர் பொறுப்பில் டாடா நிறுவனத்தில் தனது பயணத்தைத் துவங்கிய சைரஸ் மிஸ்ட்ரி 2011 ஆம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்றார்.

டாடா நிறுவனம் மிஸ்ட்ரியை பணி நீக்கம் செய்ததற்கு பெரிய காரணம் ஏதும் இல்லை என்றும் ஐரோப்பாவில் உள்ள கான்ளோமெர்டே ஸ்டீல் வணிகம் போன்றவற்றில் ஏற்பட்ட லாபம் இழப்பு போன்றவற்றால் நிறுவனத்திற்குப் பெறும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவரது பணியில் நிர்வாகம் வறுத்ததை அடைந்தது என்றும் கூறப்படுகிறது.

 

சிக்கலில் உள்ள டாடா

சிக்கலில் உள்ள டாடா

டாடா குழுமம் ஜப்பானின் டோகோமோ நிறுவனத்துடன் வெளியேறுவதில் உள்ள சட்டப் பிரச்சனைக்காக பெறும் சிக்கலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்மையில் நடந்த ஒரு பேட்டியில் மிஸ்ட்ரி பங்கேற்கும் போது சிக்கலான நேரத்தில் துணிந்து முடிவுகளை எடுக்க நிர்வாகம் தயங்குவதில்லை என்று கூறியிருந்தார்.

 

சைரஸ் மிஸ்ட்ரியின் கல்வித் தகுதி

சைரஸ் மிஸ்ட்ரியின் கல்வித் தகுதி

1968 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்த சைரஸ் மிஸ்ட்ரி லண்டனில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் பட்டத்தைப் பெற்றார் அதைத் தொடர்ந்து லண்டன் பிசினஸ் பள்ளியில் இருந்து மேலாண்மை முதுநிலை பட்டம் பெற்றவர் ஆவார்.

மேலும் படிக்க:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பேஸ்புக் நிறுவனத்தை ஏன் வாங்க முடியவில்லை என்று தெரியுமா..?மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பேஸ்புக் நிறுவனத்தை ஏன் வாங்க முடியவில்லை என்று தெரியுமா..?

சவரன் தங்க பத்திரம் வாங்க ஆஃபர் கொடுக்கும் மத்திய அரசு..!சவரன் தங்க பத்திரம் வாங்க ஆஃபர் கொடுக்கும் மத்திய அரசு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cyrus Mistry steps down as Tata Sons Chairman

Cyrus Mistry steps down as Tata Sons Chairman
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X