ஜிஎஸ்டி மூலம் உணவு பொருட்கள் விலை உயரும்; டிவி, ஏசி போன்றவை விலை குறையும்..!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி)மத்திய அரசு 2017 ஏப்ரல் 1 முதல் அமலுக்குக் கொண்டு வர இருக்கிறது. இதற்கான கூட்டத்தில் மத்திய அரசு 4 அடுக்காக வரி விகிதத்தைக் கட்டமைத்துள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பின் 4 அடுக்கு வரி விதிப்பினால் சாமானிய மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களான சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், சிக்கன் போன்றவற்றின் விலை உயர வாய்ப்பு.

அதே நேரத்தில் டிவி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரங்கள் போன்ற நுகர்வோர் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி

மறைமுக வரி ஆட்சிக்கான ஒரு நாடு ஒரு வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி)மத்திய அரசு 2017 ஏப்ரல் 1 முதல் அமலுக்குக் கொண்டு வர இருக்கிறது. இதற்கான கூட்டத்தில் மத்திய அரசு 4 அடுக்காக வரி விகிதத்தைக் கட்டமைத்துள்ளது.

குறைந்தபட்சம், அதிகபட்சம்

குறைந்தபட்சம், அதிகபட்சம்

ஜிஎஸ்டியில் குறைந்த பட்சம் 6 சதவீதம் வரியும், அதற்கு அடுத்த நிலையில் 12 மற்றும் 18 சதவீதம் வரி விகிதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிகபட்சமாக எப்எம்சிஜி மற்றும் நுகர்வோர் சாதனங்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செஸ் வரி

செஸ் வரி

விவசாயம் மற்றும் கல்விக்கான செஸ் வரியைப் போன்று சுற்றுபறச் சூழலைப் பாதிக்கும் பொருட்கள் மற்றும் புகைப் பொருட்கள் போன்றவற்றின் மீதும் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது.

6 சதவீத வரி

6 சதவீத வரி

வாடிக்கையாளர் பணவீக்கத்தின் படி மத்திய அரசு விதிக்க இருக்கும் நான்கு அடுக்கு வரி விகித அமைப்பின் மதிப்பீடுகளினால் சிக்கன் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்க்கு இப்போது உள்ள 4 சதவீத வரி 6 சதவீதமாக விதிக்கப்படலாம்.

ரீபைண்ட் ஆயில், கடுகு எண்ணெய் மற்றும் கடலை எண்ணை மீதான 5 சதவீத வரி 6 சதவீதமாக உயர்த்தப்படும்.

பிற சமையலறை உணவுப் பொருட்களான மஞ்சள் மற்றும் சீரகம் போன்றவற்றுக்கு இப்போது 3 சதவீதமும், தனியா, மிளகு, எண்ணெய் விதைகள் போன்றவற்றுக்கு உள்ள 5 சதவீத வரி 6 சதவீதமாக மாற்றப்படலாம்.

 

26 சதவீத வரி

26 சதவீத வரி

தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், இன்வெர்ட்டர்கள், குளிர்பதன பெட்டிகள், மின்சார விசிறிகள் மற்றும் சமையல் உபகரணங்கள் போன்றவற்றுக்கு இப்போது உள்ள 29 சதவீத வரி 26 சதவீதமாகக் குறைக்கும் போது இந்தப் பொருட்களின் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளது.

வாசனைத் திரவியங்கள், ஷேவிங் கிரீம், பவுடர், முடி எண்ணெய், ஷாம்பு, சோப்பு, மற்றும் பிற குளியல் அறை பொருட்களுக்கு இப்போது உள்ள 29 சதவீத வரி 26 சதவீதமாக குறையும் போது விலை குறைய வாய்ப்புள்ளது.

கேஸ் அடுப்பு, பர்னர், கொசு வத்தி போன்ற பொருட்களுக்கு 25 சதவீதம் வரி இப்போது பெறும் நிலையில் இதனை 26 சதவீதமாக மாற்ற வாய்ப்புள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST May Make Oil, Chicken Dearer; TV, Air Conditioner Cheaper

GST May Make Oil, Chicken Dearer; TV, Air Conditioner Cheaper
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X