'டொனால்டு டிரம்ப்' வெற்றி வாய்ப்பு 'அதிகமாம்'.. சோகத்தில் மூழ்கியது ஐடி நிறுவனங்கள்.. என்ன காரணம்..?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில், தற்போது அதிபராக இருக்கும் பாரக் ஓபாமா-வின் பதவிக் காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைவதால், அடுத்த அதிபர் பதவிக்கான போட்டி அனல் பறக்கிறது.

 

எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை அமெரிக்க அதிபர் பதிவியைப் பிடிக்க வேட்பாளர்கள் மத்தியில் போட்டி அதிகமாக உள்ளது.

இந்த முறையில் களத்தில் முன்னணி இடத்தில் இருப்பது டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன். அதிபர் போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து நடைபெற்று வரும் நேருக்குநேர் விவாதத்தில் அவர்களின் உண்மையான முகம் வெளிச்சத்திற்குத் தற்போது வந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய வாக்கெடுப்பில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் ஆடிப்போயுள்ளது.! அப்படி என்னாச்சு..!

முக்கிய கட்சிகள்

முக்கிய கட்சிகள்

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் Democratic கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், Republican கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபரான பராக் ஓபாமா Democratic கட்சியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நேருக்குநேர் விவாதம்

நேருக்குநேர் விவாதம்

அமெரிக்காவில் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்து நடக்கும் அதிபர் வேட்பாளர்கள் மத்தியிலான நேருக்குநேர் விவாதம், மக்கள் மத்தியில் அதிகளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ஹிலாரி கிளிண்டன் மீதான பார்வை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது.

இந்த மாற்றத்தின் எதிரொலி தான் வாக்கெடுப்பில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்.

 

வாக்கெடுப்பு..
 

வாக்கெடுப்பு..

ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய வாக்கெடுப்பில் டொனால்டு டிரம்புக்கு 46 சதவீதம், ஹிலாரி கிளிண்டன்-க்கு 45 சதவீதமும் வாக்குகள் விழுந்துள்ளது.

1 சதவீதம்தானே என்று நீங்கள் கேட்கலாம், துவக்கம் முதலே மிகக் குறைவான வித்தியாசத்தில் முன்னணி வகித்துவரும் ஹிலாரி கிளிண்டன் முதல் முறையாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

 

வெற்றி..

வெற்றி..

அமெரிக்கச் செய்தி நிறுவனங்களின் வாக்கெடுப்பு மூலம் நவம்பர் 8ஆம் தேதி நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இதனால் அதிகம் பாதித்தக்கப்படப் போதுவது இந்தியா ஐடித்துறை தான் எப்படி.

 

கட்சிகளும்.. இந்தியாவும்..

கட்சிகளும்.. இந்தியாவும்..

பொதுவாக Democratic கட்சிக்கும் இந்தியாவிற்கும் நல்ல நட்புறவு மற்றும் வர்த்தக இணைப்பு உண்டு, இதன் மூலம் 8 வருடம் First ladyயாகவும், 8 வருடம் அமெரிக்கச் சென்னேடராகவும், 4 வருட மாநில செயலாளராகப் பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெறால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள நட்பில் தொய்வு இருக்காது.

ஆனால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் இருக்கும். ஆச்சரியமாக உள்ளதா..? உண்மைதான்.

 

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

ஆனால் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களைப் பற்றியும், தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் Republican கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் குண்டு சட்டிக்குள் இருந்த குதிரை வெளியில் ஓடத் துவங்கும்.

டொனால்டு டிரம் பேச்சு..!

டொனால்டு டிரம் பேச்சு..!

டொனால்டு டிரம்ப் தான் பேசும் ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்பவராகத் திகழ்வார்.

அந்த வகையில் தனது பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் இழந்த வேலைவாய்ப்புகளைக் குடியரசு கட்சியின் ஆட்சியில் அமெரிக்கா கண்டிப்பாக மீட்டு அமெரிக்கக் குடிமக்களுக்குத் திருப்பி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

 

இந்தியர்களும்.. ஐடி துறையும்..

இந்தியர்களும்.. ஐடி துறையும்..

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் பணிபுரியும் பிற நாட்டவர்களை ( இந்தியர்களை) பணியில் துரத்திவிட்டு அமெரிக்கர்களையும், ஆப்ரிக்கா அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்பதே அவர் கருத்துக்குப் பின்னால் இருக்கும் முழுமையான விளக்கம்.

அமெரிக்காவில் பணிபுரியும் அதிகளவிலான இந்தியர்கள் ஐடித்துறையைச் சார்ந்தவர்கள் என்பது நாம் அறிந்த ஒன்று.

 

அமெரிக்கர்கள் ஆதரவு

அமெரிக்கர்கள் ஆதரவு

அமெரிக்காவில் பணிபுரியும் பிற நாட்டவர்களை வெளியேற்றிய பின், இப்பணியிடங்களில் அமெரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே இவரின் முக்கியத் திட்டமாகத் தனது பிரச்சாரத்தின் துவக்கம் முதல் கூறிவருகிறார்.

இதனால் அமெரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

முக்கிய நாடுகள்

முக்கிய நாடுகள்

சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளிடம் நாம் இழந்த மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளைக் கண்டிப்பாக மீட்க வேண்டும் இதனாலேயே ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் தன்னை அதிகளவில் ஆதரிப்பதாகவும் டொனால்டு டிரம்ப் சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை டொனால்டு டிரம்பு ஒரு பக்கம் துரத்த.. மற்றொரு பக்கம் விசா பிரச்சனை துரத்துகிறது.

 

வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

அமெரிக்காவில் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பல அமெரிக்க ஊழியர்களை வெளியேற்றிவிட்டுக் குறைவாகச் சம்பளம் வாங்கும் இந்தியர்களை நியமிக்கப்பட்டனர். இதனால் அமெரிக்காவில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது.

பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள், தங்களது செலவுகளைக் குறைக்கக் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களை உலக நாடுகளில் இருந்து பெறும்.

இதற்கு முடிவு கட்ட புதிய மசோதா வந்தது..!

 

புதிய மசோதா

புதிய மசோதா

அமெரிக்காவில் 2 செனேட்டர்கள் ஹெச்-1பி விசாவை இனி ஊதிய அடிப்படையிலான அமைப்பில் மட்டுமே வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதற்கான ஒப்புதல்களை நெல்சன் மற்றும் ஜெஃப் தலைமையிலான ஆலோசனை கூட்டம் அளித்து.

இந்த மசோவின் பாதிப்பு என்ன..?

 

பாதிப்பு..

பாதிப்பு..

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனுவின் படி 85,000 விசாக்களில் முதல் 15,000 விசாக்களை அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் அளிக்க வேண்டும் எனவும், மீதமுள்ள 70,000 விசாக்களையும் அதிக ஊதிய அடிப்படையில் வழங்க வேண்டும் எனச் செனேட்டார்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய முறையின் மூலம் அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு எளிதாக அமெரிக்க ஹெச்-1பி விசா கிடைப்பது மட்டும் அல்லாமல், அவுட்சோர்சிங் நிறுவனங்களால் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களை, அமெரிக்க நிறுவனங்களில் நியமிக்க முடியாது. மேலும் அமெரிக்கா வரும் பிற நாட்டவர்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கு இணையான சம்பளத்தைப் பெறுவார்கள் எனவும் இந்த மனு விவரிக்கிறது.

 

 

விசா கட்டணம் உயர்வு

விசா கட்டணம் உயர்வு

2016ஆம் ஆண்டுத் துவக்கத்தில் 1.1 டிரில்லியன் டாலர் செலவினத் திட்டத்தில், அமெரிக்கக் காங்கிரஸ் அளித்த மனுவின் படி ஹெச்-1பி விசா கட்டணத்தை 4,000 டாலராகவும், எல்-1 விசாவிற்கான கட்டணத்தை 4,500 டாலராகவும் உயர்ந்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

இதையும் தாண்டி அடிவாங்குகிறது இந்திய ஐடி நிறுவனங்கள். எப்படி..?

 

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

அமெரிக்கச் சந்தையில் வங்கி, நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் தொழில்நுட்ப சேவைகளுக்காகச் செலவிடும் தொகையைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

இதனால் அடுத்தச் சில மாதங்களுக்கு இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் பாதிப்புண்டாகும்.

 

BFSI பிரிவு

BFSI பிரிவு

அமெரிக்கச் சந்தையின் மூலம் இந்தியா ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவது வங்கி, நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் சேவை (BFSI) பிரிவின் வாயிலாகத் தான். அதிலும் டிசிஎஸ் நிறுவனம் மிகவும் அதிகளவிலான அமெரிக்க நிறுவனங்கள், மாநில அரசுகளுக்கான வரி வசூல், நிதி பரிமாற்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே வளர்ச்சியில் பாதிப்பு உண்டாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்

டிரம்ப்

நவம்பர் 8ஆம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் டிரம்ப் வெற்றி பெற்றால் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இதனைக் கருத்தில் கொண்டு தான் அமெரிக்க நிறுவனங்கள் தற்காலிமாகச் செலவுகளை நிறுத்தியுள்ளது என்று சந்தையில் கருத்து நிலவுகிறது.

 

தடை..!

தடை..!

ஹெச்-1பி விசா பெற 20 நிறுவனங்களுக்குத் தடை.. அமெரிக்க அரசு அதிரடி..!ஹெச்-1பி விசா பெற 20 நிறுவனங்களுக்குத் தடை.. அமெரிக்க அரசு அதிரடி..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Will Trump's Win Do Damage To The Indian IT Industry?

Will Trump's Win Do Damage To The Indian IT Industry? - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X