'மோடி' அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இவங்க மட்டும் 'எஸ்கேப்'..!

மோடி அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் தடையினால் மக்கள் அனைவரும் வங்கி மற்றும் ஏடிஎம் வாசலில் தவம்கிடக்கும் நிலையில், எப்படி இவங்க மட்டும் 'எஸ்கேப்' ஆக முடியும். யார் இவங்க..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவம்பர் 9ஆம் தேதி முதல் இந்தியாவில் சரிபாதி மக்கள் தினமும் ஏடிஎம் மற்றும் வங்கி வாசலில் நின்றுகொண்டு இருக்கின்றனர். காரணம் இந்தியாவில் அதிகளவில் புழக்கத்தில் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை.

 

இத்தகைய பாதிப்புகள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த நிலையில் இன்போசிஸ், பிளிப்கார்ட், மஹிந்திரா போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டும் இதில் எஸ்கேப் ஆனார்கள்.

எப்படி..? வாங்க பார்ப்போம்.

எம்என்சி நிறுவனங்கள்

எம்என்சி நிறுவனங்கள்

பொதுவாக இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்திலும் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்தியாவில் சராசரி பட்டதாரிகளின் சம்பளத்தை விடவும் சற்று அதிகம். இவர்களிடம் இருக்கும் பணத்தின் அளவும் அதிகம்.

இந்நிலையில் தற்போதும் மக்கள் மத்தியில் நிலவும் பணத் தட்டுப்பாடு பிரச்சனை தனது ஊழியர்களையும் பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பல முக்கியப் பணிகளைச் செய்துள்ளது இந்த நிறுவனங்கள்

 

வங்கிகளுடன் கூட்டு..

வங்கிகளுடன் கூட்டு..

நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்குச் சேவை அளிக்கும் பொருட்டு அவர்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுடன் இணைந்து ஹெல்ப் டெஸ்க் அமைத்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் புதிதாக ஏடிஎம் இயந்திரங்கள், தற்காலிக பணம் எடுக்கும் சேவை என அசத்தியுள்ளது.

 

நிறுவனங்கள்
 

நிறுவனங்கள்

ஊழியர்களுக்குச் சிறப்பான சேவை அளித்த நிறுவனங்களில் இன்போசிஸ், பிளிப்கார்ட், மேக்மைடிரிப், யாத்ரா, மஹிந்திரா & மஹிந்திரா, காட்ரிஜ், EY, வோடபோன், எரிக்சன் இந்தியா, சாயோஸ் மற்றும் மாரிகோ ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சம்பளம்

சம்பளம்

மேலும் நிறுவனத்தில் மாத கடைசியை எட்டியுள்ளதால் ஊழியர்களுக்குச் சம்பளம் அளிப்பதிலும் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் மாத சம்பளத்தை ஊழியர்கள் விருப்பத்தின் வங்கி கணக்கில் அல்லது மொபைல் வேலெட் வாயிலாக அளிக்கவும் சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

இது கார்ப்பரேட் ஊழியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் கூறுகின்றனர்.

 

காட்ரிஜ் முதல் இன்போசிஸ் வரை

காட்ரிஜ் முதல் இன்போசிஸ் வரை

நவம்பர் 10ஆம் தேதி முதல் காட்ரிஜ் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து 2000 ரூபாய் நோட்டுகளை அளிக்கும் புதிய ஏடிஎம் இயந்திரங்களைத் தனது அலுவலகத்தில் நிறுவியுள்ளது. இதனுடன் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஹெல்ப் டெஸ்க் அமைத்துள்ளது.

இதே போன்று, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

 

சாயோஸ்

சாயோஸ்

ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்ட சாயோஸ் என்னும் தொடர் சங்கிலி டீ கடைகள் தனது ஊழியர்களை ஸ்மார்ட் கார்டு, டிஜிட்டல் வேலெட்-ஐ பயன்படுத்த வழியுறுத்தி வருகிறது.

மேக் மை டிரிப்

மேக் மை டிரிப்

அனைத்திற்கும் ஒரு படி மேலாக மேக்மைடிரிப் நிறுவனம் தனது ஊழியர்களின் ஒரு மாத போக்குவரத்து செலவுகளை நிறுவனமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

பேடிஎம் சேவை

பேடிஎம் சேவை

எம்என்சி நிறுவனங்கள் முதல் அனைத்துக் கடைகளிலும் கடந்த சில நாட்களாகப் பேடிஎம் நிறுவனத்தின் மொபைல் பேமெண்டு சேவைப் பயன்படுத்தப்படுகிறது.

ஏடிஎம்

ஏடிஎம்

இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, காட்ரிஜ் போன்ற முன்னணி நிறுவனங்களில் இருக்கும் ஏடிஎம் நிறுவனங்களில் தொடர்ந்து பணம் நிரப்பப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதில் நிறுவனத்திற்கு என்ன லாபம்..?

இதில் நிறுவனத்திற்கு என்ன லாபம்..?

தினசரி செலவுகளுக்குக் கூடப் பணம் இல்லாமல் தவிக்கும் மக்கள் மத்தியில் ஊழியர்கள் அனைவரும் வங்கி, ஏடிஎம் எனச் சென்றுவிட்டால் தனது வார்த்தகம் அதிகளவில் பாதிக்கப்படும். இத்தகைய மோசமான சூழ்நிலையைச் சமாளிக்கவே கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்தகைய சேவையை அளிக்கிறது.

ஆனால் இன்றளவும் வங்கி செல்வதற்காக ஊழியர்கள் விடுமுறை கேட்டால் விடுமுறை அளிக்க நிறுவனங்கள் மறுப்பதில்லை.

 

14 லட்சம் கோடி ரூபாய்

14 லட்சம் கோடி ரூபாய்

இந்திய பொருளாதாரம் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் இயங்கிய வருகிறது. திடீரென ஒரே இரவில் இதைப் பயன்படுத்த தடை என்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையால் இதுவரை சுமார் 55 பேர் இறந்துள்ளனர்.

 

சரியான வழி

சரியான வழி

கார்ப்பரேட் மற்றும் அதிக ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பளத்தில் ஒரு பகுதியை பணமாகவும், மற்றொரு பகுதியை வங்கி கணக்கில் செலுத்தலாம். இதனால் பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் பணத் தட்டுப்பாடு குறையும்.

எஞ்சியுள்ள பணத்தைக் கிராமங்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்றால் அடுத்த ஒரு வாரத்திற்குள் இப்பிரச்சனை முழுமையாகத் தீர்க்கப்படலாம்.

 

 வாசகர் கருத்து

வாசகர் கருத்து

உங்கள் நிறுவனத்தில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகளைப் பற்றி நீங்கள் கருத்துப் பதிவிடலாம்.

மேலும் இந்தியாவில், உங்கள் ஊரில் நிலவி வரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க சிறந்த வழி ஏதேனும் இருந்தால் கூட நீங்கள் தெரிவிக்கலாம்.

 

டிஜிட்டல் அடையாள அட்டை

டிஜிட்டல் அடையாள அட்டை

<strong>இனி டோல்களில் டிஜிட்டல் அடையாள அட்டை தான் பயன்படுத்த வேண்டும்.. மத்திய அரசு வலியுறுத்தல்..!</strong>இனி டோல்களில் டிஜிட்டல் அடையாள அட்டை தான் பயன்படுத்த வேண்டும்.. மத்திய அரசு வலியுறுத்தல்..!

இதை படிச்சீங்களா..?

‘மோடி ஆப்' சொல்வதை விடுங்க.., தமிழ்நாட்டு மக்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்க..!‘மோடி ஆப்' சொல்வதை விடுங்க.., தமிழ்நாட்டு மக்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs500 and Rs1000 ban: These people are in safer side - demonetization effect

Rs500 and Rs1000 ban: These people are in safer side - demonetization effect - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X