பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அரசு என்ன செய்யும்?

புதிய நோட்டுக்களைப் பெற மக்கள் கால்கடுக்க காத்திருந்த நிலையில் பழைய நோட்டுக்களைத் திரும்ப பெறும் மத்திய அரசு அவற்றை என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்த அறிவிப்பால் நாடே அசாதாரண நிலைக்கு மாறி ஒவ்வொரு வங்கி வாசலிலும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்ற காட்சியை பார்த்தோம்.

 

புதிய நோட்டுக்களைப் பெற மக்கள் கால்கடுக்க காத்திருந்த நிலையில் பழைய நோட்டுக்களைத் திரும்ப பெறும் மத்திய அரசு அவற்றை என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திரும்பப் பெறும் நோட்டுக்கள் ஒன்றோ இரண்டோ அல்ல. கோடிக்கணக்கில்..எனவே இந்த நோட்டுக்களை வரிசையாக வைத்தால் 300 முறை எவரெஸ்ட் சிகரத்திற்குச் சென்று வந்த தூரம் இருக்கும். அதேபோல் பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தின் ஐந்து மடங்காக இருக்கும். இவ்வளவு அதிகமான ரூபாய் நோட்டுகளை அரசு என்ன செய்யும்? என்று யாராவது யோசித்துப் பார்த்தது உண்டா?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

மிகப்பெரிய பணக்குவியல்

மிகப்பெரிய பணக்குவியல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுபோன்று மிகப்பெரிய நாணய கொள்கை மாற்றத்தைச் செய்யும்போது அதற்குரிய விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மத்திய அரசு அதிகப்படியான புகழ்ச்சிகளையும், அதிபயங்கர கண்டனங்களையும் மாறி மாறிப் பெற்று வருகிறது.

ரூபாய் நோட்டு தயாரிப்புக்காக மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் $400 மில்லியன் டாலர்களை செலவு செய்து வருகிறது. இந்தத் தொகை உலக அளவிலான நாணய தயாரிப்பு செலவுகளில் 1.2% என்பது குறிப்பிடத்தக்கது.

 

செல்லாத ரூபாய் நோட்டுக்கள் என்னவாக மாறும்?

செல்லாத ரூபாய் நோட்டுக்கள் என்னவாக மாறும்?

பெரும்பாலான அழுக்கடைந்த, டேமேஜ் ஆன செல்லாத நோட்டுக்களை வழக்கம் போல அழித்துவிடுவதுதான் ரிசர்வ் வங்கியின் வழக்கம் என்றும் தற்போதும் அதேபோன்ற வழிமுறைகளே பின்பற்றப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்ல நிலையில் உள்ள செல்லாத நோட்டுக்களை மீண்டும் வேறு விதங்களில் உபயோகப்படுத்தப்படும் வகையில் மாற்றி அமைக்கப்படும். பேப்பர் வெயிட் உள்படத் தொழிற்சாலைகள், அலுவலர்களுக்கு தேவைப்படும் பொருட்களாக இந்த செல்லாத நோட்டுக்கள் மாற்றப்பட உள்ளன. மேலும் மிகச்சிறிய துண்டுகளாக இந்த ரூபாய் நோட்டுகளை வெட்டி பேப்பர் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

 

98% இந்தியர்கள் பணத்தை மட்டுமே பயன்படுத்த என்ன காரணம்?
 

98% இந்தியர்கள் பணத்தை மட்டுமே பயன்படுத்த என்ன காரணம்?

இந்தியாவில் உள்ள 98% நுகர்வோர்கள் பெரும்பாலும் ரொக்கத்தைக் கொடுத்தே பொருட்களை வாங்கி வருகின்றனர். மீதி 2% மட்டுமே முழுக்க முழுக்க ரொக்கத்தைத் தவிர்த்து ஆன்லைன், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமே பரிவர்த்தனை செய்கின்றனர். எனவே இந்தியாவில் திரும்ப பெறப்பட்ட பணத்திற்கான முழு அளவிலான பண நோட்டுக்கள் அச்சிட்டு ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.

கருப்புப்பணம் ஒழியுமா?

கருப்புப்பணம் ஒழியுமா?

மத்திய அரசு எடுத்துள்ள இந்தத் துணிச்சலான நடவடிக்கையின் காரணமாக 15 டிரில்லியன் கருப்புப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே வெளியே வரும் மீதி பணங்கள் வெளியே வராவிட்டாலும் கருப்பு பண முதலாளிகளால் அழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஊடகங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்தக் கருப்புப்பணம் எரித்து சாம்பலாக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

தங்கம் / வெள்ளி

தங்கம் / வெள்ளி

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What government plans to do with the old Rs 500, 1,000 notes?

What government plans to do with the old Rs 500, 1,000 notes?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X