ஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..!

ஹாட் நியூஸை ஷாட்டா படிக்க: ஸ்பீக்கர் பாக்ஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

60 சதவீத 500, 1000 ரூபாய் நோட்டுகள் கணக்கிற்கு வந்தது..!

60 சதவீத 500, 1000 ரூபாய் நோட்டுகள் கணக்கிற்கு வந்தது..!

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இனி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி முதல் சுமார் வங்கி கணக்குகளில் 8.11 கோடி ரூபாயும், பணப் பரிமாற்றமாக 33,498 கோடி ரூபாயும் வங்கி மற்றும் தபால் நிலையில் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுப் புழக்கத்தில் 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்தம் 14 லட்சம் கோடி ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாயாகப் புழக்கத்தில் உள்ளது.
#Demonization

 

ஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..!

ஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..!

டிசம்பர் 2016-மார்ச் 2017 காலங்களில் இந்திய ஐடித்துறை நிறுவனங்கள் 76 சதவீதம் அதிக ஊழியர்களை நியமிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது..

பன்னாட்டுச் சந்தைகளில் இத்துறை நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திட்டமாக இந்திய சந்தையில் அதிகளவிலான ஊழியர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் IT மற்றும் ITes நிறுவனங்களில் டிசம்பர் 2016-மார்ச் 2017 காலத்தில் 76 சதவீத அதிக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#IT #JOB

 

5 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ கலக்கல்..!
 

5 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ கலக்கல்..!

செப்டம்பர் 1ஆம் தேதி இந்திய சந்தையில் முழுமையாக இறங்கிய ஜியோ நிறுவனம், வெறும் 83 நாட்களில் சுமார் 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துவங்கிய புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ-வின் இலவச சேவைகள் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால், சேவைத் துவங்கிய 83 நாட்களிலேயே 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்தச் சேவை டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஜியோ நிறுவனத்திற்கும் சரி, சந்தையில் இருக்கும் ஏர்டெல், ஐடியா, வோடாவோன் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது.
#Jio

 

5 முதலமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைப்பு.. எதற்கு..?

5 முதலமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைப்பு.. எதற்கு..?

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய்த் தடையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அடிமட்ட அளவில் இருந்து ஆய்வு செய்யவும், இதன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையவும், மத்திய அரசு 5 மாநில முதல் அமைச்சர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, இப்புதிய குழுவிற்குத் தலைவராக ஆந்திர பிரதேசம் முதலமைச்சர் சந்திரபாபு நாயடு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நிதீஷ் குமார் (பிகார்), மானிக் சர்கார் (திரிபுரா), சிவராஜ் சிங் சவ்கான் (மத்திய பிரதேசம்), நாராணயசாமி (புதுச்சேரி) ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
#Demonization

 

இந்தியா-சீனா: வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 52.69 பில்லியன் டாலராக உயர்வு..!

இந்தியா-சீனா: வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 52.69 பில்லியன் டாலராக உயர்வு..!

2016-17 நிதியாண்டில் இந்தியா- சீனாவிற்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை 52.69 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2016-17ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இதன் அளவு 25.22 பில்லியன் டாலராக இருந்தது என வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
#India #China

 

கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்து OPEC அமைப்பு ஆலோசனை..!

கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்து OPEC அமைப்பு ஆலோசனை..!

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC அமைப்பு, வியன்னாவில் இருக்கும் தனது தலைமையகத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தைக் கூட்டுகிறது.

இதில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் உற்பத்தி அளவுகளைக் குறைப்பது குறித்து முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
#OPEC

 

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil - 30112016

News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X