உங்களுக்கு பட்ஜெட் போடத் தெரியுமா?

பட்ஜெட் அல்லது வரவுசெலவுத் திட்டம் என்பது தற்போது சிக்கனமாகச் செலவழிப்பது என்கிற பொருளிலும், ஆகாரம் என்பது எப்படி உணவுக்கட்டுப்பாடு என்ற பொருளில் பார்க்கப் படுகிறதோ அதே போல் பார்க்கப்படுகிறது.

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் நாம் போடும் பட்ஜெட் என்பது வருமானம் மற்றும் அதற்கெதிரான செலவுகளை பட்டியலிடும் வழிமுறை. பொதுவாக இது மாதம் ஒருமுறை செய்யப்படும்.

 

பட்ஜெட் அல்லது வரவுசெலவுத் திட்டம் என்பது தற்போது சிக்கனமாகச் செலவழிப்பது என்கிற பொருளிலும், ஆகாரம் என்பது எப்படி உணவுக்கட்டுப்பாடு என்ற பொருளில் பார்க்கப் படுகிறதோ அதே போல் பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் எதை குறிக்கும்?

பட்ஜெட் எதை குறிக்கும்?

ஒரு வரவுசெலவுத் திட்டம் அல்லது பட்ஜெட் என்பது எவ்வளவு திறமையாக செலவிடுகிறீர்கள் என்பதைக் குறிக்கும். இது நீங்கள் செய்யும் வீட்டு வாடகை அல்லது பராமரிப்பு செலவு பொழுதுபோக்கு போன்ற செலவுகளுக்கு நிகராக எவ்வளவு வருமானத்தை உள்ளே கொண்டுவரப்போகிறீர்கள் என்பதை ஆராய்ந்து அறிய உதவும்.

பட்ஜெட்டை ஒரு எதிர்மறைச் சொல்லாக பார்க்காமல் நீங்கள் நிதி ஆதாரங்கள் மற்றும் குறிக்கோள்களை அடைய உதவும் ஒரு கருவியாக பார்க்கவேண்டும்.

 

பட்ஜெட்டின் பலன்கள் என்ன?

பட்ஜெட்டின் பலன்கள் என்ன?

ஒரு மாதாந்திர பட்ஜெட் உங்களுடைய செலவு செய்யும் போக்கினை கண்காணிக்கவும் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்பதையும் கணிக்க உதவும்.

பட்ஜெட் போடுவது ஆர்வமான வேலை இல்லையென்றாலும் (சிலபேருக்கு இது நடுக்கமாகவும் இருக்கும்) உங்கள் நிதிநிலையைச் சரியான முறையில் பராமரிப்பதற்கு உதவும்.

 

உபரி வருமானம்
 

உபரி வருமானம்

உபரி வருமானத்தைத் திட்டமிட பட்ஜெட்டும், பட்ஜெட் போட உபரி வருமானமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. ஒன்றில் குறைத்து செலவிட்டால் மற்றொன்றில் அதிகம் செலவிட முடியும் அல்லது சேமித்து ஒரு பெரிய எதிர்கால செலவுக்கோ, அவசரக்கால நிதிக்கோ, ஒய்வு நிதிக்கோ அல்லது முதலீட்டிற்கோ பயன்படும்.

துல்லியமான விவரங்கள் வேண்டும்

துல்லியமான விவரங்கள் வேண்டும்

நீங்கள் பட்ஜெட் போடத் துவங்குமுன் இதில் வெற்றியடைவதற்கு நீங்கள் தரும் ஒவ்வொரு விவரமும் துல்லியமான மிக விரிவானதாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்திருக்கவேண்டும். கடைசியில் உங்கள் பட்ஜெட்டின் முடிவு உங்கள் பணம் எவ்வாறு வருகிறது, கையில் எவ்வளவு உள்ளது மற்றும் அது எவ்வழிகளில் செலவாகிறது என்பதையும் காட்டும்.

செலவுகளை வரிசைப்படுத்துதல்

செலவுகளை வரிசைப்படுத்துதல்

பட்ஜெட்டை கொண்டு உங்கள் செலவுகளை முக்கியத்துவத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அதன் மூலம் உங்கள் பணத்தையம் எதிர்காலத்தையம் திறம்பட நிர்வாகிக்க முடியும்.

ஒரு துல்லியமான சொந்த பட்ஜெட்டைப் போடுவது எப்படி என்பதை படிப்படியாக தெரிந்துகொள்ளப் பின்வரும் வழிமுறைகள் உதவும்.

 

ஒவ்வொரு நிதி அறிக்கைகளையும் சேகரியுங்கள்

ஒவ்வொரு நிதி அறிக்கைகளையும் சேகரியுங்கள்

இது உங்களுடைய வங்கி விவரப்பட்டியல் (ஸ்டேட்மென்ட்), முதலீட்டுக்கு கணக்குகள், அண்மையில் கட்டிய சேவைகளுக்கான ரசீதுகள் மற்றும் எந்த ஒரு வரவு அல்லது செலவுக்கான விவரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

பட்ஜெட்டில் முக்கியமான ஒரு குறிப்பு மாதாந்திர சராசரி வரவு செலவுகளை கண்டறிவது. எனவே எவ்வளவு விவரங்களை நீங்கள் திரட்ட முடியுமோ அவ்வளவு விவரங்களைத் திரட்டுவது நல்லது.

 

உங்களுடைய அனைத்து வருமானங்களையும் பதிவிடுங்கள்

உங்களுடைய அனைத்து வருமானங்களையும் பதிவிடுங்கள்

நீங்கள் சொந்தத் தொழில் செய்பவராக இருந்தாலோ அல்லது வெவ்வேறு வெளி வருமானங்கள் இருந்தாலோ அனைத்தையும் பதிவு செய்து வைத்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

உங்கள் வருமானம் சம்பளமாக இருந்தால் அதில் வரி ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் கைக்கு கிடைக்கும் நிகர சம்பளத்தை மொத்த வருமானமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

மாதாந்திர செலவுகள் பட்டியல்

மாதாந்திர செலவுகள் பட்டியல்

ஒரு மாதத்தில் நீங்கள் செய்யவிருக்கிற அனைத்து செலவுதலையும் பட்டியல் இடுங்கள். இது அடகு நிலுவைகள், கார் பராமரிப்பு செலவுகள் அல்லது நிலுவைகள், வாகனக் காப்பீடு, மளிகை, அத்தியாவசிய சேவைகள், பொழுதுபோக்கு, லாண்டரி, ஓய்வுகால அல்லது கல்லூரி சேமிப்புகள் என நீங்கள் செய்யும் ஒவ்வொரு பைசாவையும் கணக்கிலெடுங்கள்.

 

செலவுகளை நிலையான மற்றும் வேறுபாடும் செலவுகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள்

செலவுகளை நிலையான மற்றும் வேறுபாடும் செலவுகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள்

நிலையான செலவுகள் ஒவ்வொரு மாதமும் மாற்றம் ஏதும் இன்றி தொடர்ச்சியாக வருபவை. இவை உங்கள் தினசரி வாழ்வில் அங்கமாக இருக்கும். உங்கள் வீட்டு வாடகை, கார் தொடர்பான செலவுகள், கேபிள் டிவி அல்லது இன்டர்நெட் இணைப்பு சந்தா, துப்புரவுச் செலவு, கிரெடிட் கார்டு நிலுவைகள் போன்றவை இதில் அடங்கும். இவை பெரும்பாலும் அவசியமானவை மற்றும் பட்ஜெட்டில் அதிக மாற்றத்திற்கு உள்ளாகாதவை.

வேறுபாடும் செலவுகள் ஒவ்வொரு மாதமும் மாற்றத்திரு உள்ளாகும் செலவுகள் ஆகும். இது மாதாந்திர மாளிகைப் பொருட்கள், பெட்ரோல், பொழுதுபோக்கு, வெளியில் உண்பது, பரிசுகள் போன்றவற்றை உள்ளடக்கும். பட்ஜெட்டில் சரிகட்டத் தேவையெழும்போது இவை முக்கியமான ஒன்றாக இருக்கும்.

 

உங்கள் மொத மாதாந்திர வருமானம் மற்றும் செலவுகளைக் கூட்டுங்கள்

உங்கள் மொத மாதாந்திர வருமானம் மற்றும் செலவுகளைக் கூட்டுங்கள்

உங்கள் வருமானம் செலவுகளை விட உபரியாக இருந்தால் நீங்கள் ஒரு நல்ல தொடக்கத்தில் இருக்கிறீர்கள். இது நீங்கள் உங்கள் உபரி வருமானத்தை உங்கள் பட்ஜெட்டில் ஓய்வுகால சேமிப்பு அல்லது உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைகளைத் தீர்ப்பது போன்ற கடன் தீர்க்கும் செலவுகள் ஆகியவற்றிற்கு ஒதுக்க உதவும். உங்கள் வருமானத்தை விட செலவுகள் அதிகம் இருந்தால் நீங்கள் சில மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது என்று அறியுங்கள்.

செலவுகளை சரிக்கட்டுங்கள்

செலவுகளை சரிக்கட்டுங்கள்

நீங்கள் உங்கள் செலவுகளை துல்லியமாக பட்டியலிட்டு அறிந்தவுடன் அடுத்து நீங்கள் செய்யவேண்டியது உங்கள் வரவு மற்றும் செலவுகள் சமமாக ஆவதை உறுதிசெய்வதாகும். அதாவது உங்களின் அனைத்து விதமான வருமானம் நீங்கள் செய்ய நினைத்துள்ள செலவுக்கு அல்லது சேமிப்பிற்கு நிகராக கணக்கிடப்படவேண்டும்.

வரவுகளை விட செலவுதான் அதிகமான உள்ளபோது நீங்கள் செய்யும் செலவுகளில் வேறுபாடும் செலவுகளை கண்டறிந்து அதில் குறைப்புகளை செய்யவேண்டும். இவை பொதுவாக அத்தியாவசிய செலவுகள் இல்லை என்பதால் இதில் கொஞ்சம் பணத்தை மிச்சம் பிடித்து உங்கள் வருமானத்திற்குள் கொண்டுவர எளிதாக இருக்கும்.

 

மாதாமாதம் உங்கள் பட்ஜெட்டை மறுஆய்வு செய்யவும்

மாதாமாதம் உங்கள் பட்ஜெட்டை மறுஆய்வு செய்யவும்

உங்கள் பட்ஜெட்டை சீரான இடைவெளிகளில் மறு ஆய்வு செய்வது அவசியம். இது நீங்கள் சரியான வழியில் செல்வதை உறுதி செய்யும். முதல் மாதத்திற்குப் பிறகு ஒரு நிமிடம் பட்ஜெட்டை எடுத்து அதனை உண்மையில் செய்யப்பட செலவுகளுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். இது நீங்கள் இதில் சிறப்பாக செயல்பட்டீர்கள் எங்கே சிறப்பாக செய்யப்படவேண்டியுள்ளது என்பதை உங்களுக்குக் காட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: budget பட்ஜெட்
English summary

How to Make a Budget?

How to Make a Budget?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X