பதஞ்சலி நிறுவனத்தை அடக்கியாளும் ‘ஆச்சர்யா பாலகிருஷ்னா’.. யார் இவர்..?

பதஞ்சலி நிறுவனத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இவரை ஒரு பாரம்பரிய தலைமை செயல் அதிகாரி என்றும் கூறலாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆச்சர்யா பாலகிருஷ்னா, பதஞ்சலி நிறுவனத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இவரை ஒரு பாரம்பரிய தலைமை செயல் அதிகாரி என்றும் கூறலாம்.

பாரம்பரிய தலைமை நிர்வாக அதிகாரி

பாரம்பரிய தலைமை நிர்வாக அதிகாரி

43 வயதில் இவருக்குப் பல போட்டியாளர்கள் இருக்கலாம், ஆனால் இவருடைய நிர்வாகத் திறமை தனித்துவமானது.

ஐபோன் பயன்படுத்தும் இவருடைய அலுவலக மேசையில் ஒரு கணினி கிடையாது.

வெள்ளி நிற குர்தா, வேட்டி அணிந்து இருக்கும் இவர் அச்சடிக்கப்பட்ட பேப்பர்கள் மட்டுமே படிப்பார் ஆனால் இந்தியில் நீண்ட நேரம் பேசக்கூடியவர்.

 

சம்பளம் கிடையாது

சம்பளம் கிடையாது

பதஞ்சலி நிறுவனத்தில் 94 சதவீத பங்கை தன் வசம் வைத்திருக்கும் இவர் தினமும் 15 மணி நேரம் நிறுவனத்திற்காகச் சனி, ஞாயிறு என்று பார்க்காமல் உழைக்கக் கூடியவர். மேலும் இவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா?

மேலும் இவர் செய்யும் வேலைக்கு இவர் சம்பளம் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கடின உழைப்பு

கடின உழைப்பு

பாலகிருஷ்னா கடின உழைப்பை நம்பக் கூடியவர் அதனால் தான் நிறுவனத்தைத் துவங்கிய குறைந்த காலத்திலேயே 5,000 கோடி ரூபாய்க்கு நிறுவனத்தின் மதிப்பு வளர்ந்திருக்கிறது.

பிற நுகர்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை விட இவர்களது விற்பனை திறன் பாரம்பரிய முறையாகவும், வித்தியாசமாகவும் தெரிகிறது.

போட்டி நிறுவனங்கள் புதிதாக ஒரு தயாரிப்பை வெளியிடவே திணறும் நிலையில் பதஞ்சலி நிறுவனம் 400-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறது.

 

நுகர்வோர் மன நிலையை மாற்றிய பதஞ்சலி

நுகர்வோர் மன நிலையை மாற்றிய பதஞ்சலி

இவர்கள் தயாரிக்கும் எந்த ஒரு பொருளாக இருக்கட்டும் அது பிற போட்டி நிறுவனங்களை விட அதிக விற்பனையாகக் கூடியதாக இருக்கிறது என்பது சிறப்பு. பதஞ்சலி நுகர்வோர் மன நிலையை மாற்றியுள்ளதாக பாலகிருஷ்னா நம்புகிறார்.

"உங்கள் அடிப்படை பலமாக இருந்தால் தரமான சந்தைப் படுத்தும் நடைமுறைகள் தேவையில்லை என்றும் உங்களை யாரும் வெல்ல முடியாது" என்றும் பலகிருஷ்ண கூறினார்.

 

கட்டுப்பாடுகள் மற்றும் பணியாளர்கள்

கட்டுப்பாடுகள் மற்றும் பணியாளர்கள்

30:70 சதவீத பாலின விகிதத்துடன் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். அனைவரும் ‘ஓம்' என்று கூறிய பிறகுத் தனது பணிகளைத் துவங்குகிறார்கள். ஆனால் மாமிசம் உன்னுவது, புகை பிடித்தல் போன்றவற்றுக்கு இந்நிறுவனத்தில் இடமில்லை. இங்கு வேலை செய்வதை ஒரு சேவையாகவே அனைத்து ஊழியர்களும் கருதுகின்றனர்.

மேலும் இவர் ஒரு போதும் கலைப்பாகவோ, தூக்கம் இல்லாமல் இருப்பதாகவோ இவரைப் பார்த்ததில்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.

 

வேலைக்கு அல்ல பிக்னிக்

வேலைக்கு அல்ல பிக்னிக்

15 மணி நேரம் எப்படி வேலை செய்கிறீர்கள் என்ற கேள்வியை இவரிடம் கேட்டபோது நான் மகிழ்ச்சியாகவே இந்தப் பணிகளை செய்கிறேன் என்றும் இங்கு வேலை செய்வது எனக்கு பிக்னிக் போன்றது தான் என்றும் பாலகிருஷ்னா கூறுகின்றார்.

குடிசையில் இருந்து கோபுரத்திற்கு

குடிசையில் இருந்து கோபுரத்திற்கு

2011-ம் ஆண்டு இவர் மீது மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அதில் இருந்து வெளியில் வந்த இவர் பாபா ராம்தேவ்-ஐ தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Meet Acharya Balkrishna, the man behind Baba Ramdev's Patanjali Ayurved

Meet Acharya Balkrishna, the man behind Baba Ramdev's Patanjali Ayurved
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X