20,000 கோடி ரூபாய் கருப்பு பணம் தங்கமாக மாற்றப்பட்டுள்ளதா? ஆய்வு தொடங்கியது..!

தேசிய அளவில் இது குறித்து பெறப்பட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும் போது 66 டன்கள் அதாவது 66,000 கிலோ தங்கம் நவம்பர் மாதம் மட்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நவம்பர் மாதம் 20,000 கோடி ரூபாய் வரை கருப்பு பணம் தங்கமாக மாற்றப்பட்டு இருக்கலாம் என்று அமலாக்க இயக்குநரகத்திற்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

தேசிய அளவில் இது குறித்து பெறப்பட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும் போது 66 டன்கள் அதாவது 66,000 கிலோ தங்கம் நவம்பர் மாதம் மட்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

புல்லியன் அசோசியேசன் தரவு

புல்லியன் அசோசியேசன் தரவு

இந்திய புல்லியன் அசோசியேசன் அளித்துள்ள தரவின் படி சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் 52 முதல் 55 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016-2015 தங்கம் இறக்குமதி ஒப்பீடு

2016-2015 தங்கம் இறக்குமதி ஒப்பீடு

2015-ம் ஆண்டு 700 டன்கள் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதை விட 2016-ம் ஆண்டு குறைந்து 500 முதல் 550 டன்கள் வரை மட்டுமே தங்க இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேகம் ஏற்படக் காரணம்

சந்தேகம் ஏற்படக் காரணம்

சென்ற ஆண்டை விடக் குறைவான அளவே இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் நவம்பர் மாதம் மட்டும் ஏன் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டதை விட அதிக அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி எழுந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

வருமான வரித் துறை சோதனை

வருமான வரித் துறை சோதனை

இங்கு தான் சந்தேகம் கிளம்பி உள்ளது. ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பிறகு புல்லியன் வர்த்தகர்கள் மற்றும் பெறும் நகை கடை வியாபாரிகளைக் குறி வைத்து இப்போது வருமான துறை சோதனை நடத்த இருப்பதால் பீதியில் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 20,000 crore black money converted into gold? Probe underway

Rs 20,000 crore black money converted into gold? Probe underway
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X