வீடு, வீட்டு மனை விற்பனையில் 44% சரிவு.. மோசமான நிலையில் ரியல் எஸ்டேட் துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறை சுமார் 22,600 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை இழந்தது மட்டும் அல்லாமல் வீடு, வீட்டு மனை விற்பனையில் 44% சரிவைச் சந்தித்துள்ளது இந்திய ரியல் எஸ்டேட் துறை. இந்தப் பாதிப்பு அனைத்தும் மோடியின் அறிவிப்புக்குப் பின் நிகழ்ந்தவை.

 

நவம்பர் 8க்கும் பின்

நவம்பர் 8க்கும் பின்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்காத ரியல் எஸ்டேட் துறை, நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் வீடு, வீட்டு மனை விற்பனையில் சுமார் 44% சரிவைச் சந்தித்துள்ளது என இத்துறை ஆய்வு நிறுவனமான கினையிட் பிராங்க் இந்தியா தெரிவித்துள்ளது.

சிலையாய் நின்றது ரியல் எஸ்டேட்

சிலையாய் நின்றது ரியல் எஸ்டேட்

இந்திய ரியல் எஸ்டேட் குறித்துக் கடந்த 6மாதத்திற்கான ஆய்வை கினையிட் பிராங்க் இந்தியா மேற்கொண்டது. இதில் 2016ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டு, அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இத்துறை வளர்ச்சி பாதியாய் குறைந்துள்ளது.

அதுவும் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்திய பின் சிலையாய் நின்றது என இவ்வறிக்கை கூறுகிறது.

 

புதிய அறிமுகம்
 

புதிய அறிமுகம்

மேலும் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பு வெளியான முதல் புதிய அறிமுகங்களின் அளவு 90 சதவீதம் வரை குறைந்துள்ளது.

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் 2016ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் சுமார் 22,600 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது எனக் கினையிட் பிராங்க் இந்தியாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

 

 

மாநில அரசுகள்

மாநில அரசுகள்

இதன் வாயிலாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மாநில அரசுகளும் முத்திரைத் தாள் கட்டணத்தில் வாயிலாகச் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவிலான சரிவை சந்தித்துள்ளது.

6 வருடத்தின் மோசமான நிலை

6 வருடத்தின் மோசமான நிலை

கடந்த 3 மாதத்தின் நிலையைப் பார்க்கும்போது, 6 வருடத்தில் பார்த்திராத மோசமான நிலையை இந்திய ரியல் எஸ்டேட் துறை தற்போது சந்தித்துள்ளது.

விற்பனை நிலை

விற்பனை நிலை

2010ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் வீடு மற்றும் வீட்டு மனைகளின் விற்பனை அளவு 90,000 ஆக இருந்ததே மோசமாகப் பார்க்கப்படும் நிலையில் 2016ஆம் 4வது காலாண்டில் வெறும் 40,940 மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரலாற்றின் கருப்புப் பகுதியாக அமைந்துள்ளது.

கருப்புப் பணம்

கருப்புப் பணம்

இந்தியாவில் அதிகளவிலான கருப்புப் பணம் பயன்படுத்தப்படும் இடம் 2 ஒன்று தங்கம் மற்றொன்று ரியல் எஸ்டேட்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Housing sales dip 44% after currency withdrawal: Report

Housing sales dip 44% after currency withdrawal - Tamil GoodReturns
Story first published: Wednesday, January 11, 2017, 16:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X