தமிழக விவசாயிகளை சென்றடையாத ஃபசல் பீமா யோஜனா..? தமிழகத்தில் பயிர் காப்பீட்டின் நிலை என்ன..?

புதிய பயிற் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் இந்தத் திட்டத்திற்கான காப்பீடு உயர்த்தப்பட்டது. அப்போது இந்தக் காப்பீடு திட்டத்தின் கவரேஜ் அதிகப்படுத்தப்பட்டதற்கு அதிகப் பயிற் கடன்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016 ஜனவரி மாதம் பிரதமர் மோடி 50 சதவீத விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்று புதிய பயிற் காப்பீடு திட்டமான ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

 

புதிய பயிற் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் இந்தத் திட்டத்திற்கான காப்பீடு உயர்த்தப்பட்டது. அப்போது இந்தக் காப்பீடு திட்டத்தின் கவரேஜ் அதிகப்படுத்தப்பட்டதற்கு அதிகப் பயிற் கடன்கள் பெற்றதே என்று மத்திய அரசு கூறியது.

வேளாண் காப்பீட்டு நிறுவனம் (AIC) 40 சதவீத விவசாயிகளை இந்தப் புதிய திட்டம் மூலம் இருப்பதாகவும், 2016-ம் ஆண்டு 2.69 கோடி பேர் பயிற் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதுவே 2015-ம் ஆண்டுக் கரீப் பருவத்தில் பயிற் காப்பீடு திட்டத்தின் கீழ் 2.10 கோடி நபருக்குக் காப்பீடு பெறப்பட்டுள்ளது. முந்திய ஆண்டுகள் இருந்ததை விடப் பயிற் காப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட இந்த 28 சதவீத வளர்ச்சி வங்கிகள் கட்டாயத்தின் பெயரிலேயே உயர்ந்து இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

இன்னொரு பக்கம் 2016-ம் ஆண்டுக் கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு பெற்ற விகிதம் 3 சதவீதம் அதிகரித்து 98.4 லட்சமாகப் பேராக இருந்தது 1.01 கோடியை அடைந்தது.

சந்தேகமான கூற்று

சந்தேகமான கூற்று

விவசாயத் துறை அமைச்சகம் டிசம்பர் 7-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பிரதான் மந்திரி ஃபசல் யோஜானா திட்டத்தின் கீழ் கடன் பெறாத விவசாயிகள் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதாவது 2015-ம் ஆண்டு 14.88 லட்சம் பேராக இருந்தவர்கள் 2016-ம் ஆண்டு 100 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.

ஏன் இந்த முரண்பாடு?

ஏன் இந்த முரண்பாடு?

வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றிக் கூறுகையில் 2015-ம் ஆண்டு விவசாயத் துறை அமைச்சகம் கணக்கை எடுக்கும் போது மகாராஷ்டிராவில் இருந்து கடன் பெறாத 83.7 லட்சம் விவசாயிகளையும் தவறாகக் கணக்கில் கொண்டு வந்துள்ளது என்று விளக்கம் அளித்தார். இதனால் தான் மத்திய அரசின் கடன் பெறாத பயிற் காப்பீடு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

அதிகக் காப்பீடு எதிர் பார்ப்பவர்கள்
 

அதிகக் காப்பீடு எதிர் பார்ப்பவர்கள்

எனினும், கடன் பெறாத விவசாயிகள் அதிகக் காப்பீட்டை எதிர்பார்க்கின்றனர் என்று நீடிக்கக்கூடிய மற்றும் முழுமையான வேளாண் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிதா க்ருன்காட்டி தெரிவித்துள்ளார். கடன் பெறாத விவசாயிகளுக்கு அதிகபட்ச குத்தகை வாடகை அதிகமாக உள்ளது. ஆந்திராவில் குத்தகை விவசாயி ஒருவருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாயும், பஞ்சாபில் 40,000 முதல் 45,000 ரூபாய் வரை வழங்கப்படுகின்றது.

மிக மோசமான நிலையில் தமிழகம்

மிக மோசமான நிலையில் தமிழகம்

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வடகிழக்கு பருவ மழை குறைந்துள்ளதால் தமிழகத்தில் நெல் மற்றும் பிற தானியங்களின் விவசாயம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பிரதான மந்திரியின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பித்ததிலும் தமிழகம் மிகவும் குறைவான அளவில் உள்ளது.

தென் மாவட்டங்களில் தமிழ் நாட்டின் நிலை

தென் மாவட்டங்களில் தமிழ் நாட்டின் நிலை

வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் தரவு இது பற்றிக் கூறும் போது பிராதான மந்திரியின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் பிற தென் மாவட்டங்களை விடத் தமிழகம் குறைவான அளவே விண்ணப்பித்து உள்ளதாகக் கூறுகின்றது. கர்நாடகாவில் 13.49 லட்சம் விவசாயிகளும், தெலுங்கானாவில் 6.18 லட்சம் விவசாயிகளும் விண்ணப்பித்து உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து வெறும் 15,915 பேர் மட்டுமே பயிற் காப்பீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Fasal Bima Yojana not reaching farmers who really need it

PM Fasal Bima Yojana not reaching farmers who really need it
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X