94 வயதாகும் இந்த தாத்தாவிற்கு 21 கோடி ரூபாய் சம்பளம்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய நுகர்பொருள் துறையில் அதிகச் சம்பளம் வாங்கு தலைமை செயல் அதிகாரி இதுவரை எந்தப் பத்திரிகை அட்டைகளிலும் வராத ஒருவர் என்று தெரியுமா உங்களுக்கு? ஆனால் இந்தியாவில் பலருக்கும் இவரைப் பற்றித் தெரியும்.

 

தொலைக்காட்சிகளில் எம்டிஎச் மசாலா விளம்பரத்தில் தலைப்பா கட்டிக்கொண்டு வரும் முதியவர் தான் 94 வயதான தர்மபால் குலாத்தி.இப்போது இவரை அடையாளம் கண்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

இந்திய நுகர்பொருள் துறையில் அதிகச் சம்பளம் வாங்கு தலைமை செயல் அதிகாரி இதுவரை எந்தப் பத்திரிகை அட்டைகளிலும் வராத ஒருவர் என்று தெரியுமா உங்களுக்கு? ஆனால் இந்தியாவில் பலருக்கும் இவரைப் பற்றித் தெரியும்.

எம்டிஎச் மசாலா சிஈஓ

எம்டிஎச் மசாலா சிஈஓ

ஐந்தாம் வகுப்பைக் கூட முடிக்காத இவர் தலைமை பொறுப்பில் உள்ள இவர் எம்டிஎச் மசாலா நிறுவனத்தில் பெறும் சம்பளம் வருடத்திற்கு 21 கோடி ரூபாய் ஆகும். அதி கோத்ரேஜ், விவே கம்பீர், சஞ்சிவ் மேதா, ஐடிவி நிறுவனத்தின் தலைவர் தேவேஷ்வர் ஆகியோர் பெறுவதை விட அதிகச் சம்பளத்தைத் தர்மபால் குலாத்தி பெறுகிறார்.

வருவாய்

வருவாய்

மஹாஷியான் டி ஹட்டி (MDH) நிறுவனம் 15 சதவீத உயர்வைச் சந்தித்து மொத்த வருவாயாக 924 கோடியும், லாபம் 25 சதபீதம் உயர்ந்து 213 கோடியும் பெற்றுள்ளது.

தர்மபால் குலாத்தியின் தினசரி பணிகள்
 

தர்மபால் குலாத்தியின் தினசரி பணிகள்

ஊழியர்கள் அனைவராலும் தாதாஜீ அல்லது மஹாஷியாஜி என்று அழைக்கப்படும் குலாத்தி தினமும் நிறுவனத்தைச் சுற்றி வருவது, சந்தை விற்பனையாளர்கள் மற்றும் டீலர்களை ஞாயிற்றுக் கிழமை என்றும் பார்க்காமல் சந்தித்துப் பேசுவது போன்றவற்றைச் செய்வார். மேலும் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகள் இவருடைய கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது.

நோக்கம்

நோக்கம்

குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்களை அளிப்பதே எனது நோக்கம் என்றும், என்னுடைய சம்பளத்தில் இருந்து 90 சதவீதம் அறக்கட்டளைக்கு அளிப்பதாகவும் தர்மபால் குலாத்தி கூறுகின்றார்.

கிளைகள்

கிளைகள்

எம்டிஎச் நிறுவனத்திற்குத் துபாய், லண்டன் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது, 100 நாடுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவருடைய மகன் மொத்த செயல்பாடுகளையும் கவனித்துக்கொள்வதாகவும், 6 மகள்களும் விநியோகம் குறித்துக் கவனித்துக்கொள்வதாகவும் கூறுகின்றனர்.

தயாரிப்புகள்

தயாரிப்புகள்

60-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் எம்டிஎச் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளிவருகின்றது. அதில் டேகி மிர்சி, சேட் மசாலா மற்றும் சன்னா மசாலா பாகெட்கள் ஒவ்வொன்றும் மாதத்திற்கும் 1 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளது. ஆனால் இன்று வரை பிற வெளிநாட்டு உணவுகளைத் தயாரித்ததில்லை.

பிராண்டு

பிராண்டு

இந்திய மசாலா சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களைச் சாதாரணப் பிராண்டு இல்லாத தயாரிப்புகளில் இருந்து பிராண்டட் தயாரிப்புகளை வாங்க வைக்கும் முயற்சியைச் செய்து வருவதாக நிறுவனத்தின் துணை தலைவர் ராஜேந்தர் குமார் கூறுகின்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FMCG sector's highest paid CEO is a 94-year-old school drop-out

FMCG sector's highest paid CEO is a 94-year-old school drop-out
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X