ஜியோ-வின் இலவசங்கள் ஜூன் 30 வரை தொடருமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும், தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

 

இந்நிலையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் முடிவடைவதால், ஜூன் 30ஆம் தேதி வரையிலான புதிய இலவச திட்டத்தை வடிவமைத்துள்ளது ஜியோ.

இதன் மூலம் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின்னும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

இலவச திட்டம்

இலவச திட்டம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ அறிமுகத்தின் போது இந்திய டெலிகாம் சந்தையில் இருக்கும் போட்டியை சமாளிப்பது கடினம் என்பதால் அதிக வாடிக்கையாளர் கொண்ட தளத்தை உருவாக்குவதே தனது முதல் திட்டமாக இருந்தது.

இதற்காகவே இலவசங்களை வாரி வழங்கியது.

 

2 திட்டங்கள்.. 6 மாதம்

2 திட்டங்கள்.. 6 மாதம்

அதிகளவிலான வாடிக்கையாளர் தளத்தை அமைக்க ஜியோ அறிமுகத்தின் போது, டேட்டா முதல் வாயஸ் கால் வரை அனைத்தையும் இலவசம் என வெல்கம் ஆஃப்ராக அறிவித்தது. இது டிசம்பர் 31 வரை நீடித்தது.

அதன்பின் ஹேப்பி நியூ இயர் என்ற பெயரில் இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவை மட்டும் குறைத்து வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம் என்ற ஆஃபரை வழங்கியது. இந்த ஆஃபர் வருகிற மார்ட் 31ஆம் தேதி முடிய உள்ளது.

அடுத்த என்ன????

 

புதிய ஆஃபர்
 

புதிய ஆஃபர்

தற்போது திட்டமிட்டுள்ள திட்டம் ஜூன் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கும். இதில் இண்டர்நெட் டேட்டா மட்டும் குறைவான விலையில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம் என்ற புதிய திட்டத்தை ஜியோ வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.

100 ரூபாய் மட்டுமே

100 ரூபாய் மட்டுமே

முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ நிறுவனத்தின் இப்புதிய திட்டம் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என இத்திட்டத்தைக் குறித்த அறிந்த சில உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்புதிய திட்டத்தில் இண்டர்நெட் டேட்டாவிற்கு மட்டும் மாதம் 100 ரூபாய் வசூல் செய்யப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.

பிஸ்னஸ் ஸ்டார்ட்ஸ்

பிஸ்னஸ் ஸ்டார்ட்ஸ்

ஜியோ அதிகாரி ஒருவர், இப்புதிய திட்டத்தைக் குறித்து எக்னாமிக்ஸ் டைம்ஸ் கேட்டபோது மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் ஜியோ பணத்தை சம்பாதிக்கத் துவங்கும். இனி உண்மையான பிஸ்னஸ் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

போட்டி

போட்டி

ஜியோவின் இலவசங்கள் மூலம் இந்நிறுவனம் சுமார் 7.2 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் இதன் போட்டியை சமாளிக்க இந்தியாவில் மொபைல் சேவை அளிக்கும் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகியவை இண்டர்நெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கட்டணத்தைக் குறைத்துள்ளது.

குறிப்பு: நேற்று ஏர்டெல் நிறுவனம் 4ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவிற்கு வெறும் 157 ரூபாய் கட்டணத்தை மட்டுமே வசூலித்துள்ளது. (மை ஏர்டெல் மூலம் ரீசார்ஜ் செய்யப்பட்டவை)

 

ஆபத்து

ஆபத்து

ஜியோ நிறுவனத்தில் இருக்கும் 7.24 கோடி வாடிக்கையாளர்கள் 90 சதவீதம் பேர் ஜியோவை பிரதான இணைப்பாகக் கருதவில்லை, இலவசங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஜியோ தனது வாடிக்கையாளர்களை எப்போது வேண்டுமென்றாலும் இலக்க நேரிடலாம் என அச்சம் இந்நிறுவனத்தின் மத்தியில் நிலவி வருகிறது.

 

முதலீடு

முதலீடு

ஜியோ நிறுவனத்தில் ஏற்கனவே இதன் தலைவர் முகேஷ் அம்பானி 1.7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது புதிதாக 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார் முகேஷ்.

நிதி திரட்டல்

நிதி திரட்டல்

இப்புதிய முதலீட்டைத் தனது உரிமைகள் விற்பனை மூலம் திரட்டவும் அதனை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யவும் ஜியோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சேவை விரிவாக்கம்

சேவை விரிவாக்கம்

ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதன் வளர்ச்சிக்கும், நெர்வொர்க் மேம்பாடு மற்றும் அளவுகளை உயர்த்த இப்புதிய முதலீடு பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஜியோ.

பச்சை கொடி..!

பச்சை கொடி..!

ஜியோ இலவச ஆஃபர்-க்குப் பச்சை கொடியை காட்டியது 'டிராய்'.. கடுப்பானது ஏர்டெல்..!ஜியோ இலவச ஆஃபர்-க்குப் பச்சை கொடியை காட்டியது 'டிராய்'.. கடுப்பானது ஏர்டெல்..!

ஆளப்போவது யார்..?

ஆளப்போவது யார்..?

<strong>2030-இல் உலகை ஆளப் போகிறவர்கள் இவர்கள் தான்..! சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்..!</strong>2030-இல் உலகை ஆளப் போகிறவர்கள் இவர்கள் தான்..! சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்..!

உலகின் 30 பணக்கார இந்தியர்கள் இவர்கள்..!" data-gal-src="http:///img/600x100/2017/02/10-1486726937-rich.jpg">
30 பணக்கார இந்தியர்கள்

30 பணக்கார இந்தியர்கள்

<strong>உலகின் 30 பணக்கார இந்தியர்கள் இவர்கள்..!</strong>உலகின் 30 பணக்கார இந்தியர்கள் இவர்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio users can continue to party after March 31, almost free

Reliance Jio users can continue to party after March 31 - Tamil GoodReturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X