அடுத்த 10-15 ஆண்டுகளில் ரோபோக்களினால் வேலை வாய்ப்பு பெருமளவு பாதிக்கும்..!

பணி இழக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்துக் கொண்டு உள்ளது.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக ரோபோக்கள் மாறிவருகின்ற யுகம் நம் கண்முன்னே நடந்து கொண்டுள்ளது. இந்த ரோபோக்கள் அழிக்கும் ஆற்றலாக இல்லாமல் ஒரு ஆக்கப் புரட்சியாக செயல்பட்டுக் கொண்டு உள்ளது.

 

தற்போதைய கணக்கெடுப்பின் படி உலகத் தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாக தொழிற்நுட்ப திறன் கொண்ட ரோபோக்களை பயன்படுத்த தொடங்கிவிட்டன. இதனால் பணி இழக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்துக் கொண்டு உள்ளது.

ரோபோக்களினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பயன்பாடுகளை நாம் இங்கே பார்ப்போம்.

1. பெரிய அளவிலான மாற்றங்கள்

1. பெரிய அளவிலான மாற்றங்கள்

ரோபோக்கள் பற்றி நாம் ஏற்கனவே பேசியவாறு, பல விசயங்களில் வாடிக்கையாளர்களுக்குப் பல அற்புதமான உதவிகளைச் செய்து வருகிறது. ஏற்கனவே, தொழில் நிபுணர்கள் கூறியவாறு ரோபோக்களின் அறிமுகத்தால் பிபிஓ உள்படப் பல துறைகளில் மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில் சிறிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோக்கள் இன்று தொழில்நுட்பத்தில் உறுதியான அடி எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டு உள்ளது. எதிர் காலத்தில் ரோபோக்கள் பல பயன்பாடுகளை உள்ளடக்கிச் செயல்படும்.

இந்த ரோபோக்கள் அடுத்த 10-15 ஆண்டுகளில் சமூகத்தில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

 

2. அன்றாட வாழ்க்கையில் ரோபோக்களின் பங்கு

2. அன்றாட வாழ்க்கையில் ரோபோக்களின் பங்கு

இன்று பல பகுதிகளில் ரோபோக்கள் மனிதன் செய்யக் கூடிய பல வேலைகளைச் செய்து வருகின்றது. அனுபவ முதிர்ச்சி இல்லாதவர்கள் மற்றும் ஆரோக்கியமற்றவர்களால் செய்ய முடியாத வேலைகளை மிகச் சிறந்த முறையில் செய்கிறது.

 

 

3. நல்ல விஷயங்கள்
 

3. நல்ல விஷயங்கள்

ரோபோக்களானது கணினி நிரலாக்கம், பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட திறமையான வேலைகளைச் செய்வதன் மூலம் தொழிலாளர்களை பணிச் சுமையிலிருந்து விடுவிக்கிறது.

4. ஆபத்துகளைக் குறைத்தல்

4. ஆபத்துகளைக் குறைத்தல்

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் ஆபத்தான மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு தனித்தன்மை வாய்ந்த ரோபோக்களை பணிக்கு அமர்த்தி உள்ளன.

கார்கள், லாரிகளில் வெல்டிங் மற்றும் பாகங்களை பொருத்துதல், பழுக்களை தூக்குதல் போன்ற கடின வேலைகளை ரோபோக்கள் செய்வதன் மூலம் மனிதருக்கு ஏற்படக் கூடிய இடர்பாடுகளான அதிக வெப்பம், இரைச்சல் மற்றும் புகையினால் ஏற்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலைகளில் வேலை செய்வதை குறைக்கிறது.

 

5. சமூக ரோபோக்கள்

5. சமூக ரோபோக்கள்

வீட்டு வேலைகளை செய்வதைப் போலவே, சமூகத்திலும் மனிதரின் வெளித்தோற்றம், தகவல் தொடர்பு மற்றும் வாய்மொழி குறிப்புகளைக் கண்டறிந்து சாதாரண மனிதரைப் போல் உரையாடுகிறது.
இந்த ரோபோக்கள் நாம் கொடுக்கும் குறிப்புகளை அறிந்து கொண்டு நிஜ வாழ்க்கையில் தனி மனித உரையாடல்களையும் கையாளுகிறது.

6. பொருளாதாரம்

6. பொருளாதாரம்

உயர்தரமான நல்ல ரோபோக்கள் விற்பனை தரத்தை உயர்த்துகின்றன. மேலும் ரோபோக்கள் தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் ரோபோக்களானது, லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் பொருளாதார மேம்பாட்டிலும் முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது.

பின்வரும் காலங்களில் இந்தச் செயற்கை மனிதனால் இன்னும் பல கற்பனைக்கு எட்டாத அசாதாரண செயல்களை கண்கவர் மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் செய்ய இயலும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This is how robots will take over jobs in next 10-15 years

This is how robots will take over jobs in next 10-15 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X