2017 ம் ஆண்டு பட்ஜெட்டில் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை முடிவு செய்வது இவர்கள் தான்..!

பிரதமரின் பண மதிப்பைக் குறைத்தல் அறிவிப்பால் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் பட்ஜெட் எல்லோராலும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் அவருடன் இருக்கும் திறமையான அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டு வழங்க இருக்கும் 2017 ம் ஆண்டு பட்ஜெட்டில், வரவு - செலவு திட்டம் மற்றும் செயலாக்கம் ஆகிய இரண்டிலும் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

 

பிரதமரின் பண மதிப்பைக் குறைத்தல் அறிவிப்பால் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் பட்ஜெட் எல்லோராலும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

அசோக் லாவாசா, நிதித்துறை செயலாளர்

அசோக் லாவாசா, நிதித்துறை செயலாளர்

லாவாசா, 1980 ல் வெளி வந்த ஐஏஎஸ் அதிகாரி. இவர் அரியானா காவல்துறையில் பணியாற்றியவர். இவர் முந்தைய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு ஊழல் மற்றும் குற்றங்களை ஒழுங்குபடுத்தினார்.

லாவாசா, ஒரு தீவிர புகைப்படக் கலைஞர். இவர் இணைந்து எழுதிய 'Uncivil servant' என்ற புத்தகமானது, இந்த பட்ஜெட் திட்டத்தினை அமைக்கும் கடினமான பணிக்கு பெரும் உதவியாக இருந்தது.

நிதி செயலாளர் என்னும் துறையில், வரவு - செலவு திட்டத்தினை உருவாக்கும் போது அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பெரிய ஒதுக்கீடு மற்றும் அரசின் நிதி பற்றாக்குறை இலக்குகளுக்கான எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒரு சமநிலை இசைவைக் கொண்டு வந்துள்ளார்.

 

சக்திகாந்த தாஸ், செயலாளர், பொருளாதார தொடர்புகள் துறை

சக்திகாந்த தாஸ், செயலாளர், பொருளாதார தொடர்புகள் துறை

தாஸை விட சிறந்த முறையில் பட்ஜெட் திட்டத்தினை சரிவர தெரிந்த அதிகாரி யாரும் இருக்க முடியாது. பட்ஜெட் தயாரிக்க ஆரம்பித்த கால கட்டத்திலிருந்து, இணை செயலாளராக ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே பணியாற்றி உள்ளார்.

எந்த வித கோளாறுகளும் இல்லாத, எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய பேதுமானதான சீர்திருத்தங்களோடும் இந்த பட்ஜெட் திட்டம் எடுத்து வைக்க உள்ளது. மேலும் தனியார் துறைகள் அதிகமான அளவில் முதலீடு செய்ய கூடுதல் கருத்துக்களையும் வழங்கி உள்ளார்.

 

ஹஸ்முக் துபியா, வருவாய்த் துறை செயலாளர்
 

ஹஸ்முக் துபியா, வருவாய்த் துறை செயலாளர்

பண மதிப்பைக் குறைத்தல் அறிவிப்பின் பின்னர், தகவல் வெளிப்படுத்துதல் திட்டத்தின் கீழ் வரி வசூல் செய்யும் கடினமான பணியை எதிர் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இவர் குஜராத்திலிருந்து, நிதி சேவைகள் பிரிவிலிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டார். இவரின் சேவையால் வரித்துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களைக் குறைக்க முடிந்தது. மேலும் இவரது செயல்பாடு காரணமாகத் துறைகளில் இருந்த கருப்பு ஆடுகளை இனம் கண்டுகொள்ளவும் வழக்குகளைக் குறைக்கவும் முடிந்தது.

இந்த பட்ஜெட்டில் நேரடி வரிகள், விதி விலக்குகளை நீக்குதல், பெரு நிறுவன வரி விகிதம் குறைத்தலில் தொடங்கி பொருட்கள் மற்றும் சேவை வரிகளை நடைமுறைப்படுத்துவது எனக் கூர்ந்து ஆராயப்பட்டுள்ளது.

 

 நீரஜ் குமார் குப்தா, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளர்

நீரஜ் குமார் குப்தா, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளர்

செயலாக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிற சொத்துக்களை விற்கப்படுவதன் மூலம், ஆறு தனியார் நிறுவனங்களில் உள்ள அரசாங்கத்தின் பங்குகளை குறைக்க ஒப்புதல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதி ஆண்டில் குப்தா, பத்திரங்களை மீண்டும் வாங்குதல் திட்டத்தின் மூலம் அரசிற்கு ரூபாய் 15.982 கோடியைப் பணக்கார நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொடுத்தார். மேலும் அதிக பங்குகளை தனியாருக்கு விற்பதையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்.

 

அரவிந்த் சுப்பிரமணியன், தலைமை பொருளாதார ஆலோசகர்

அரவிந்த் சுப்பிரமணியன், தலைமை பொருளாதார ஆலோசகர்

மத்திய அதிகார சபையின் செயல்பாடு மற்றும் பட்ஜெட்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் காரணமான முக்கியமான நபர் இவர்.
கடந்த ஆண்டில் அரசு, தன் நிதி இலக்கினைப் பெற முடியவிலிலை. ஆனால் இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய தீர்வைக் கண்டு கொண்டுள்ளனர்.

பொருளாதார அறிக்கையானது வறுமையைக் கட்டுப்படுத்தும் வகையில் அடிப்படை வருமானத்தைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும் இதை ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.

 

அஞ்சுலி சிப் டுக்கள், நிதி சேவைகள் துறை செயலாளர்

அஞ்சுலி சிப் டுக்கள், நிதி சேவைகள் துறை செயலாளர்

பண மதிப்பைக் குறைத்தலைத் தொடர்ந்து, அரசு நடந்தும் நிதி நிறுவனங்களின் மூலம், அரசாங்கம் மின்னணு பரிவர்த்தனையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் உயர் நிலையில் இருக்கும்.

வங்கித் துறைகள் தவறான கடன்களைக் கொடுப்பது, அரசு தங்கள் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் சுமையைக் குறைக்க கூடுதல் வளங்களைக் கண்டறிய வேண்டும்.

அரசு நிர்வகிக்கும் பொது காப்பீட்டு பட்டியலை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி, தன் துணை நிறுவனங்களை இணைத்த பிறகு, பொதுத் துறை வங்கிகளை இணைப்பது பற்றி தெரிய வரும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These people will decide how much money you will save in this Budget

These people will decide how much money you will save in this Budget
Story first published: Saturday, January 21, 2017, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X