நீங்களே சொல்லிட்டா 35%, நாங்க பிடிச்சா 83%.. வருமான வரித்துறை அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய நிதித்துறை மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வருவமான வரித்துறை ஒருபுறம் மக்கள் மத்தியில் இருக்கும் கருப்புப் பணத்தைக் களைய பல திட்டங்களைத் தீட்டி வரும் நிலையில், மறுபுறம் அவர்களுக்கான தண்டனை மற்றும் அபராதம் வழங்கக் கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்கி வருகிறது.

இதற்காக வருமான வரி சட்டதிட்டங்களின் கீழ் புதிய திட்டத்தைக் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் எனத் தெரிகிறது.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் நடந்த பணபரிமாற்றத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கண்டறியப்பட்ட 1.5 லட்ச வங்கி கணக்காளர்களிடம் வருமான வரித்துறை ஏற்கனவே விசாரணையைத் துவங்கிய நிலையில், தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

சரியான பதில்

சரியான பதில்

வருமான வரித்துறை கேட்கும் கேள்விகளுக்குச் சரியான மற்றும் நம்பதகுந்த பதிலை அளிக்க வேண்டும் இல்லை என்றால், நண்பர்களிடம் வாங்கிய கடன், பரிசுகள், நன்கொடை, பரம்பரை நகைகள், வீடுகளில் செய்யப்பட்ட செய்யப்பட்ட செலவுகள் வரை அனைத்தையும் கேள்வி கேட்டகப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

அபராதம்

அபராதம்

வருமான குறித்த விசாரணையில் பதில்கள் வெளிப்படையாக இல்லையெனில் 83 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

தற்போது அபராத அளவு 35 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆலோசனை
 

ஆலோசனை

ஆனால் இதுவரை இப்புதிய அபராத அளவுகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளவில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அபராத மற்றும் விசாரணை முறைகளைக் கடுமையாக்கப்படுவதன் மூலம் இந்தியாவில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்க முடியும் என வருமான வரித்துறை நம்புகிறது.

கணக்கீட்டு

கணக்கீட்டு

வருமான வரித்துறை சட்டம் 115BBEயின் கீழ் தற்போது 30 சதவீதமாக இருக்கும் வரி விதிப்பு அளவுகள் 60 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து 15 சதவீத கூடுதல் கட்டணம் 3 சதவீத செஸ் வரி ஆகியவற்றுடன் சேர்த்து 10 சதவீத அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் வருமான வரித்துறையில் சிக்கும் தொகையில் 83.25 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

 

தவறாக பயன்படுத்துதல்

தவறாக பயன்படுத்துதல்

இந்நிலையில் இப்புதிய சட்டத்தை வருமான வரித்துறை தவறாக பயன்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amended income tax law harsh, prone to misuse by taxmen

Amended income tax law harsh, prone to misuse by taxmen - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X