புதிய எச்-1பி மசோதாவால் அதிகம் பாதிக்கப்படபோவது 'இன்போசிஸ்'..!

புதிய மசோதாவால் அதிகம் பாதிக்கப்படப்போகும் டாப் 10 நிறுவனங்கள்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எச்-1பி விசா மசோதாவை தாக்கல் செய்து முழுமையாக ஒப்புதல் அளிக்கப்படாத நிலையிலேயே இந்திய ஐடி நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளது.

 

இப்புதிய மசோதாவில், இனி எச்-1பி விசா பெற ஒரு நிறுவனத்தின் ஊழியர் குறைந்தபட்சம் சம்பளம் அளவு 1,30,000 டாலராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் இப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்தப் புதிய மசோதாவால் அதிகம் பாதிக்கப்படப்போகும் நிறுவனங்கள் யாவை..? அதன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் எவ்வளவு..? என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

மசோதா

மசோதா

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சோயி லோபெரென் ‘High-Skilled Integrity and Fairness Act of 2017' என்ற மசோதாவைத் தாக்கல் செய்தார். தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சியைச் சார்ந்தவர், சோயி ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர் (ஓபாமா கட்சி உறுப்பினர்.)

200 சதவீத அதிகச் சம்பளம்

மேலும் இந்த மசோதாவில் நிறுவனம் 200 சதவீதம் அதிகச் சம்பளம் வழங்கினால் ஊழியர்களுக்கு எவ்விதமான தடையுமின்றி எச்-1பி விசா வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரட்டிப்பு அளவு..

இரட்டிப்பு அளவு..

1989ஆம் ஆண்டு முதல் எச்-1பி விசா பெற வேண்டும் என்றால் ஒருவர் குறைந்தபட்சம் 60,000 டாலர் சம்பளத்தை நிறுவனம் அளிக்க வேண்டும். இன்று வரை அதேசட்டம் தான் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் அளவை 1,30,000 டாலராக உயர்ந்து மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாட்டுக்குக் குறிப்பிட்ட அளவிற்குத் தான் எச்-1பி விசா அளிக்க வேண்டும் என்று தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளில் ஒன்றாக உள்ளது. இக்கட்டுப்பாடு புதிய மசோதாவில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இப்புதிய மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் இருந்து இனி எத்தனை பேர் வேண்டுமானாலும் அமெகரிக்கா செல்ல முடியும், ஆனால் இதற்குச் சம்பள வரைமுறை உள்ளது.

 

பாதிப்பும் சம்பளமும்..
 

பாதிப்பும் சம்பளமும்..

இப்புதிய மசோதாவால் அதிகம் பாதிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள அளவுகளைப் பார்க்கலாம்.

தற்போது அளிக்கப்படும் சம்பளத்தைப் பார்த்தாலே தெரியும் இந்தியா ஐடி நிறுவனங்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்படப் போகிறது என்று.

மேலும் இங்கு நிறுவனங்கள் எவ்வளவு ஊழியர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்தியுள்ளது என்ற தகவல்களும் அடங்கி Labor Condition Application (LCA) எண்ணிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்திய மென்பொருள் ஏற்றுமதி சந்தையில் முதல் இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனம் தான் இதில் அதிகளவில் பாதிக்கப்படப் போகிறது.

எல்சிஏ எண்ணிக்கை: 25,405
சராசரி சம்பளம்: $81,705

 

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

எல்சிஏ எண்ணிக்கை: 13,134
சராசரி சம்பளம்: $76,099

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

எல்சிஏ எண்ணிக்கை: 17,479
சராசரி சம்பளம்: $93,213

விப்ரோ

விப்ரோ

எல்சிஏ எண்ணிக்கை: 10,607
சராசரி சம்பளம்: $72,720

எல் அண்ட் டி

எல் அண்ட் டி

எல்சிஏ எண்ணிக்கை: 3,092
சராசரி சம்பளம்: $76,755

அக்சென்சர்

அக்சென்சர்

எல்சிஏ எண்ணிக்கை: 9,479
சராசரி சம்பளம்: $81,585

டெலாய்ட்

டெலாய்ட்

எல்சிஏ எண்ணிக்கை: 1,646
சராசரி சம்பளம்: $75,705

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

எல்சிஏ எண்ணிக்கை: 5,370
சராசரி சம்பளம்: $74,628

ஆப்பிள்

ஆப்பிள்

எல்சிஏ எண்ணிக்கை: 1,660
சராசரி சம்பளம்: $141,294

ஐபிஎம்

ஐபிஎம்

எல்சிஏ எண்ணிக்கை: 12, 381
சராசரி சம்பளம்: $87,378

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 companies that will be adversely affected on US’ new H1B visa rule

Top 10 companies that will be adversely affected on US’ new H1B visa rule
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X