அசாதாரண விஷயத்தையும் அசால்ட்டாக கலக்கும் 'இஸ்ரோ'-வின் பிசினஸ் படு ஜோர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகள் அதீத பொருட் செலவில் பிரம்மாண்டமாக விண்வெளி ஆராய்ச்சி செய்யும் வேலையில் மாட்டு வண்டியிலும், சைக்கிள்களிலும் ராக்கெட்டின் உதிரிப் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் கொண்டு சென்று வெற்றிப் பாதையை அமைத்த இஸ்ரோ, இன்று 104 செயற்கைக்கோள்களை ஓரே ராக்கெட்டில் ஏவி உலகச் சாதனையைப் படைத்துள்ளது.

 

இந்திய வெற்றியின் பூரிப்பு இந்தியர்களாகிய நாம் அனைவரும் உணர்ந்த இத்தருணத்தில், பிற நாட்டு செயற்கைக்கோள் விண்வெளிக்குக் கொண்டு செல்வதன் மூலம் இஸ்ரோவிற்கு என்ன லாபம் உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வெற்றி, சாதனை, மகிழ்ச்சியைத் தாண்டி இஸ்ரோ-விற்கு மிகப்பெரிய லாபம் இதில் உண்டு.

104 செயற்கைக்கோள்

104 செயற்கைக்கோள்

இந்திய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO, ஒரே ராக்கெட்டில் சுமார் 104 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் பணியில் மிகப்பெரிய அளவிலான வெற்றியைக் கண்டது.

விண்வெளி ஆராய்ச்சியில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகள் செய்யாததை இந்தியா வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.

 

முன் வரிசை

முன் வரிசை

இந்த வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈட்டுப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

ஆனால் இதிலும் மிகப்பெரிய வர்த்தகமும், அதன் மூலம் லாபமும் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

அன்ட்ரிக்ஸ்

அன்ட்ரிக்ஸ்

இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ANTRIX செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம் 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுப் பல நாடுகளின் அரசு மற்றும் தனியார் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

44 செயற்கைக்கோள்
 

44 செயற்கைக்கோள்

ஜனவரி 2014 முதல் டிசம்பர் 2016 வரையிலான காலத்தில் ANTRIX நிறுவனத்தின் வாயிலாகச் சுமார் 44 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது, இதில் சுமார் 693 கோடி ரூபாய் வருமானத்தையும் பெற்றுள்ளது.

அதாவது ஒரு செயற்கைக்கோளுக்கு 15 கோடி ரூபாய் என்ற கணக்கில் கட்டணத்தை வசூல் செய்கிறது.

 

வருவாயில் தொடர் உயர்வு

வருவாயில் தொடர் உயர்வு

அன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் வாயிலாக இஸ்ரோ மிகப்பெரிய அளவிலான லாபத்தைப் பெற்று வருகிறது.

கடந்த சில வருடங்களில் அன்ட்ரிக்ஸ்-இன் வருவாய் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. குறிப்பாக 2009-10 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 884 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2015-16 நிதியாண்டில் 1,924 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

லாபம்

லாபம்

அதேபோல் இந்நிறுவனத்தின் லாபமும் தத்தகம் காலகட்டங்களில் 108 கோடி ரூபாயில் இருந்து 209 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

23 நாடுகள்

23 நாடுகள்

104 சாதனை செயற்கைகோள்களுடன இதுவரை இஸ்ரோ 23 நாடுகளில் 1080 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் அமெரிக்க நாட்டின் செயற்கை கோள் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி

போட்டி

தற்போதைய நிலையில் விண்வெளியில் செயற்கைக்கோள்-ஐ செலுத்தும் சந்தை கூடப் போட்டி நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. இச்சந்தையில் இஸ்ரோ உட்பட ஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9, ரஷ்யாவின் ப்ரோடான் யுஎல்ஏ, ஏரியன்ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்கள் இருக்கும் நிலையில் அமேசான் நிறுவனமும் இச்சந்தையில் ப்ளூ ஆர்ஜின் என்ற பெயருடன் புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.

விலை மலிவு..

விலை மலிவு..

ஆனால் இச்சந்தையில் பிற நாட்டு நிறுவனங்களை ஒப்பிடுகையில் இஸ்ரோ மிகவும் குறைந்த கட்டணத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ISRO has also business apart from space research and its most Successful

ISRO has also business apart from space research and its most Successful - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X