இன்று முதல் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து வாரம் ரூ.50,000 பணம் எடுக்கலாம்: ஆர்பிஐ

இன்று முதல் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து வாரம் ரூ.50,000 பணம் எடுக்கலாம்: ஆர்பிஐ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 8-ம் தேதி செல்லாது என்று அரசு அறிவித்ததில் இருந்து சேமிப்புக் கணக்குகள் மற்றும், வங்கி ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இன்று(திங்கள்) முதல் 50,000 ரூபாய் வரை தினமும் பணம் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

 

ஆர்பிஐ வங்கி ஏற்கனவே மார்ச் 13-ம் தேதி முதல் ஏடிஎம் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க இருக்கும் வரம்பை முழுவதும் விலக்கிக்கொள்ளப்படும் என்றும், மீண்டும் பழைய நிலைக்குப் பரிவர்த்தனைகள் செய்ய இயலும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டுகளை மாற்றிய பிறகு மத்திய வங்கி நிதானமாகப் பணம் எடுக்கும் உச்சவரம்பை உயர்த்தி வருகின்றது.

ஏடிஎம் உச்ச வரம்பு எவ்வளவு

ஏடிஎம் உச்ச வரம்பு எவ்வளவு

டிசம்பர் 30-ம் தேதி ஆர்பிஐ 24,000 ரூபாய் வரை சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுக்க அனுமதித்தது. பின்னர் ஜனவரி 16-ம் தேதி முதல் ஏடிஎம்களில் இருந்து தினம் 4,500 ரூபாய் என்று இருந்த உச்ச வரம்பு உயர்த்தப்பட்டு 10,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்தனர்.

10,000 ரூபாய் அபராதம்

10,000 ரூபாய் அபராதம்

இதற்கிடையில் மக்களவையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் வைத்திருந்தால் அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது.

வெளிநாட்டிற்குப் பயணிகள்
 

வெளிநாட்டிற்குப் பயணிகள்

வெளிநாட்டிற்குப் பயண மேற்கொண்டு உள்ளவர்கள் குறிப்பிட்ட ஆர்பிஐ வங்கி அலுவலகங்களில் மட்டும் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்துப் பழைய ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

15.4 லட்சம் ரூபாய்

15.4 லட்சம் ரூபாய்

நவம்பர் மாதம் 15.4 லட்சம் ரூபாய் புழக்கத்தில் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI: From today, cash withdrawal limit for savings account is Rs 50K

RBI: From today, cash withdrawal limit for savings account is Rs 50K
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X