கடனில் தத்தளிக்கும் தமிழகத்தில் ஜெ. போலவே இலவசங்களை கொட்டும் 'ஈபிஎஸ்'.. பணத்திற்கு எங்கே போவது..?

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றத்தை அடுத்து ஜெயலலிதாவை போன்றே இலவசங்களை அறிவிக்க ஆரம்பித்துள்ளார்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேறியதை அடுத்து ஜெயலலிதாவை போன்றே இவரும் இலவசங்களை அறிவிக்க ஆரம்பித்துள்ளார்.

 

தற்போது என்ன கேள்வி என்றால் இதற்கான நிதி எங்கு இருந்து வருகின்றது என்பதே?

2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படிப் பதவி ஏற்ற உடன் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடு கையெழுத்திட்டாரோ அதே போன்று தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியும் 500 கடைகளை மூடக் கையெழுத்திட்டுள்ளார்.

பிற உத்தரவுகள்

பிற உத்தரவுகள்

திங்கட்கிழமை அதிமுகத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நலத் திட்டங்களில் பலவற்றுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது உத்தரவுகள் பிறப்பித்துக் கையெழுத்திட்டுள்ளார்.

இரண்டு சக்கர வாகனங்கள்

இரண்டு சக்கர வாகனங்கள்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரண்டு சக்கரம் வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

மகப்பேறு உதவித் தொகை

மகப்பேறு உதவித் தொகை

மகப்பேறு உதவித் தொகை 12,000 ரூபாயாக இருந்ததை 18,000 ரூபாயாக உயர்த்தி அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்.

வேலையற்றோர் உதவித் தொகை
 

வேலையற்றோர் உதவித் தொகை

வேலையற்றோர் பெற்று வரும் உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

மீனவர்கள் குடியிருப்பு

மீனவர்கள் குடியிருப்பு

மீனவர்களுக்குக் குறைந்த செலவில் வீடு கட்டித் தரும் திட்டத்திற்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் அளித்துள்ளார்

எல்லாம் விளம்பரத்திற்காகத் தான்

எல்லாம் விளம்பரத்திற்காகத் தான்

எல்லா ஆனைகளும் விளம்பரத்திற்காகத் தான் என்றும் இல்லை என்றால் நலத்திட்டங்களை அளிக்க மக்கள் சில மக்கள் அழைத்து வரப்பட்டு இருப்பார்கள் என்றும் அதிமுகத் தரப்பினர்களில் சிலர் கூறாகின்றனர்.

மக்கள் கண்களை மறைக்கும் அறிவிப்புகள்

மக்கள் கண்களை மறைக்கும் அறிவிப்புகள்

பொதுமக்களை ஏமாற்றி, தமிழக மக்களின் கண்களை மறைக்கும் விதமாகவே இந்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேம்பாட்டு ஆய்வு ஆசிரிய உறுப்பினர் எஸ் ஆனந்தி கூறுகிறார்.

பழைய நிலைக்கு மாறிய தமிழக அரசியல்

பழைய நிலைக்கு மாறிய தமிழக அரசியல்

முன்னாள் முதல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இப்போது தான் தமிழக அரசியல் பழைய நிலைக்கு மாறியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டம், முடிந்த உடன் ஓபிஎஸ் ராஜிநாமா, யார் அடுத்த முதல்வர், ரெசார்ட் அரசியல் போன்றவை தமிழகத்தைப் பரப்பாகவே வைத்திருந்தது.

மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் உத்தி

மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் உத்தி

இப்போது தமிழக மக்கள் ஓபிஎஸ் தான் முதல்வராக வேண்டும் என்று இருந்த போதிலும் அதிமுகக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். இப்படி ஒரு சூழலில் ஓபிஎஸ் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அரசியல் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனாலும் நம்மிடம் இருக்கும் ஒரே கேள்வி, அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்களுக்கு எல்லாம் எங்கு இருந்து நிதி வருகின்றது என்பதே ஆகும்.

 

அரசின் எண்ணம்

அரசின் எண்ணம்

அரசைப் பொருத்த வரை மக்களிடம் நல்ல பேரை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே, அவர்களுக்கு நிதி பற்றி எல்லாம் கவலையே இல்லை என்று கூறுகின்றார் ஆனந்தி.

மது வருவாய்

மது வருவாய்

தமிழகத்தின் மொத்த வருவாயில் 30 சதவீதம் 6,800 மதுக் கடைகளில் இருந்து தான் வருகின்றது. 2016-ம் ஆண்டிற்கு முன்பு வரை ஒரு நாளைக்கு 68 முதல் 68 கோடி வரை வருமானம் மதுக் கடைகளில் இருந்து கிடைத்து வந்துள்ளது.

மதுக் கடைகளை மூடியதால் பெரிய வருவாய் இழப்பு இல்லை

2015-2016 நிதி ஆண்டில் மொத்த டாஸ்மாக் வருவாய் 26,188 கோடி ரூபாய். டாஸ்மாக் கடைகளை மூடல் முதல் சுற்றுக்குப் பிறகும் பெரிதாக வருவாயில் எந்த மாற்றமும் இல்லை. வார நாட்களில் 67-70 கோடிகளும், வார இறுதி நாட்களில் 90 கோடியும் தமிழக அரசுக்கு வருவாய் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

 

எப்போது மது வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு

எப்போது மது வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு

தமிழகத்தில் மொத்தமாக 50 முதல் 60 சதவீத மதுபான கடைகளை மூடினால் தான் அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடும் என்று பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் கூறுகின்றார். இப்போது மதுக் கடைகளை மூடினாலும், அடுத்த ஒன்று இரண்டு கிலோ மீட்டார்களில் அடுத்த மதுக் கடை உள்ளது என்றும் அதனால் வருவாய் குறைய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

வரி வருவாய் இழப்பு

வரி வருவாய் இழப்பு

இந்திய மாநிலங்களில் அதிகமான வரி வருவாய் பெற்று வந்த தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 2014-2015 மற்றும் 2015-2016 நிதி ஆண்டுகளில் 10 சதவீதமாக இருந்தது. இதுவே 2016-2017 நிதி ஆண்டில் பதிக்கும் குறைவாக 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தமிழகத்தின் மொத்த வருவாய்

தமிழகத்தின் மொத்த வருவாய்

தமிழகத்தின் மொத்த வருவாயில் 61 சதவீதம் வரி வருவாயாகவே இருந்தது. இதில் வணிக வரி பெறும் பங்கையும், கலால் வரி அடுத்த நிலையிலும் இருந்து வந்தது. 2016-2017 நிதி ஆண்டில் 67,630 கோடி ரூபாய் வரி வருவாய் பெற்ற தமிழகத்திற்கு மது பானங்களில் வரியாக மட்டும் 6,630 கோடி ரூபாய் வந்துள்ளது.

அன்புமணி ராமதாஸ் கருத்து

அன்புமணி ராமதாஸ் கருத்து

தமிழகத்தில் மொத்தம் 7000 மதுக்கடைகள் இருக்கும் நிலையில், அவற்றில் 500 கடைகள் மட்டுமே கடந்த ஆண்டு ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன் மூடப்பட்டன. அப்போதே படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதையெல்லாம் செயல்படுத்தாத தமிழக அரசு, இப்போது மேலும் 500 கடைகளை மூடுவதாக அறிவிப்பதால் பயனில்லை. இதே வேகத்தில் சென்றால் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மொத்தம் 14 ஆண்டுகள் ஆகும். அதற்குள் மதுவால் சரி செய்ய முடியாத அளவுக்குச் சீரழிவுகள் ஏற்பட்டுவிடும். 500 மதுக்கடைகள் மூடப்படும் என்பது ஏமாற்று வேலை என்றும் கூறினார்.

உச்ச நீதி மன்றம் மற்றும் மத்திய அரசு உத்தரவு

உச்ச நீதி மன்றம் மற்றும் மத்திய அரசு உத்தரவு

உச்ச நீதி மன்றம் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மத்திய அரசு மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகள் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதனைப் பார்க்கும் போது தமிழக அரசு தானாக முன்வந்து இந்த மதுக் கடைகளை மூடுவதாக ஏதும் தெரியவில்லை.

 

ஆர்பிஐ தரவு

ஆர்பிஐ தரவு

இந்திய ரிசர்வ் வங்கி தரவின் படி 2015-2016ம் நிதி ஆண்டில் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து இருந்தது என்றும், இதற்காக அரசு 2017-2018ம் நிதி ஆண்டில் 40,534 கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டும் அல்லது 2.96 சதவீத மாநில வளர்ச்சி விகிதத்தை இழக்க நேரிடும் என்றும் கூறுகின்றது.

தமிழகத்தின் பொருளாதார நிலை

தமிழகத்தின் பொருளாதார நிலை

மேலும் தமிழகத்தின் பொருளாதார நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இறக்கத்தைச் சந்தித்து வருகின்றது. இதற்கு உதாரனாம் தமிழகத்திற்கு வர வேண்டிய பல நிறுவனங்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா செல்வதும், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்களும் பிற மாநிலங்களுக்குச் செல்வதும் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu politics back to freebies, who is responsible for funds?

Tamil Nadu politics back to freebies, who is responsible for funds?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X