7வது முறையாக சவரன் தங்க பத்திரத்தை வெளியிடுகிறது மத்திய அரசு..!

நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த சவரன் தங்கப் பத்திர திட்டம் 7வது முறையாகப் பிப்ரவரி 27 முதல் மார்ச் 3-ம் தேதி வரை வெளிவர இருக்கின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் மீதான ஆர்வத்தைக் குறைத்து, தங்கத்தைப் போன்றே லாபம் அளித்து, தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த சவரன் தங்கப் பத்திர திட்டம் 7வது முறையாகப் பிப்ரவரி 27 முதல் மார்ச் 3-ம் தேதி வரை வெளிவர இருக்கின்றது.

 

தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டிற்கு 2.5 சதவீதம் வரை முதலீட்டாளர்கள் வட்டி பெற முடியும்.

எத்தனை நாட்களுக்குத் தங்கப் பத்திரம் வழங்கப்படும்

எத்தனை நாட்களுக்குத் தங்கப் பத்திரம் வழங்கப்படும்

இதற்கான விண்ணப்பம் 2017, பிப்ரவரி 27 முதல் மார்ச் 3-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் பங்கு சந்தையில் கிடைக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பின்னர் இதற்கான பத்திரங்கள் மார்ச் 17 தேதி விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

வட்டி எப்போது வழங்கப்படும்

வட்டி எப்போது வழங்கப்படும்

சவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அரை ஆண்டுதோறும் தங்களது முதலீட்டிற்கான வட்டியைப் பெற முடியும். கடைசி ஒரு வருட முதலீட்டில் மட்டும் அரை ஆண்டுதோறும் வழங்காமல் திட்டத்தின் முதிர்வு காலத்தின் போது வழங்கப்படும்.

சவரன் தங்கப் பத்திரங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது
 

சவரன் தங்கப் பத்திரங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது

இதுவரை தங்கப் பத்திரம் வெளியிட்ட போது 3,809 கோடிகள் வரை முதலீடுகளை அரசு பெற்றது. இந்தச் சவரன் தங்கப் பத்திர திட்டம் பிரதமர் மோடி அவர்களால் 2015 ஆம் ஆணு அறிமுகப்படுத்தப்பட்டது.

மூன்று திட்டங்கள்

மூன்று திட்டங்கள்

சவரன் தங்கப் பத்திரம், தங்க நாணயம் திட்டம், தங்கம் பணமாக்கும் திட்டம் என மூன்று பெயரில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தோல்வி அடைந்த ஒரு திட்டம்

தோல்வி அடைந்த ஒரு திட்டம்

இதில் வீட்டில் உள்ள தங்கத்தை முதலீடு செய்யும் திட்டமான தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் மட்டும் தோல்வியைச் சந்தித்தது.

2017-2018ம் நிதி ஆண்டின் இலக்கு

2017-2018ம் நிதி ஆண்டின் இலக்கு

2017-2018ம் நிதி ஆண்டில் மட்டும் 5,000 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015-2016ம் நிதி ஆண்டில் 1,318 கோடி ரூபாய் தங்க பத்திரம் மூலமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சவரன் தங்க பத்திரம் திட்டத்தில் எங்கெல்லாம் முதலீடு செய்ய முடியும்..?

சவரன் தங்க பத்திரம் திட்டத்தில் எங்கெல்லாம் முதலீடு செய்ய முடியும்..?

தங்கப் பத்திரங்களை வங்கிகள், தபால் நிலையங்கள், பங்குச் சந்தை அலுவலகங்கள், தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை ஆகிய இடங்களில் பெறலாம்.

முதலீடு காலம்

முதலீடு காலம்

தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தற்கான கால அளவு 8 வருடங்கள் ஆகும். ஆனால் 5 வது வருடம் முதல் இடையில் வெளியேற முடியும். தங்கப் பத்திரத்தை சமர்ப்பித்து 20,000 ரூபாய் மட்டுமே பணமாகப் பெற முடியும், மிதத் தொகையை வங்கி கணக்கில் அல்லது டிமாண்ட் டிராப்ட்டுகளாம மட்டுமே பெற இயலும்.

50 ரூபாய் ஆஃபர்

50 ரூபாய் ஆஃபர்

சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் சலுகையும் அளிக்கின்றது.

அதிகபட்சமாக எவ்வளவு முதலீடு செய்ய முடியும்

அதிகபட்சமாக எவ்வளவு முதலீடு செய்ய முடியும்

தனிநபர் ஒருவரால் அதிகபட்சமாக 500 கிராம் வரை மட்டுமே சவரன் தங்கப் பத்திர திட்டம் மூலமாக முதலீடு செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Narendra Modi govt to launch 7th tranche of sovereign gold bonds on Monday

Narendra Modi govt to launch 7th tranche of sovereign gold bonds on Monday
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X