600 ஊழியர்களுக்கு வேலை போச்சு..! நிறுவனர்களுக்கு 1 வருட சம்பளம் போச்சு..!

ஸ்னாப்டீல் நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் இ-காமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பணம் செயற்பாடுகள் பிரிவுகளில் இருந்து 600 ஊழியர்களைப் பணியை விட்டு நீக்க இருக்கின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்னாப்டீல் நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் இ-காமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பணம் செயற்பாடுகள் பிரிவுகளில் இருந்து 600 ஊழியர்களைப் பணியை விட்டு நீக்க இருக்கின்றது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி ஒரு வாரமாக இதற்கான பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், 500 முதல் 600 ஊழியர்கள் வரை ஸ்னாப்டீல், வல்கன் (லாஜிஸ்டிக்ஸ்) மற்றும் பீரிசார்ஜ் (டிஜிட்டல் பணம் செலுத்தும் வணிகம்) பிரிவுகளில் இருந்து நீக்கப்படலாம்.

அனைத்து நிலை ஊழியர்களும் வெளியேற்றப்பட வாய்ப்பு

அனைத்து நிலை ஊழியர்களும் வெளியேற்றப்பட வாய்ப்பு

பணியாளர்கள் வெளியேற்றத்தில் அனைத்து நிலையில் உள்ள ஊழியர்களும் அடங்குவார்கள் என்றும் இதற்கான பணிகள் இன்னும் சில்ல நாட்களில் முடிந்துவிடும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று வருடங்கள் லாபத்தில் இயங்கிய நிறுவனம்

மூன்று வருடங்கள் லாபத்தில் இயங்கிய நிறுவனம்

இந்தியாவில் மூன்றாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் துவங்கிய மூன்று வருடங்களும் லாபத்தில் தான் இயங்கி வந்தது.

2016-2015-ம் நிதி ஆண்டில் மட்டும் 56 சதவீதம் விற்பனை அதிகரித்து 1,457 கோடி ரூபாய் வருவாயாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால் அதே நேரம் நட்டம் இரண்டு மடங்காக அதாவது 2,960 கோடி ரூபாயாகக் காண்பிக்கப்பட்டது.

 

டீலில் விட்ட விற்பனையாளர்கள்
 

டீலில் விட்ட விற்பனையாளர்கள்

ஸ்னாப்டீல் நிறுவனம் தினசரியாகக் குறைந்த அளவு மட்டுமே பொருட்களை விநியோகம் செய்து வந்ததால் பல விற்பனையாளர்கள் ஸ்னாப்டீலை விட்டு வெளியேறினர். குறைந்தபட்சம் 300 விற்பனையாளர்கள் வெளியேறி இருக்கலாம் என்றும் இதற்கு முக்கியக் காரணமாகத்தான் ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு நட்டம் அதிகமானதாகவும், பணம் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

தீபாவளி விற்பனை

தீபாவளி விற்பனை

தீபாவளி விற்பனையின் போது செய்யப்பட்ட விளம்பரங்களால் நல்ல விற்பனை ஏற்பட்டாளும் மீண்டும் பொருட்களை டெலிவரி செய்வதில் தாமதம் செய்யத் துவங்கியது ஸ்னாப்டீல். இதனால் விற்பனையாளர்கள் இப்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.

சாப்ட் பேங்க் வெளியேறியது

சாப்ட் பேங்க் வெளியேறியது

மேலும் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளரான ஜப்பானின் சாப்ட் பேங்க் பங்குகளின் மதிப்பீடு அளவைக் குறைத்து, பின்னர் இப்போது நிறுவனத்தை விட்டே வெளியேற முடிவு செய்துள்ளது ஸ்னாப்டீல் நிறுவனத்திற்குப் பெறும் இழப்பாக உள்ளது.

மார்கெட்பிளேஸ் ஷாபோ

மார்கெட்பிளேஸ் ஷாபோ

இவை மட்டும் இல்லாமல் ஸ்னாப்டீல் நிறுவனம் நுகர்வோர் - நுகர்வோருக்கான மார்கெட்பிளேஸ் ஷாபோவை இழுத்து மூட இருப்பதாக அறிவித்துள்ளது.

நிறுவனர்கள் சம்பளம் வேண்டாம் என்று அறிவிப்பு

நிறுவனர்கள் சம்பளம் வேண்டாம் என்று அறிவிப்பு

இப்போது ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சிக்கலால் பஹல் மற்றும் இணை நிறுவனர் ரோஹித் பன்சால் இருவரும் ஒரு வருடத்திற்கு 100 சதவீதம் சம்பளம் வாங்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கான முடிவை இருவரும் கலந்து ஆலோசித்து நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரிதாகக் கவனம் செலுத்தாது நம் தவறு என்றும் அதற்காக ஊழியர்களை வெளியேற்றுவதற்கு முன் தங்களது சம்பளத்தை விட்டுத் தர முடிவுசெய்துள்ளனர்.

 

நிறுவனத்தைத் தவறாக வழிநடத்திச் சென்றுவிட்டோம்

நிறுவனத்தைத் தவறாக வழிநடத்திச் சென்றுவிட்டோம்

மேலும் ஸ்னாப்டீல் நிறுவன ஊழியர்களுக்குப் பஹல் எழுதிய கடிதத்தில் நாங்கள் நிறுவனத்தைத் தவறாக வழிநடத்திச் சென்றுவிட்டோம், துவக்கத்தில் நல்ல வளர்ச்சியை அளித்த வணிகத்தை நாங்கள் மேலும் மெருகேற்றக் கவனம் செலுத்தாததையே இது காட்டுகின்றது.

எனவே நாங்கள் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டு புதிய திட்டங்களை வெளியிட்டும் பெரிதாக லாபம் ஈற்ற முடியாமல் போய்விட்டது, தற்போது உள்ள சூழலில் இருந்து வெளிவர நிறுவனம் பல கடினமான முடிவுகளை எடுக்க உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

வருத்தம்

வருத்தம்

எங்களுடன் சேர்ந்து உழைத்த சில சகத் தொழிலாளர்களைப் பணியை வீட்டு நீக்குவது எங்களுக்கு மிகவு வறுத்ததை அளிக்க இருக்கின்றது என்றும் பஹல் கூறினார். ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இப்போது 8,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிரீசார்ஜ் நிறுவன தலைமை செயல் அதிகாரி

பிரீசார்ஜ் நிறுவன தலைமை செயல் அதிகாரி

சில நாட்கள் முன்பு ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 2015 ஆண்டுப் பணிக்கு சேர்ந்து பிரீசார்ஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த கோவிந்த ராஜன் ராஜிநாமாவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று பாதிக்கப்பட்ட பிற நிறுவனங்கள்

இதே போன்று பாதிக்கப்பட்ட பிற நிறுவனங்கள்

நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக ஸ்பைஸ் ஜெட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கடைப்பிடித்த சம்பளத்தை விட்டுத் தந்த முடிவையே இருவரும் தேர்வுசெய்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் இதே போன்ற சூழல் ஆப்பிள் டெஸ்லா, அமேசான், நெட்ஃபிக்ஸ், லெகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் எதிர்கொண்டதையும் நினைவு கூர்ந்துள்ளார் பஹல்.

இப்போது இருக்கும் சூழலில் ஸ்னாப்டீல் நிறுவனம் பெரிதாக எந்த முடிவு எடுக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டால் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மூன்றாம் இடத்தைச் சாப்க்ளுஸ், பேடிஎம் நிறுவனங்களுக்கு விட்டுத்தரும் நிலைக்குத் தள்ளப்படும்.

 

ஸ்னாப்டீல் என்ன செய்தால் நல்லது

ஸ்னாப்டீல் என்ன செய்தால் நல்லது

இப்படிப்பட்ட கடினமான சூழலில் ஸ்னாப்டீல் நல்ல லாபத்தைப் பெறவில்லை என்றால் முதலீடுகளைத் திரட்டுவதில் சிரமம் ஏற்படும். பிளிப்கார்ட் எப்படி நல்ல விலை மதிப்புடன் விற்பனனை செய்ய மைந்தரா நிறுவனத்தை வைத்துள்ளதோ அதே போன்று ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கும் இணை நிறுவனம் தேவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Snapdeal To Cut 600 Jobs, Co- Founder Kunal Bahl Admits 'Mistake' in Biz Plan

Snapdeal To Cut 600 Jobs, Co- Founder Kunal Bahl Admits 'Mistake' in Biz Plan
Story first published: Friday, February 24, 2017, 14:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X