2017-ம் ஆண்டு 9.5 சதவீதம் வரை நீங்கள் சம்பளம் உயர்வு பெறலாம்..!

2017-ம் ஆண்டு நீங்கள் இவ்வளவு சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017-ம் ஆண்டு ஊழியர்கள் சராசரியாக 9.5 சதவீதம் வரை சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம், ஆனால் இது சென்ற ஆண்டை விடக் குறைவு ஆகும். ஆனால் நல்ல செயல்திறன் உடைய ஊழியர்களுக்கு அதிகபட்ச உயர்வை அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

 

மனிதவள ஆலோசனை நிறுவனம் ஏயான் ஹெவிட் ஆண்டுச் சம்பள உயர்வு குறித்த சர்வே ஒன்றை நடத்தி உள்ளது. இதன் படி 2016-ம் ஆண்டு இருந்த 10.2 சதவீதம் சம்பள உயர்வுக்கும் குறைவாக 9.5 சதவீதம் மட்டுமே இந்த ஆண்டுப் பெற முடியும் என்று கூறியுள்ளது.

குறைந்த வரும் சம்பள உயர்வு

குறைந்த வரும் சம்பள உயர்வு

கடந்த சில வருடங்களாகச் சம்பள உயர்வு குறைந்தே வருகின்றது. 2007-ம் ஆண்டு 15.1 சதவீதமாக இருந்த சம்பள உயர்வு 2017-ம் ஆண்டு 9.5 சதவீதம் அளவிற்குக் குறைந்துள்ளது. ஆனால் அதிகளவு செயல்திறன் உள்ளவர்களுக்குச் சம்பள உயர்வு அதிகமாகவும் இருந்துள்ளது.

சர்வே என்ன கூறுகின்றது

சர்வே என்ன கூறுகின்றது

1000 நிறுவனங்கள் இடையே நடத்தப்பட்ட இந்தச் சர்வேயின் படி 2016-ம் ஆண்டை விடச் சற்று குறைந்த அளவே சம்பள உயர்வு இருக்கும். இந்திய நிறுவனங்கள் உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்டதைக் காட்டுகின்றது.

பிரிக்ஸிட், செல்லா ரூபாய் நோட்டு விவகாரம், அமெரிக்காவில் அமைந்துள்ள புதிய அரசு போன்றவை மட்டும் இல்லாமல் மேலும் நிறையக் காரணங்களை இந்தச் சர்வே அலசி ஆராய்ந்துள்ளது.

 

செயல்திறன் மற்றும் அறிவு
 

செயல்திறன் மற்றும் அறிவு

நிறுவனங்கள் செயல்திறன் மற்றும் முக்கியத் திறமை போன்றவற்றில் கவனம் செலுத்துவது அதிகரித்துள்ளது. டாப் மற்றும் ஓர் அளவு செயல்திறன் உடவற்களுக்கு இடையேயான சம்பள உயர்வும் விகிதமும் பெரிதளவில் மாற்றம் அடைந்துள்ளது. அதிகமான செயல் திறன் உடைய ஊழியர்களுக்குக் குறைவான செயல் திறன் உடைய ஊழியர்களை விட 1.8 மடங்கு வரை அதிகச் சம்பளம் உயர்வு அளிக்கின்றது.

திறன் மேலாண்மை

திறன் மேலாண்மை

திறன் மேலாண்மையில் தொழில் வளர்ச்சி, கற்றல் மற்றும் வளர்ச்சி, சர்வதேச மற்றும் செயல்பாட்டு இயக்கம், மற்றவர்கள் மத்தியில் தலைமை அணுகல் போன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை ஆராய்ந்த பிறகு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான திறனை முடிவு செய்கின்றன.

ஆசிய - பெசிபிக் கண்டங்களின் இந்தியாவில் தான் அதிகம்

ஆசிய - பெசிபிக் கண்டங்களின் இந்தியாவில் தான் அதிகம்

ஆசிய - பெசிபிக் கண்டங்களுள் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 9.5 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும். சீனாவில் 6.9 சதவீதமும், பிலிப்பைன்சில் 6 சதவீதமும், மலேசியாவில் 5.5 சதவீதமும், சிங்கப்பூரில் 4.1 சதவீதமும், ஜப்பானில் 2.4 சதவீதமும் தான் சம்பள உயர்வு கிடைக்குமாம்.

சம்பளம் குறைந்ததற்கான காரணங்கள்

சம்பளம் குறைந்ததற்கான காரணங்கள்

அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள், பொருளாதாரப் பிரச்சனைகள் போன்றவற்றால் வணிகங்களில் செயல்பாடுகள் பாதித்தது, செயல்திறன் வைத்து சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்தது போன்றவையே சம்பளம் குறைந்ததற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றது.

அதிகச் சம்பளம் அளிக்கும் துறைகள்

அதிகச் சம்பளம் அளிக்கும் துறைகள்

வாழ்க்கை அறிவியல், தொழில்முறை சேவைகள், இரசாயனங்கள், பொழுதுபோக்கு ஊடகங்கள், வாகனம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற சில துறைகளில் மட்டும் 2017-ம் ஆண்டு இரண்டு அடுக்கச் சம்பள உயர்வைப் பெறலாம் என்று கூறப்படுகின்றது.

தேய்வு

தேய்வு

இந்தியாவில் அதிகமாக இருந்த வந்து தேய்வு குறைந்த போதிலும் திறமை தேய்வு அதிகரித்துள்ளது.

ஊழியர்களின் தேய்வு 2015-ம் ஆண்டு முதல் 16.4 சதவீதமாகவே உள்ளது. ஆனால் திறமை தேயு 7.3 சதவீதத்தில் இருந்து 12.3 சதவீதமாக 2016-ம் ஆண்டு அதிகரித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here are the pay hikes you can expect this year

Here are the pay hikes you can expect this year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X