ஜியோ 'பிரைம்' வெற்றி பெற்றால்.. ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 'நாமம்' தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி தனது புதிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் புதிய பிரைம் ஆஃபர் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றால் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்குப் பட்ட நாமம்.

எப்படித் தெரியுமா..?

பிரைம் ஆஃபர்

பிரைம் ஆஃபர்

ஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தில் இலவச ஆஃபர்களை அறிவித்து உலகத்தில் எந்ததொரு நிறுவனமும் பெற்றிராத அளவிற்கு வெறும் 170 நாட்களில் சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.

இந்நிறுவனத்தின் தொடர் இலவசங்களால் மக்கள் மத்தியில் ஜியோவின் மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் அறிவிக்கப்பட்ட பின்னர் (அறிமுகம் ஆகி 3 மாதங்களுக்குப் பின்) அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஜியோவிற்கு இணைந்தனர்.

இந்நிலையில் வருகிற மார்ச் 31 முதல் ஜியோ தனது இலவச சேவைகளை முழுமையாக நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதன் பின் 303 ரூபாய் என்ற பிரைம் ஆஃபரை ஜியோ அறிவித்துள்ளது. இது தான் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

 

மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு

மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகத்தைப் போலவே இந்திய மக்கள் மத்தியில் பிரைம் ஆஃபர் வரவேற்பு பெற்றால் இந்தியாவின் மிக முக்கிய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களுக்குச் சுமார் 16-17 சதவீதமா வருவாய் இழப்பு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது.

காலாண்டில் லாபம் சரிவு.. இப்போ வருவாயும்..
 

காலாண்டில் லாபம் சரிவு.. இப்போ வருவாயும்..

செப்டம்பர் மாதம் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் சுமார் ஏர்டெல், ஐடியா நிறுவனங்களின் லாபம் மற்றும் வர்த்தகம் அதிகளவில் பாதித்ததை நாம் காலாண்டு முடிவுகளில் பார்த்தோம்.

இந்நிலையில் 6 மாத இலவசங்களுக்குப் பின் ஜியோ தனது கல்லாப்பெட்டியை திறக்க முடிவு செய்துள்ளது.

 

யாரும் கொடுக்காத கட்டணம்..

யாரும் கொடுக்காத கட்டணம்..

இந்திய டெலிகாம் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கச் சந்தையில் யாரும் அளிக்க 303 ரூபாய் கட்டணத்தில் மிகவும் சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது இதன் மூலம் ஜியோவின் வாடிக்கையாளர் கஜானா எப்படி இருக்கும் என முக்கிய ஆய்வுகள் செய்யப்பட்டது.

ஆய்வு

ஆய்வு

இதுகுறித்துக் கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டிஸ் நிறுவனம் செய்த ஆய்வில், ஜியோ பிரைம் ஆப்ரில் 4ஜி டேட்டாவில் மாதத்திற்கு 28ஜிபி டேட்டா மற்றும் இலவச வாய்ஸ் கால் (இந்தியா முழுவதும்) அளித்துள்ள நிலையில், இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் அதிகளவில் குறைந்துள்ளது.

வாய்ப்பு..

வாய்ப்பு..

ஜியோவின் நெட்வொர்க் சேவைகள் மோசமாக இருக்கிறது என மக்கள் கருத்துத் தெரிவித்தாலும், இது சிறிய கிராமங்கள், டவுன் பகுதிகளில் தான். ஆனால் ஜியோவிற்குத் தற்போது அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இருப்பது இந்தியாவின் பெரு நகரங்களில் தான்.

இதனால் நகரப்புறங்களில் இருக்கும் வாடிக்கையாளர் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளது.

 

200 ரூபாய்

200 ரூபாய்

இந்தியாவில் 200 ரூபாய்க்கு மேல் அதிகம் செலவிடும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் 303 ரூபாய் ஆஃபர் மிகப்பெரிய லாபமாக இருக்கும்.

இதன் வாயிலாக ஏர்டெல், ஐடியா வோடபோன் போன்ற நிறுவனங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

 

ஏர்டெல், ஐடியா வோடபோன்

ஏர்டெல், ஐடியா வோடபோன்

ஜியோவின் பிரைம் ஆஃபர் வாடிக்கையாளர்களைக் கவர்வதன் மூலம் ஏர்டெல், ஐடியா வோடபோன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழப்பது மட்டும் அல்லாமல், இந்நிறுவனங்களின் வருவாய் 2018ஆம் நிதியாண்டில் 16-17 சதவீதம் வரை குறையும் எனக் கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

பட்ட நாமம்

பட்ட நாமம்

ஏற்கனவே அதிகளவிலான லாபத்தை இழந்த டெலிகாம் நிறுவனங்களுக்கு, ஜியோவின் பிரைம் ஆஃபர் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழப்பது மட்டும் அல்லாமல் வருவாய் இழப்பையும் சந்திக்க உள்ளது.

டெலிகாம் துறையின் வருவாய்

டெலிகாம் துறையின் வருவாய்

ஜியோவிற்குப் போட்டியாகச் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களும் கட்டணங்களைத் தொடர்ந்து குறைத்து வரும் காரணத்தால் இந்திய டெலிகாம் துறையின் வருவாயும் 2018ஆம் நிதியாண்டில் 8-10 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

ஏர்டெல்

ஏர்டெல்

தற்போதைய சூழ்நிலை மார்ச் 31க்கு பின்னும் தொடர்ந்தால், டெலிகாம் சந்தையில் முன்னோடியாக இருக்கும் ஏர்டெல் நிறுவனமும் ஜியோவிற்கு இணையான கட்டணத்தில் தனது சேவையை அளிக்கும் எனக் கிரேடிட் சுசி என்னும் சர்வதேச ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

வாடிக்கையாளர் கருத்து...

வாடிக்கையாளர் கருத்து...

சரி, மக்களாகிய உங்கள் கருத்தை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் ஆய்வில் பதிவு செய்யுங்கள்.

உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய இதைக்கிளிக் செய்யவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 3 Telcos may lose maximum revenues: Jio's 'Prime' offer

Top 3 Telcos may lose maximum revenues: Jio's 'Prime' offer - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X