இந்தியாவின் ஆதார் கார்டு திட்டத்தை புகழ்ந்து தள்ளிய உலக வங்கி..!

இந்தியாவின் ஆதார் கார்டு திட்டத்தை புகழ்ந்து தள்ளிய உலக வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் பல நாடுகள் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள அட்டைத் திட்டமான ஆதார் திட்டத்தைத் துவங்கும் எண்ணத்தில் இருக்கும் சூழலில் தனிநபர் அடையாள திட்டமான இதை உலக வங்கியும் இப்போது புகழ்ந்து தள்ளியுள்ளது.

 

ஆதார் திட்டம் பற்றிப் பேசிய உலக வங்கியின் மூத்த பொருள்தர நிபுணர் பால் ரோமர் நான் பாரத்திலேயே இந்தியாவின் இந்தத் திட்டம் தான் பெரிதும் நவீனமயமானது என்று கூறியதாக ப்ளூம்பெர்க் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தில் நிதி பரிவர்த்தனைகள் உட்பட எல்லா விதமான சிக்கல்களுக்கும் தீர்வு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உலகின் பிற நாடுகளும் பின்பற்ற துவங்கினால் நல்லது. மானியம் போன்ற பரிமாற்றங்களுக்கு ஆதார் திட்டம் பெரிதளவில் உதவும் என்று பால் ரோமர் தெரிவித்துள்ளார்.

49,000 கோடி மிச்சப்படுத்திய அரசு

49,000 கோடி மிச்சப்படுத்திய அரசு

மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டையைப் பயன்படுத்த துவங்கியுள்ளதால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 49,000 கோடி வரை அரசுக்கு மிச்சம் ஆகியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

எங்குச் சென்றாலும் இந்த அடையாள அட்டை

எங்குச் சென்றாலும் இந்த அடையாள அட்டை

ரோமர் இது பற்றி மேலும் கூறுகையில் இத்திட்டத்தைப் பின்பற்ற இருக்கும் பிற நாடுகள் முறையான அமைப்பு ஒன்றை இதற்காக உருவாக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும் மக்கள் எங்குச் சென்றாலும் இந்த அடையாள அட்டையை எடுத்துச் செல்லும் அளவிற்கு முக்கியத்துவத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பல சிக்கல்களுக்கு எளிதாகத் தீர்வு
 

பல சிக்கல்களுக்கு எளிதாகத் தீர்வு

உலக வளர்ச்சி அறிக்கை 2016-ல் இந்தியாவின் ஆதார் அட்டை பற்றிக் குறிப்பிட்டுள்ள உலக வங்கி டிஜிட்டல் அடையாள அமைப்பு முறையால் பல சிக்கல்களுக்கு எளிதாகத் தீர்வு கான இந்திய அரசுக்கு உதவியுள்ளதாகக் கூறினார்.

பிற நாடுகள்

பிற நாடுகள்

இந்தியாவில் தனிநபர் உரிமை குறித்துக் கவலைகளைப் பலர் எழுப்பி வந்தாலும் உலகின் பிற நாடுகள் இத்திட்டத்தைத் தங்கள் நாடுகளிலும் செயல்படுத்தும் நோக்கில் உள்ளன.

நந்தன் நீலக்கேனி

நந்தன் நீலக்கேனி

இந்தியா தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் முன்னால் தலைவரான நந்தன் நீலக்கேனி ஆதார் திட்டம் போன்ற திட்டத்தைத் தன்சானியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் உள்ளிட்ட நாடுகள் பின் தொடர இந்தியாவிற்கு அந்நாட்டு அதிகாரிகள் வருகை புரிந்துள்ளதாகவும் இது குறித்து ஆலோசனை செய்துள்ளதாகவும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளார்.

வதந்திகள்

வதந்திகள்

ஆதார் கார்டு திட்டம் மூலம் பெறப்பட்ட கைரேகைப் போன்றவை தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதாகச் சில செய்திகள் வரத்துவங்கியுள்ளன. அன்மையில் இது குறித்து இந்தியாவின் தனிப்பட்ட அடையாள அட்டைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ள என்று நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.

தவறு சிறிதும் இல்லாத 400 கோடி ஆதார் பரிவர்த்தனைகள்

தவறு சிறிதும் இல்லாத 400 கோடி ஆதார் பரிவர்த்தனைகள்

கடந்த 5 நாடுகளில் 400 கோடி ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் அதில் இது வரை ஒரு முறைகூடத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவம் ஏதும் நிகழவில்லை என்றும் ஆதார் சார்ந்த ஆங்கிகரிப்பு முறை முழுமையாகப் பாதுகாப்பானது என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

மேம்பட்ட குறியாக்க தொழில்நுட்பம்

மேம்பட்ட குறியாக்க தொழில்நுட்பம்

உலகின் மிகவும் மேம்பட்ட குறியாக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகவும் அதனால் பரிவர்த்தனை மற்றும் தரவு சேமிப்புகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்பானவை என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Aadhaar program wins praises from World Bank

India's Aadhaar program wins praises from World Bank
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X