158 வங்கி கிளைகளை மூடியது ஆர்பிஎஸ்.. 362 ஊழியர்கள் வெளியேற்றம்..!

158 வங்கி கிளைகளை மூடியது ஆர்பிஎஸ்.. 362 ஊழியர்கள் வெளியேற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய வங்கி அமைப்பான ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து 158 வங்கி கிளைகளை மூடியுள்ளது. இதனால் இவ்வங்கியில் பணியாற்றி வந்த 362 ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

பிரிட்டன் நாட்டின் 73 சதவீத வரி செலுத்துவோரை வாடிக்கையாளராகக் கொண்ட ஆர்பிஎஸ் இதுகுறித்துக் கூறுகையில், வாடிக்கையாளர்கள் அதிகளவில் இண்டர்நெட் மற்றும் மொபைல் வங்கி சேவையை நாடுவதால் பாரம்பரியமான வங்கி கிளைகள் தேவை இல்லாத ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக முன்வைத்தே 158 வங்கி கிளைகளை மூடியுள்ளது.

 
158 வங்கி கிளைகளை மூடியது ஆர்பிஎஸ்.. 362 ஊழியர்கள் வெளியேற்றம்..!

ஜனவரி மாதத்தில் எச்எஸ்பிசி நிறுவனம் இந்த வருடம் 62 கிளைகளை மூடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது, இதில் 55 கிளைகளை ஏற்கனவே மூடியுள்ளது. கடந்த வருடம் லாய்ட்ஸ் வங்கி குழுமம் 200 வங்கி கிளைகளை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆர்பிஎஸ் வங்கி குழுமம், 30 ஆர்பிஎஸ் கிளைகளையும், 128 நேட்வெஸ்ட் வங்கி கிளைகளை மூடத் திட்டமிட்டுள்ளது.

158 கிளைகளையும் மூடுவதன் மூலம் 770 ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலையில், 300 ஊழியர்கள் மாற்றுப் பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் ஆர்பிஎஸ் வங்கி அமைப்பு 362 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBS and NatWest to close 158 branches as customers go digital

RBS and NatWest to close 158 branches as customers go digital
Story first published: Saturday, March 25, 2017, 15:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X