வருமான வரி செலுத்துவதில் நான் தான் டாப்பு: சல்மான் கான்

ஆச்சர்யம் என்னவென்றால் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ஒரு வருடமே ஆன கபில் ஷர்மாவின் வருமானம் 206 சதவீதம் உயர்ந்துள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரித் துறைக்கு என்ன ஆச்சர்யம் என்னவென்றால் 140 கோடி லாபம் சம்பாதித்த டங்கல் திரைப்படத்தில் நடித்த அமீர் கான் குறைந்த அளவு வரி செலுத்தியிருப்பது ஆகும்.

 

நடிகர் சல்மான் கான் மீண்டும் ஒரு முறை நான் தான் பால்வுட் சுல்தான் என்று அக்‌ஷய குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை விட 2016-2017ம் ஆண்டிற்கான அதிகப்படியான அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ஒரு வருடமே ஆன கபில் ஷர்மாவின் வருமானம் 206 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 2017 மார்ச் 15 வரை அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்திய நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இருந்து டாப் 10 வரி செலுத்திய நடிகர்கள் பட்டியலை மட்டும் இங்குப் பார்ப்போம்.

அட்வான்ஸ்டு டாக்ஸ்

அட்வான்ஸ்டு டாக்ஸ்

நிதி ஆண்டு முடிவதற்கு முன்பே 10,000 ரூபாய்க்கு அதிகமாகச் செலுத்த வேண்டியவர்கள் அட்வான்ஸ்டு டாக்ஸ் ஆக வரி செலுத்த வேண்டும். இப்படி வரிச் செலுத்துனர்களில் பலர் தங்களது வருமானத்தில் இருந்து 33 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும்.

சல்மான் கான்

சல்மான் கான்

2016-2017 நிதி ஆண்டில் மொத்தமாகச் சல்மான் கான் அட்வான்ஸ்டு டாக்ஸ் எனப்படும் முன்கூடியே செலுத்தும் வருமான வரியை 44.5 கோடிகள் செலுத்தி உள்ளார். சென்ற நிதி ஆண்டில் 33 சதவீதம் இவர் வரி செலுத்தி உள்ளார். நான்காவது காலாண்டில் மட்டும் 14.5 கோடிகள் வரியாகச் செலுத்தியுள்ளார்.

அக்‌ஷய் குமார்
 

அக்‌ஷய் குமார்

ஒரு வருடத்திற்கு முன்பு அதிக ஹிட்களை அளித்த அக்‌ஷய் குமாருக்கு 2016-2017 பெரிதாக ஏதும் இல்லை. இதனால் சென்ற ஆண்டு 30 கோடி வரி செலுத்திய இவர் இந்த ஆண்டு 29.5 கோடிகள் முன்கூடிய வரியாகச் செலுத்தியுள்ளார்.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

சென்ற ஆண்டு 14 கோடி வரியாகச் செலுத்திய ரித்திக் ரோஷன் 25.5 கோடி ரூபாய் 2016-2017 ஆண்டிற்கான முன்கூடிய வரி செலுத்தியுள்ளார். ஒரு வருடத்தில் இவருடைய வருமானம் 74 சதவீதம் அதிகரித்துள்ளது.

கபில் ஷர்மா

கபில் ஷர்மா

பாலிவுட்டில் புதிய நகைச்சுவை நடிகராக அறிமுகமான கபில் ஷர்மா சென்ற ஆண்டு 7 கோடி வருமான வரி செலுத்தினார். ஆனால் இந்த ஆண்டு 23.9 கோடி முன்கூடிய வரியாகச் செலுத்தியுள்ளார். இது 206 சதவீதம் வருமான வளர்ச்சியாகும்.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூரின் ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படம் இந்த ஆண்டுச் சரியாகப் போகவில்லை. இதனால் சென்ற ஆண்டு 22.3 கோடி வரி செலுத்திய ரன்பீர் இந்த ஆண்டு 16.5 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார். இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீத குறைவாகும்.

அமீர் கான்

அமீர் கான்

அமீர் கானுக்கு இந்த ஆண்டு வளர்ச்சி தான். டங்கல் திரைப்படம் 140 கோடி லாபம் அளித்த நிலையில் சென்ற ஆண்டு 9.6 கோடி வரி செலுத்திய அமீர் கான் இந்த ஆண்டு 14.8 கோடி வரி செலுத்தியுள்ளார்.

கரண் ஜோஹர்

கரண் ஜோஹர்

கரண் ஜோஹரின் வருமானம் இந்த ஆண்டு 473 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 35 லட்சம் வரியாஅக செலுத்திய கரண் இந்த ஆண்டு 4 கோடி முன்கூட்டிய வரி செலுத்தியுள்ளார்.

நடிகைகள்

நடிகைகள்

இந்தப் பட்டியலில் தீபிகா படுகோனே, அலியா பட் மற்றும் கரீனா கபூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

ஹாலிவுட் திரைப்படம் "XXX: Return of Xander Cage" திரைப்படத்தில் நடித்த இவருடைய வருமானம் இந்த ஆண்டு 13 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் 9 கோடி வரி செலுத்திய தீபிகா 2016-2017 நிதி ஆண்டில் 10.25 கோடி முன்கூடிய வரி செலுத்தியுள்ளார்.

ஆலியா பட்

ஆலியா பட்

ஆலியா பட்டின் வருமானம் 2016-2017 நிதி ஆண்டில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015-2016 நிதி ஆண்டில் 2.9 கோடி வரி செலுத்திய ஆலியா பட் இந்த ஆண்டு 4.33 கோடி முன்கூடிய வரி செலுத்தியுள்ளார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

தாய் ஆன பிறகு நடிப்பது குறைந்ததினால் கரீனா கபூரின் வருமானமும் குறைந்துள்ளது. இவருடைய வருமான சென்ற நிதி ஆண்டை விட இந்த ஆண்டு 44 சதவீதம் குறைந்துள்ளது. 2015-2016 நிதி ஆண்டில் 2.4 கோடி வரி செலுத்திய கரீனா கபூர் இந்த ஆண்டு 1.2 கோடி ரூபாய் முன்கூடிய வரி செலுத்தியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salman Khan tops in highest advance tax payers in Bollywood

Salman Khan tops in highest advance tax payers in Bollywood
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X