50க்குள் வந்தது போதாது 30 இடத்திற்குள் வர வேண்டும்.. எஸ்பிஐ அருந்ததி பட்டாச்சார்யா அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது 5 வங்கி பிரிவுகள் மற்றும் சமீபத்தில் துவங்கப்பட்ட பாரதிய மஹிலா வங்கி ஆகியவற்றை இணைந்து ஒன்றை வங்கியாக செயல்பட ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இயங்க துவங்கியுள்ளது.

இந்த வங்கி இணைப்பின் மூலம் உலக நாடுகள் மத்தியில் சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த வங்கி சேவையில் எஸ்பிஐ 50 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

மிகப்பெரிய வாய்ப்பு

மிகப்பெரிய வாய்ப்பு

எஸ்பிஐ வங்கி தனது துணை வங்கிகளுடனான இணைப்பின் மூலம் உலக சந்தையில் முக்கிய இடத்தை பிடித்தது மட்டும் அல்லாமல் இந்திய மக்களின் வங்கி சேவையின் தரத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

இந்நிலையில் இவ்வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா, எஸ்பிஐ வங்கி துணை வங்கிகளுடான இணைப்பு உலக வங்கி தரவரிசையில் 50 இடத்திற்குள் நுழைந்துள்ளது. ஆனால் இதுபோதாது. அடுத்த சில வருடங்களில் 30 இடத்திற்குள் நுழைய வேண்டும் இதற்காக வங்கி நிர்வாகம் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் பாடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

துணை வங்கிகள்

துணை வங்கிகள்

எஸ்பிஐ வங்கியுடன் ஸ்டேட் பாங்க் ஆ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் , ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆ பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவை இணைந்துள்ளது.

இதனுடன் பாரத் மஹிலா வங்கியும் எஸ்பிஐ வங்கியுடன் இணைவது உறுதியாகின்றது.

 

இரண்டு வங்கிகள்

இரண்டு வங்கிகள்

இதே போன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர் 2010-ம் ஆண்டும், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா 2008-ம் ஆண்டும் இப்படித் தான் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

45வது இடம்

45வது இடம்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 30.72 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலகளவில் 64 வது இடத்தில் இப்போது உள்ளது.

இப்போது துணை வங்கிகளுடன் இணைவதை அடுத்து எஸ்பிஐ வங்கியின் சொத்து மதிப்பு 40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் உலகளவில் மிகப் பெரிய வங்கியாக டாப் 50 வங்கிகள் பட்டியலில் இணைந்து 45வது இடத்தை எஸ்பிஐ பிடிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

 

மூடப்படும் அலுவலகங்கள்

மூடப்படும் அலுவலகங்கள்

இப்போது எஸ்பிஐ வங்கியில் 550 அலுவலகங்களும், துணை வங்கிகளில் 259 அலுவலகங்களும் உள்ளன. இணைவிற்குப் பிறகு 687 அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என்றும் 122 அலுவலகங்கள் மூடப்படும் என்றும் கூறப்படுகின்றது.

ஊழியர்களின் நிலை

ஊழியர்களின் நிலை

பின்னர் இந்த இணைவினால் 1,107 ஊழியர்கள் வாடிக்கையாளர் இடைமுகம் நடவடிக்கைகளுக்காகப் பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறுகின்றனர். இதனால் மேலும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு அவர்களுக்குச் சேவை வழங்குவதில் உள்ளதில் உள்ள சிக்கல் எல்லாம் தீரும் என்றும் கூறப்படுகின்றது.

புதிய சலுகை

புதிய சலுகை

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகிகள் வாரியம் ஊழியர்கள் அவசரக் காலங்களில் வீட்டில் இருந்தபடியே மொபைல் சாதனங்கள் மூலம் மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட்டு பயண நேரத்தைக் குறைத்துக்கொண்டு வேலை செய்வதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

வங்கிகளின் இணைப்பிற்கு முன்னரே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது ரியல் எஸ்டேட் சொத்துக்களைக் கவனிப்பதற்காக எஸ்பிஐ இன்பரா மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.

வராக்கடன்

வராக்கடன்

இதன் மூலம் எஸ்பிஐ வங்கி தனது வர்த்தகத்தை மேம்படுத்த நிலையான வங்கி சேவைகள் அல்லாத பிறவற்றையும் கவனிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இதன் மூலம் வங்கிகளின் வராக்கடனையும் அதிகளவில் குறைக்க முடியும் எனவும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் நம்புகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After 50, now SBI aims to break into the league of top 30 global banks

After 50, now SBI aims to break into the league of top 30 global banks - Tamil Goodreturns
Story first published: Sunday, April 2, 2017, 17:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X