பதவி உயர்வால் ரூ.10 கோடி சம்பளத்தை இழக்கப்போகும் சந்திரசேகரன்..!

பதவி உயர்வால் 10 கோடி சம்பளத்தை இழக்கப்போகும் சந்திரசேகரன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் என் சந்திரசேகரன். டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரைஸ் மிஸ்டிரி வெளியேறிய பிறகு டாடா குழுமத்தின் தலைவரி பதவி முதன் முதலாக டாடா குடும்பத்தினர் இல்லாதவர் ஒருவருக்குக் கிடைத்தது.

 

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனத்தின் தலைவராக இருந்த சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவர் பதவி வகிக்கும் போது ஆண்டுக்கு 14.4 கோடி ரூபாய் வரை சம்பளம் மற்றும் போனஸ் பெறலாம் என்று கூறப்படுகின்றது.

இதில் ஆண்டுக்கு 4.8 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், மற்றும் கூடுதல் நன்மையாக 200 சதவீதம் அல்லது 9.6 கோடி ரூபாய் வழங்கப்படும். இது இவருடைய செயற்பாடுகளை பொருத்து மாற வாய்ப்புள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தில் பெற்ற சம்பளம்

டிசிஎஸ் நிறுவனத்தில் பெற்ற சம்பளம்

டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் முன்பு இவர் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பதவி வகித்த போது 2016-ம் ஆண்டு வரை 25.6 கோடி ரூபாய் ஆண்டு சம்பளமாக பெற்றுவந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அந்த ஆண்டு 10 கோடி ரூபாய் ஒரு முறை போனசாகவும் இவர் பெற்றுள்ளார்.

சைரஸ் மிஸ்ட்ரி

சைரஸ் மிஸ்ட்ரி

டாடா குழுமத்தின் முன்னால் தலைவரான சைரஸ் மிஸ்ட்ரி சென்ற அக்டோபர் மாதம் வெளியேறினார். இவர் 2015-ம் ஆடு வரை ஆண்டுக்கு 16 கோடி ரூபாய் சம்பளமாகவும் பெற்று வந்தார். அதே ஆண்டு பேனஸ்களுடன் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து என் சந்திரசேகரன் 21.28 கோடி பெற்றுள்ளார்.

இது குறித்த தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் மின்னஞ்சல் கேள்விக்கு டாடா குழுமம் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

 

டாடா குழும நிறுவனங்கள்
 

டாடா குழும நிறுவனங்கள்

டாடா குழுமம் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளது, இதில் 29 நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் ஆகும்.

ஊதிய ஊயர்வு

ஊதிய ஊயர்வு

மாதம் 20 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை சம்பளம் அளிக்க டாடா குழுமத்தின் உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கி இருப்பதாக டாடா குழுமத்தின் முதன்மை இயக்கு அலுவலர் சுபேதார் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு அடிப்படை சம்பளத்தை விட 200 சதவீதத்திற்கும் அதிகமாக வழங்கக் கூடாது என்பது குழு உறுப்பினர்கள் தீவிரமாக உள்ளனர்.

ஆண்டு ஊதிய உயர்வும் நிறுவனத்தின் குழு உறுப்பினர்கள் பரிந்துரை மற்றும் ஊதியம் குழு பரிந்துரையின் கூழ் தான் வழங்கப்படும்.

 

பணிகள்

பணிகள்

நிறுவனத்தின் தலைவர் தனது திறன் மற்றும் திறன் சார்ந்த நடைமுறைகளை நிறுவனத்தின் நலனுக்காக தம்மால் முடிந்த அளவிற்கு அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்றும், தன்னால் முயன்ற அணைத்து முயற்சிகளையும் செய்து நிறுவனத்தின் ஒழுங்குமுறைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கொள்கைகளை மீறாமல் செயற்படுத்த வேண்டும் என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசதி வாய்ப்புகள் மற்றும் நன்மைகள்

வசதி வாய்ப்புகள் மற்றும் நன்மைகள்

சந்திரசேகரன் அவர்களுக்கு அலுவலக பணிகளுக்காக ஓட்டுநருடன் இரண்டு கார் மற்றும் வீட்டிற்கு இலவச தொலைத்தொடர்பு சேவை அளிக்கப்படும். மேலும் மருத்துவ செலவுகள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும், தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் கிளப்புகளுக்கான கட்டணமும் அளிக்கப்படும்.

புதிய விதிகள்

புதிய விதிகள்

டாடா குழுமத்தின் தலைவர் பதவி ஏற்பை அடுத்து நிறுவனத்தின் விதிகளின் படி டாடா குழுமத்தின் அலுவலக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக வேண்டும். அதே நேரம் பிற நிறுவனங்களிலும் தலைவர் பதவியில் இருக்கக் கூடாது.

இந்த விதிமுறைகள் சைரஸ் மிஸ்ட்ரியிடம் இருந்து ஏற்பட்ட சிக்கல்களால் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் ஆகும்.

 

தலைவர் பதவியில் வெளியேற விரும்பினால் அல்லது வெளியேற்றப்பட்டால்

தலைவர் பதவியில் வெளியேற விரும்பினால் அல்லது வெளியேற்றப்பட்டால்

டாடா குழுமத்தின் தலைவர் பதவியை பெற்ற சந்திரசேகரனை எப்போது வேண்டுமானாலும் 6 மாதம் சம்பளம் அளித்து தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற நிறுவனத்தின் குழுவிற்கு அனுமதி உண்டு என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From TCS to Tata Sons, N Chandrasekaran may lose crores in annual pay

From TCS to Tata Sons, N Chandrasekaran may lose crores in annual pay
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X