திங்கள் முதல் உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்றால் இதுவும் காரணமாக இருக்கலாம்..!

திங்கள் முதல் உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்றால் இதுவும் காரணமாக இருக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வங்கி கணக்கிற்கு வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச் சட்டம்(FATCA) இணைப்பைப் பெற்றுவிட்டீர்களா? இல்லை என்றால் உங்கள் வங்கி கணக்குத் திங்கட்கிழமை முதல் இயக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.

 

2014 ஜூலை 1 முதல் 2015 ஆகஸ்ட் 31 வரை மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு போன்றவற்றைச் செய்திருந்தால் மே1-ம் தேதி முதல் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.

FATCA என்றால் என்ன? எதனால் இந்த வம்பு?

FATCA என்றால் என்ன? எதனால் இந்த வம்பு?

FATCA என்பது தான்னிசையாக நிதி விவரங்களை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பகிரக்கூடிய ஒரு வழிமுறையாகும். இந்திய நிதி நிறுவனங்கள் இந்திய வரி அதிகாரிகளுக்குத் தேவையான விவரங்களை அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் பின்னர் அமெரிக்காவிற்கு இந்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

இது இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள் இடையிலான 2015 ஆகஸ்ட் 31-ம் தேதி போடப்பட்ட அரசாங்க ஒப்பந்தத்திற்காக அளிக்கப்பட வேண்டிய விவரங்கள் ஆகும்.

நிதி நிறுவனங்கள் 2014 ஜூலை 1 முதல் 2015 ஆகஸ்ட் 31 வரை புதிதாகக் கணக்குத் துவங்கியவர்களிடம் இருந்து இதற்காகச் சுய சான்றிதழ் பெற வேண்டும்.

இதைச் செய்யவில்லை என்றால் என்ன விளைவுகளை எல்லாம் நீங்கள் சந்திக்க வேண்டி வரும் என்று இங்குப் பார்க்கலாம்.

 

வங்கி கணக்குகள்

வங்கி கணக்குகள்

நீங்கல் வைத்திருக்கும் வங்கி கணக்கிற்கு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சுய சான்றிதழ் பெறவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு மே 1 -ம் தேதி முதல் செயல்படாது. எந்தப் பணப் பரிவர்த்தனைகளும் செய்ய முடியாது.

முதலீட்டாளர்கள், கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் சுய சான்றிதழ் ஒன்றை உங்களது நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் FATCA இணைப்பு உங்களுக்கு அளித்த பிறகு வங்கி கணக்கை முறையாக இயக்க முடியும்.

 

தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு வைத்துள்ளவர்கள்
 

தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு வைத்துள்ளவர்கள்

2014 ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கை நீங்கள் துவங்கி இருந்தால் அது மத்திய பதிவு வைத்திருப்பதற்கான ஏஜென்சி போன்ற என்எஸ்டிஎல் கீழ் இயங்கி வரும் போது உங்கள் கணக்கிற்கு FATCA சுய சான்றிதழ் அளிக்கவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும்.

அதற்காக உங்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை அனுப்பப்படும். மேலும் உதவிக்கு இந்த இணைப்பை கிள்க் செய்யவும்.

 

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள்

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள்


நிதி அமைச்சக 2017 ஏப்ரல் 2017-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின் படி அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் எதுவெல்லாம் 2014 ஜூலை 1 முதல் 2015 ஆகஸ்ட் 31 வரை புதிதாகத் துவங்கப்பட்டுள்ளதோ அந்தக் கணக்கிற்கு எல்லாம் FATCA புகார் எழுந்துள்ளது. அதனால் 2017 ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சுய ஒப்புதல் அளித்துக் கணக்கை தொடர்ந்து இயக்கலாம் என்றும் இல்லை என்றால் கணக்கு முடக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

பின் வரும் இணைப்புகளுக்குச் செல்வதன் மூலமாக மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் உங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம்.

1. CAMS: http://www.camsonline.com/FATCA/COL_FATCAOnlineIndividualForm.aspx?amc=ALL

2. KARVY: https://www.karvymfs.com/karvy/fatca-kyc.aspx

3.Sundaram BNP Paribas Fund Services Limited; https://www.sundarambnpparibasfs.in/web/service/fatca/

4.Templeton: https://online.franklintempletonindia.com/aspx_app/Investors/fatca/Inv_FatcaDetails.aspx

 

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

FATCA இணக்கத்திற்கு உங்கள் பான் விவரங்கள், பிராண்டு தேதி மற்றும் நாடு, குடியுரிமை உள்ள நாடு, குடியுரிமை, வேலை, தொழில், வருடாந்திர வருமானம் மற்றும் நீங்கள் அரசியல் உள்ளீர்களா உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

இது தனிநபர், நிறுவனங்கள் என அனைவருக்கும் பொருந்தும். ஒரு வேலை நீங்கள் இந்தியாவை விட்டுப் பிற நாடுகளிலும் வரி செலுத்தி வந்தால் அதற்கான வரி விவரங்களையும் அளிக்க வேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

You need to file your FATCA compliance to banks by April 30 to avoid an account freeze

You need to file your FATCA compliance to banks by April 30 to avoid an account freeze
Story first published: Saturday, April 29, 2017, 18:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X