வங்கி லாக்கரில் 20.5 லட்சம் ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்ததால் ஏற்பட்ட சிக்கல்..!

பழைய 500 மற்றும் 1,000 ரூபாயினை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு நவம்பர் மாதம் அதனை வங்கியில் மாற்ற எடுத்துச் செல்லும் போது காவல் துறையினரால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்கள் 20.5 லட்சம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாயினை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு நவம்பர் மாதம் அதனை வங்கியில் மாற்ற எடுத்துச் செல்லும் போது காவல் துறையினரால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

ஜவகர் நகரைச் சேர்ந்த எஸ்பி மகேஷ் மற்றும் மனோஜ் எஸ் ஆகிய இருவரும் நவம்பர் மாதம் 20.50 லட்சம் ரூபாய் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் வாகனத்தைச் சோதனை செய்த காவல் துறையினர் அந்தப் பணத்தைப் பிரிமுதல் செய்து விசரனைச் செய்துள்ளனர்.

காவல் துறை விசாரணை

காவல் துறை விசாரணை

காவல் துறையினரின் விசாரணையில் இவர்கள் வைத்திருந்த பணம் வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கி லாக்கரில் இவர்கள் வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டு இந்தப் பணத்திற்கு வரி செலுத்தப்பட்டதா என்பதற்காக வருமான வரித்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

காவல் துறை தவறாக இதைக் கருப்புப் பணம் என்று கருதி பரிமுதல் செய்துள்ளது என்று வருமான வரித் துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது கருப்புப் பணம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

எதனால் வழக்கு உயர் நீதிமன்றம் சென்றது
 

எதனால் வழக்கு உயர் நீதிமன்றம் சென்றது

எஸ்பிடி மற்றும் வருமான வரித்துறையினர் இந்த வழக்கை விசாரித்த ஆர்பிஐ வங்கிக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கக் கூறியும் ஆர்பிஐ இவர்களுக்கு ரூபாய் நோட்டை மாற்றி அளிக்கவில்லை இதனால் தான் இந்தத் தொழிலதிபர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு

தீர்ப்பு

மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் திருவனந்தபுரம் ஆர்பிஐ வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிச் சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் கருப்புப் பணத்தை வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கி கிளையிலும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுத் தீர்ப்பு மகேஷ் மற்றும் மனோஜ் சார்பாக வந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala businessmen approach HC for converting Rs 20 lakh in old notes, and they have a strong case

Kerala businessmen approach HC for converting Rs 20 lakh in old notes, and they have a strong case
Story first published: Wednesday, May 3, 2017, 20:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X