கேஎப்சி, மெக்டொனால்டுக்கு போட்டியாக விரைவில் பதஞ்சலி சில்லறை உணவகங்கள் துவக்கம்..!

கேஎப்சி, மெக்டொனால்டுக்கு போட்டியாக விரைவில் பதஞ்சலி சில்லறை உணவகங்கள் துவக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் இயற்கை மற்றும் ஆயுர்வேத ஊட்டச்சத்து மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் வணிகத்தில் போட்டி நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் நிலையில் இப்போது கேஎப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற சில்லறை உணவங்கள் துவங்க இருப்பதாக அறிவித்தது.

வட இந்திய மாநிலமான உத்திரகாண்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பதஞ்சலி நிறுவனம் வரும் நிதி ஆண்டில் 20,000 கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது. அதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையே இந்தக் கேஎப்சி, மெக்டொனால்டுக்குப் போட்டியாகச் சில்லறை உணவகங்கள் துவங்கப்பட இருகுன்றது என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

உணவகம் துவங்க அறிவிப்பு

உணவகம் துவங்க அறிவிப்பு

உணவகங்கள் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக டெல்லியில் வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாபா ராம் தேவ் தெரிவித்தார்.

 ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய மனதில் சமநிலை, உடல் மற்றும் ஆவி ஆகியவற்றைச் சார்ந்துள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது, மேலும் மூலிகை கலவைகள் மற்றும் சிறப்பு உணவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை ஆயுர்வேதத்தில் அடங்கும்.

பாபா ராம்தேவின் அடுத்தகட்ட நடவடிக்கையின் படி இந்தியாவில் ஏற்கனவே கூட்டம் நிறைந்த உணவு விற்பனை நிலையங்களுக்குப் போட்டியாக இறங்க உள்ளது என்று உணவு கன்ஸடண்ட் நிறுவனத்தின் தலைவர் சந்தோஷ் கனேகார் கூறினார்.

 

சில்லறை வணிகத்தில் உணவு சந்தையின் மதிப்பு

சில்லறை வணிகத்தில் உணவு சந்தையின் மதிப்பு

இந்தியாவின் மொத்த சில்லறை வணிகத்தில் 57 சதவீதம் உணவு விற்பனையில் உள்ளதாகவும், 2025-ம் ஆண்டுக்குள் இந்திய உணவு சந்தையின் மதிப்பு 71 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டோமினோஸ்

டோமினோஸ்

சில்லறை உணவங்கங்களில் மிகப் பெரிய நிறுவனமான டோமினோஸ் ஏற்கனவே இந்திய சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாமல் போராடி வருகின்றது. பதஞ்சலி நிறுவனம் சில்லறை உணவங்கங்கள் துவங்கினாலும் அதற்கு அதிக முதலீடுகள் தேவை எனவும் வேகமாக வளர்ந்து உணவு சந்தையைப் பிடிப்பது கடினம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கியமற்ற உணவு

ஆரோக்கியமற்ற உணவு

ராம்தேவைப் பொறுத்தவரை, ஆரோக்கியமற்ற உணவைக் கருத்தில் கொண்டு இந்தியர்களைப் பின்தொடர வேண்டும் என்று நினைப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் இவர் இயற்கை உணவுகள், சிறு தானிய உணவு வகைகளைத் தயாரித்துத் தங்கலது உணவங்கங்களில் விற்பனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

500-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள்

500-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள்

உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து, அழகு மற்றும் தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் 500-க்கும் மேற்பட்ட பொருட்களை இவர் பதஞ்சலி நிறுவனத்தின் சார்பாக விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அழகு பராமரிப்புப் பொருட்கள் சந்தை

அழகு பராமரிப்புப் பொருட்கள் சந்தை

நிறுவனத்தைத் துவங்கி 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 2011-ம் ஆண்டு அழகு மற்றும் அழகு பராமரிப்புப் பொருட்கள் சந்தையில் 0.2 சதவீதமாக இருந்த பதஞ்சலி நிறுவனத்தின் பங்கு 2015-ம் ஆண்டு 1.2 சதவீதமாக வளர்ந்து இருந்தது.

இரட்டிப்பான 2016-2017 நிதி ஆண்டு வருவாய்

இரட்டிப்பான 2016-2017 நிதி ஆண்டு வருவாய்

2016-2017 நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் 10,500 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே 2015-2016ம் நிதி ஆண்டில் 5,000 கோடியாக இருந்தது. அப்போது இதனை அடுத்த நிதி ஆண்டில் 10,000 கோடி ரூபாயாக அதிகரிப்பதே எங்கள் இலக்கு என்று கூறப்பட்டது. இப்போது அதைவிட அதிகமாகவே பதஞ்சலி நிறுவனத்தின் உள்ளது.

வருவாய் 20,000 கோடியாக அதிகரிக்க முடிவு

வருவாய் 20,000 கோடியாக அதிகரிக்க முடிவு

பதஞ்சலி நிறுவனம் 30,000 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதன் மூலம் வரும் நடப்பு நிதி ஆண்டில் வருவாயினை இரண்டு மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் புதிய தொழில்

மேலும் புதிய தொழில்

பதஞ்சலி நிறுவனம் ஜவுளி துறை மற்றும் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டவும் முடிவு செய்துள்ளது.

சம்பளம் வாங்காத விளம்பர தூதர்

சம்பளம் வாங்காத விளம்பர தூதர்

பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்திற்குத் தான் ஒரு சம்பளம் வாங்காத விளம்பர தூதர் என்று, இந்த நிறுவனத்தில் தனது குழந்தைப் பருவ நண்பர் ஆச்சார்யா பலகிருஷ்ணாவிற்கு 97% பங்கு உள்ளது என்றும் கூறினார்.

வெளிநாட்டு நிறுவனங்களை வெளியேற்றுவேன்

வெளிநாட்டு நிறுவனங்களை வெளியேற்றுவேன்

பன்னாட்டு நிறுவனங்களைப் பதஞ்சலி நொருக்கிவிட்டது என்றும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றும் வரை தான் விடப் போவதில்லை என்றும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ramdev's Patanjali Ayurved wants to take on McDonald's, KFC in food retail

Ramdev's Patanjali Ayurved wants to take on McDonald's, KFC in food retail
Story first published: Saturday, May 6, 2017, 16:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X