இனி அவரச பண தேவைக்கு யாரிடமும் கேட்க வேண்டாம்.. பேஸ்புக்-இன் புதிய வசதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமுக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் உணவு டெலிவரி செய்யும் சேவையை அடுத்து அவசரமாகப் பணம் தேவை என்றால் நிதி திரட்டுவதற்கு ஏற்றவாறு சேவையை விரிவுபடுத்த இருக்கின்றது.

 

பேஸ்புக் நிறுவனத்தின் இந்தச் சேவையின் மூலமாக நண்பர்களிடம் இருந்தும், அந்நியர்களிடம் இருந்து கல்வி, மருத்துவம் அல்லது பிற செலவினங்களுக்குப் பணம் தேவை என்றால் கோரிக்கை வைப்பதன் மூலம் பணம் திரட்டி உங்களுக்கு அளிக்கும்.

கோஃபண்ட்மி (GoFundMe)

கோஃபண்ட்மி (GoFundMe)

பேஸ்புக் நிறுவனம் அவசரக் காலங்களில் நிதி திரட்டுவதற்கான இந்தச் சேவைக்குக் கோஃபண்ட்மி (GoFundMe) என்று பெயர் சூட்டியுள்ளது. இதற்கான சோதனை சேவையை மார்ச் மாதம் முதல் பேஸ்புக் நிறுவனம் சோதித்து வருகின்றது.

விளையாட்டு மற்றும் சமூக நிதி

விளையாட்டு மற்றும் சமூக நிதி

சோதனையின் போது சமீபத்திய மேம்படுத்தல் வெளியிடப்பட்டதுடன், இது விளையாட்டு மற்றும் சமூக நிதி திரட்டுபவர்களை விருப்பங்களாகச் சேர்த்திருக்கிறது. இதனால் ஊரில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு போட்டி நடத்த வேண்டுமே கடைகள், வீட்டிற்குச் சென்று நிதி திரட்ட வேண்டிய அவசியம் இல்லை. பேஸ்புக் மூலம் நிதி திரட்டலாம்.

எதற்கெல்லாம் நிதி திரட்ட முடியும்?
 

எதற்கெல்லாம் நிதி திரட்ட முடியும்?

செல்லப்பிராணிகள், மருத்துவச் செலவினங்கள், நெருக்கடி நிவாரணம், இறுதிச் சடங்குகள், மற்றும் பிற பல பிரிவுகளில் எல்லம் பணம் தேவைப்படும் போது நிதி திரட்டலாம்.

எப்படி நிதி திரட்டுவது?

எப்படி நிதி திரட்டுவது?

நிதி திரட்ட மெனு ஐகானை கிளிக் செய்து அதில் உள்ள கடைசித் தெரிவான நிதி திரட்டுனர்கள் (fundraisers) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். கணினியில் நிதி திரட்ட facebook.com/fundraisers என்ற இணைப்பிற்குச் சென்று நிதி திரட்டலாம்.

பேஸ்புக் பரிசீலனைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்

பேஸ்புக் பரிசீலனைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்

24 மணி நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் நிதி திரட்டுவதற்கான கோரிக்கையைப் பரிசீலனை செய்யும்.

கட்டணம் எவ்வளவு

கட்டணம் எவ்வளவு

பேஸ்புக் மூலமாக நிதி திரட்டப்பட்ட மொத்த தொகையில் இருந்து 6.9 சதவீதம் மற்றும் பரிவர்தனை கட்டணமாக 20 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Urgently need cash? Facebook expands personal fundraising tools

Urgently need cash? Facebook expands personal fundraising tools
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X