ஓரேயொரு உத்தரவால் பல கோடி நட்டம்.. காரணம் உச்ச நீதிமன்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகள், அருகில் உள்ள மது பான கடைகள் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளில் மது விற்பனை செய்யக்கூடாது என்று டிசம்பர் மாதம் உதாரவிடப்பட்டது. இதனை அடுத்து மத்திய அரசும் 2017 ஏப்ரல் 1 முதல் தடையை அமல் படுத்தியதை அடுத்து 5 சதவீதம் ஸ்பிரிட்ஸ் சந்தை சரிவைச் சந்தித்து உள்ளது.

 

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டும் மது விற்பனையில் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. இங்கு உள்ள மதுக் கடைகள் மற்றும் 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதால் மது பாணங்களின் விற்பனையும் சரிந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா மற்றும் ஜின் விற்பனை எந்த அளவு சரிந்துள்ளது என்ற முழு விவரங்களையும் இங்குப் பார்ப்போம்.

விஸ்கி

விஸ்கி

விஸ்கி 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,47,40,538 அட்டைப் பெட்டிகள் விற்பனை ஆனதாம், இதுவே 2017 ஏப்ரல் மாதம் 1,45,86,387 அட்டப் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளதால் 1 சதவீதம் விஸ்கி சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.

பிராந்தி

பிராந்தி

பிராந்தி 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 64,06,835 அட்டைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே 2017 ஏப்ரல் மாதம் 56,91,160 பெட்டிகளாகக் குறைந்து 11.2 சதவீதம் சரிவை சரிந்த்துள்ளது.

ரம்

ரம்

ரம் 2016 ஏப்ரல் மாதம் 26,25,269 அட்டைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு 24,61,202 பெட்டிகள் அதாவது 6.2 சதவீதம் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

வோட்கா
 

வோட்கா

2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7,19,002 அட்டைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்ட வோட்கா 2017 ஏப்ரல் மாதம் 5,88,410 பெட்டிகள் அதாவது 18.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.

ஜின்

ஜின்

2016-ம் ஆண்டு 2,00,268 அட்டைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்ட ஜின் 2017-ம் ஆண்டு 1,51,642 அட்டைப்பெட்டிகள் அதாவது 24.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

மொத்த விற்பனை

மொத்த விற்பனை

மது பாணங்கள் விற்பனை சந்தையில் 2016-ம் ஆண்டு மொத்தமாக அனைத்து வகை மது பெட்டிகளும் 2,46,91,912 விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே 2017-ம் ஆண்டு 2,34,78,801 பெட்டிகள் அதாவது 4.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

சரிவு அதிகரிக்க வாய்ப்பு

சரிவு அதிகரிக்க வாய்ப்பு

5 சதவீதம் சரிவு என்பது குறைவு தான் என்றும், இன்னும் சில மதுக் கடைகளுக்குச் செப்டம்பர் மாதம் வரை விற்பனை செய்ய உரிமத்தை பெற்றுள்ளது என்றும் அதனால் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூனைட்டட் ஸ்பிர்ட்ஸ் கருத்து

யூனைட்டட் ஸ்பிர்ட்ஸ் கருத்து

இந்தியாவில் மதுபான சந்தையில் பெறும் பகுதியை வைத்து இருக்கும் யூனைட்டட் ஸ்பிர்ட்ஸ் தற்போதைய சரிவு இயங்கி வரும் பிற ஸ்டோர்கள் மூலமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறுகிறது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஜூலை 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வரப்போகும் சேவை மற்றும் சரக்கு வரியான ஜிஎஸ்டி-ல் 18 சதவீதம் வரி விதிக்கப்படுவதால் மதுபானங்கள் விலை உயரவும் அதனால் மேலும் விற்பனை சரியவும் வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Highway liquor ban impact: Spirits market shrinks 5 per cent in April

ஒற்றை உத்தரவால் பல ஆயிரம் கோடி நட்டம், காரணம் உச்ச நீதிமன்றம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X