மக்கள் சாப்பிடத்தான் 'தடை'.. ஏற்றுமதி செய்ய இல்லை.. யாருக்காக இந்த திடீர் உத்தரவு..?

By குட்ரிட்டன்ஸ்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ வாங்கவோ கூடாது என்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், இறைச்சி பிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

ரம்ஜான் நோன்பு தொடங்கும் நேரத்தில் இந்த தடை உத்தரவு அறிவித்து இருப்பதற்கு இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மாட்டு இறைச்சிக்குத் தொடர்ந்து தடைகளை விதித்து வரும் மத்திய அரசு (பாஜக) இதுவரை மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு ஏன் தடைவிதிக்கவில்லை என்பது கேள்வியாகவே உள்ளது.

யாருக்காக இந்த நாடு தழுவிய தடை உத்தரவு..?

தடை என்பது மக்களுக்கு மட்டும்தானா..?

தடை என்பது மக்களுக்கு மட்டும்தானா..?

நாடு முழுவதும் மாடுகள் விற்பனைக்கும் மாட்டிறைச்சிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளதற்குக் கேரளா முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது. அதனையடுத்துக் கர்நாடகம், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களும் தமது எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கொந்தளித்துக் கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு மொனத்தை மட்டுமே பதிலாகக் கொண்டு உள்ளது.

 

மாட்டிறைச்சி கூடங்கள்

மாட்டிறைச்சி கூடங்கள்

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு திடீர் உத்தரவின் பேரில் வட இந்தியாவில் பல மாநிலங்களில் மக்கள் தனது பிழைப்பிற்காக நடத்தும் பல மாட்டிறைச்சி கூடங்கள் மத்திய அரசும் (பாஜக) மற்றும் மாநில அரசும் இணைந்து மூடியது.

ஆனால் அப்போதும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை.

 

முறைப்படுத்தும் உத்தரவு
 

முறைப்படுத்தும் உத்தரவு

தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவு மாட்டு தொழுவத்திற்கு அனுப்படுவதை முறைப்படுத்துவதாக இருக்கிறது. இந்த உத்தரவின் மூலம் முழுமையான உத்தரவு பெற்ற மாட்டு தொழுவத்திற்கு மட்டுமே மாடுகளை விற்பனை செய்ய முடியும். இதனால் நம் ஊரில்களில் இருக்கும் கறிக்கடைகள் முழுமையாக பாதிக்கப்படும்.

பெரிய நிறுவனங்கள்

பெரிய நிறுவனங்கள்

மேலும் இந்த உத்தரவுகள் முழுமையாக அமலாக்கம் செய்யப்பட்டால் மக்கள் அனைவரும் பதப்படுத்தப்பட்ட மாட்டு இறைச்சியை மட்டுமே வாங்க முடியும், அதனை பெரிய நிறுவனங்களின் கையில் இருந்தால் இதனை விலையும் அதிகமாக இருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது.

நாடு தழுவிய தடை

நாடு தழுவிய தடை

ஏற்கனவே மோடி தலைமையிலான அரசு மாட்டு இறைச்சியை தடை செய்யும் தான் அட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் பல நடவடைக்கைகளை எடுத்துள்ள நிலையில், இத்தகைய அறிவிப்பு நாடு தழுவிய தடையாக மக்கள் பார்கின்றனர்.

யாருக்காக இந்தத் தடை உத்தரவும்..?

யாருக்காக இந்தத் தடை உத்தரவும்..?

மத்திய அரசின் இந்த உத்தரவுகள் அனைத்தும் சாமானியர்களை மட்டுமே நேரடியாகப் பாதிக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் டன் மாட்டிறைச்சி செய்யும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு இந்த உத்தரவால் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்தத் தடையால் நாட்டில் இருக்கும் சிறு மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்படும், இதன் வாயிலாக நாட்டில் இருக்கும் அனைத்துப் பசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் ஆகியவை இந்தப் பெரிய நிறுவனங்களின் கைகளில் நேரடியாகக் கிடைக்கும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படப்போவது சாமானிய மக்களும் வியாபாரிகளும் தான். சரி அப்படி இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சி எங்குச் செல்கிறது தெரியுமா..?

 

மாட்டிறைச்சி ஏற்றுமதி

மாட்டிறைச்சி ஏற்றுமதி

இந்தியா, பிரேசில் இரண்டு நாடுகள் தான் உலகளவில் அதிகம் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஆகும். 2014-ம் ஆண்டுப் பிரேசில் தான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதல் நாடு என்பதை மாற்றியது என்று கூறுகின்றது அமெரிக்க விவசாயத் துறையின் தரவு.

இந்தியாவும், பிரேசிலும்

இந்தியாவும், பிரேசிலும்

2016-ம் ஆண்டுத் தரவின் படி இந்தியாவும், பிரேசிலும் கிட்டத்தட்ட ஒரே அளவு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளன. உலக மாட்டிறைச்சி சந்தையுடன் ஒப்பிடுகையில் பிரேசிலிடம் 20 சதவீதம் சந்தையும், இந்தியாவிடம் 20 சதவீதம் சந்தையும் உள்ளது. இதைத் தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் உலகளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றனர் என்று கூறுகின்றது அமெரிக்கத் தரவு.

மாட்டிறைச்சியை இந்தியா அதிகாரப்பூரவமாக ஏற்றுமதி செய்வதில்லை..?

மாட்டிறைச்சியை இந்தியா அதிகாரப்பூரவமாக ஏற்றுமதி செய்வதில்லை..?

இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுமதி செய்வதில்லை என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எருமை மாட்டிறைச்சியைத் தான் ஏற்றுமதி செய்து வருகின்றது, அதனால் தான் இந்தியாவில் பீப் என்ற பெயர் பிரபலமானது என்றே கூறலாம். இதனைக் காராபீப் என்றும் கூறுவர்.

15 நாடுகள்

15 நாடுகள்

அமெரிக்காவைப் பொருத்த வரை காராபீப் வகையும் பீப்பில் அடங்கும். இந்தியாவில் இருந்து பெரும்பாலும் ஆசிய நாடுகளுக்குத் தான் பீப் ஏற்றுமதி செய்கின்றது. இந்தியாவில் இருந்து 15 நாடுகளுக்குப் பீப் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

வியட்நாம்

வியட்நாம்

இந்தியாவில் இருந்து 2015-2016-ல் பீப் வியட்நாமிற்குத் தான் அதிகளவில் ஏற்றுமதிச் செய்துள்ளது. இதன் மதிப்பு மட்டும் 13,125 கோடி ரூபாய் ஆகும்.

மலேசியா

மலேசியா

அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு 2,683 கோடி ரூபாய் மதிப்பில் பீப் ஏற்றுமதி நடந்துள்ளது.

எகிப்து

எகிப்து

அதே போன்று மூன்றாவதாக 2015-2016 ஆண்டில் எகிப்த்திற்கு 2,2326 கோடி ரூபாய் மதிப்பிலான பீப் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அரபு நாடுகள்

அரபு நாடுகள்

சவுதி அரேபியாவிற்கு 1,416 கோடி ரூபாய்க்கும், ஈராக்கிற்கு 767 கோடி ரூபாய்க்கும் இந்தியாவில் இருந்து 2015-2016 ஆண்டில் பீப் ஏற்றுமதி நடந்துள்ளது.

இந்தியா சீனா ஒப்பந்தம்?

இந்தியா சீனா ஒப்பந்தம்?

2015 மே மாதம் பிரதமர் மோடி அவர்கள் சீனா சென்று வந்த போது இந்தியாவில் இருந்து அரிசி, பீப் மற்றும் சில மசாலா பொருட்கள் ஏற்றுமதிக்கும் ஒப்பந்த செய்யப்பட்டு, சீனாவில் இருந்து இந்தியாவில் மாட்டிறைச்சியை ஆய்வு செய்ய அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதற்கு முன்பும் சீனாவில் இந்திய மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட்டாலும் அது வியட்நாம் வழியாகவே சென்றது. நேரடி ஏற்றுமதி செய்யப்படவில்லை. சீன அதிகாரிகளின் ஆய்விற்குப் பிறகு ஜனவர் 2016-ல் இந்திய மாட்டிறைச்சியை நேரடியாக இறக்குமதியை செய்ய சீன அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

 

முக்கிய மாநிலங்கள்

முக்கிய மாநிலங்கள்

உத்திரபிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கேரளா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகியவை அதிகளவில் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது.

பீப் ஏற்றுமதியில் டாப் 3 நாடுகள்

பீப் ஏற்றுமதியில் டாப் 3 நாடுகள்

2016-ம் ஆண்டு இந்தியா மற்றும் பிரேசிலில் இருந்து 1850 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 1,385 மெட்ரிக் டன் பீப் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

5 முக்கிய மாநிலங்கள்

5 முக்கிய மாநிலங்கள்

மார்ச் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போன்று பாஜக ஆட்சியில் உள்ள பிற 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து அதன் கூடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டது.

ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாஜக மார்ச் மாதத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்துக் குறிப்பிடத்தக்கது.

 

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

கடந்த சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கூடங்களுக்குக் கடந்த திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்கே போனார் மோடி..?

எங்கே போனார் மோடி..?

வழக்கம்போல் அறிவிப்பை வெளியிட்டு விட்டு உலக நாடுகளுக்குப் பயணத்தை மேற்கொண்டார் மோடி. மாட்டிறைச்சிக்குத் தடையை அறிவித்துவிட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மோடி தற்போது ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குப் பறந்துவிட்டார்.

இதேபோல் பணமதிப்பிழப்பு, விவசாயிகள் போராட்டத்தின் போது வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார் மோடி.

 

தீர்வு

தீர்வு

தற்போது மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வழுக்கும் நிலையில், மத்திய அரசு இதற்கு எப்போது எப்படித் தீர்வு காணும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சசி தரூர்

மாட்டிறைச்சி தடை ஒரு வகையில் சுதந்திரம் பரிபோனதாக கூறினார் சசி தரூர்

பெண்களுக்கு பாதுகாப்பு

மக்களுக்கு எது விருப்பமோ அதை சாப்பிட அவர்களுக்கு உரிமை உண்டு.
மாடுகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இருக்கட்டும் முதலில் இந்தியாவில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை கொடுங்கள்.

ஆன்டி இந்தியன்

சிரிப்புக்கு மட்டுமே இந்த டிவீட்.

சுப வீரபாண்டியன்

ஏமாற்று வேலைகளின் மறுபெயர் மத்திய அரசா?

திராவிட நாடு

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்தப்பின்பு தென் இந்தியாவில் தனி திராவிட நாடு என்ற கண்ணோட்டோம் அதிகளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தில் திராவிட நாடாக மக்கள் கூறப்படும் தென் இந்தியாவின் 5 மாநிலங்களின் ஆதிக்கத்தை விளக்கும் ஒரு டிவீட்டை பாருங்க.

 

மோடிக்கு சவால்

எழுத்தாளர் மற்றும் அரசியல் பிரமுகரான ஜோதிமணி பிரதமர் மோடிக்கு விட்ட சவாலை கொஞ்சம் பாருங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BeefBan: To Which country india exporting beef most

BeefBan: To Which country india exporting beef most
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X