வெளிநாடுகளில் வேலை பார்க்கும் செவிலியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் 5 நாடுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவிலியர் பணி உலகின் மிகுந்த லாபகரமான தொழில்களில் ஒன்றாகும். மேலும் ஒப்பீட்டளவில் பெரும்பாலான நாடுகளில் செவிலியர் வேலையைக் கண்டறிவது எளிதானது. இருந்தாலும் நீங்கள் வேலை செய்ய விரும்பும் நாட்டின் அடிப்படையில் பல விதிமுறைகளுக்கும் சான்றிதழ்களுக்கும் இதில் தொடர்புள்ளன.

கீழே உள்ள எங்கள் கருத்துக்கணிப்பை எடுத்துக் கொண்டு, சம்பளம், வேலையில் திருப்தி, மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எந்த நாடு செவிலியர்களுக்குச் சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்.

இங்கே பதிவு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கும், மேலும் ஒப்பீட்டளவில் புலம் பெயர்ந்த செவிலியராக எளிதாக அந்த நாட்டிற்குள் சென்று வேலை பார்க்கக்கூடிய ஐந்து நாடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

1. யுனைடெட் கிங்டம்

1. யுனைடெட் கிங்டம்

உடல்நல சுகாதாரத் துறையின் சம்பள அளவுகோலின் படி, செவிலியர்கள் அவர்களது அனுவபம் மற்றும் கல்வித் தகுதிகளைப் பொறுத்துப் பேண்ட் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட சம்பளத்தைப் பெறுகிறார்கள். ஐரோப்பிய யூனியன் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெளியே பயிற்சி பெற்ற செவிலிகள், யூகே வின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு நிறுவனமான செவிலியம் மற்றும் பேறுகால மருத்துவப் பணியல் மன்றத்தில் நீங்கள் ஒரு செவிலியராகப் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

2. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

2. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் பொதுவாகச் செவிலியத்தில் ஒரு இளநிலை அறிவியல் பட்டம் (பிஎன்எஸ் - 4 ஆண்டுகள்), செவிலியத்தில் ஒரு துணைப் பட்டம் (ஏஎன்டி- 3 ஆண்டுகள்), அல்லது ஒரு தேசீய அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் திட்டத்தில் (2 ஆண்டுகள்) பட்டயமோ பெற்றிருக்கிறார்கள்.

எப்படி வெளிநாட்டில் செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பது?

எப்படி வெளிநாட்டில் செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பது?

வெளிநாட்டுச் செவிலியர்களுக்கு, நீங்கள் வேலைவாய்ப்பு பெற கருதும் மாநிலத்தில் தொழில்முறை செவிலியர் பணியைப் பயிற்சி செய்ய அயல்நாட்டுச் செவிலியர் பள்ளிகளின் பட்டதாரிகள் ஆணையத்தின் (சிஜிஎஃப்என்எஸ்) சான்றிதழ் அல்லது முழுமையான தடையற்ற உரிமம் (என்சிஈஎல்எக்ஸ்) பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் காலம்

தேவைப்படும் காலம்

உங்கள் குடியேற்ற செயல்முறைக்கு ஆதரவளிக்க உங்களுக்கு வேலைத் தரவிருக்கும் முதலாளி தயாராக இருக்க வேண்டியது விசா மற்றும் லைசன்ஸை பெறுவதற்கு அத்தியாவசியமானதாகும். இந்தச் செயல்முறைக்கு ஒரு வருடம் வரை ஆகலாம்.

மே 2015 இன் படி, அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு செவிலியரின் வருடாந்திர சராசரி சம்பளம் தோராயமாக அமெரிக்க டாலர் 67,490 அல்லது தினார் 247,890 ஆகும்.

 

3. நார்வே

3. நார்வே

நார்வேயின் உடல்நல சுகாதாரத் துறை இயக்குநரகம் உடல்நல சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் பயிற்சி பெறுவதற்கான உரிமங்களை விநியோகிக்கிறது. இதைப் பெற நீங்கள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குடிபெயர்வதற்கு நார்வேஜியன் மொழியில் அறிவு அவசியமாகும். மேலும் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.

சம்பளம்

சம்பளம்

நார்வே நாட்டில் உடல்நல சுகாதார நிறுவனங்களில் சராசரி மாதாந்திர வருவாய் சுமார் நார்வேஜியன் குரோன் 44,900 அல்லது தினார் 19,169 (வெவ்வேறு மாறுபாடுகளின் அடிப்படையில்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது வருடத்திற்குத் தோராயமாகத் தினார் 230,028 ஆகும்.

4. கனடா

4. கனடா

கனடாவில் வேலை செய்ய விரும்பும் சர்வ தேச அளவில் கல்வி கற்ற செவிலியர்கள் (IENs) கனடா நாட்டுப் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களுக்கான செயல்பாடுகளின் தொடர்ச்சியாக உரிமம் பெற்றிருத்தல் அவசியமானதாகும். முதல் நிலை தேவையாக நீங்கள் ஒரு செவிலியராகப் பயிற்சி செய்வதற்கான தேசீய அளவிலான தேர்வை எழுத வேண்டும்.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

செவிலியர் மாநில வாரியங்களின் தேசிய மன்றத்தால் நடத்தப்படும் NCLEX - RN எனப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதைப் பற்றிய தகவல்களை அறிய இங்கே பார்க்கவும். மேலும் நீங்கள் வேலை செய்யத் திட்டமிட்டிருக்கும் மாகாணத்தின் செவிலியர் குழுமத்தில் உங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

செவிலியர் குழுமத்தில் பதிவு செய்வது எப்படி?

செவிலியர் குழுமத்தில் பதிவு செய்வது எப்படி?

செவிலியர் குழுமத்தில் பதிவு செய்வது எப்படி என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளச் சர்வதேச அளவில் கல்வி கற்ற செவிலியர்களுக்கான ஓன்டாரியோவின் செவிலியர் பயிற்சி கல்லூரியின் முழுமையான வழிகாட்டியைப் பார்க்கவும்.
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி கனடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு செவிலியருக்கான வருடாந்திர சம்பளம் கனட டாலர் 59,783 அல்லது தினார் 163,010 ஆகும்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒரு பதிவு செய்யப்பட்ட செவிலியராகப் பயிற்சி செய்ய நீங்கள் இரண்டு தனிப்பட்ட செயல்முறைகளை நிறைவு செய்ய வேண்டும். ஒன்று, ஆஸ்திரேலியா செவிலியம் மற்றும் பேறுகால மருத்துவப் பணியல் இயக்குநரகத்தில் (NMBA) பதிவு செய்து கொள்வது மற்றொன்று ஒரு விசாவை பெறுவது.

செவிலியர்களுக்கு, ஆஸ்திரேலியா செவிலியை மற்றும் பேறுகால மருத்துவப் பணியல் அங்கீகார கழகம் அந்நாட்டில் குடிபெயர்வதற்கான திறன்களை மதிப்பிடுகிறது (விசா செயல்முறை) அதே சமயம் NMBA உங்கள் கல்வித் தகுதிகள் ஆஸ்திரேலியா கல்வித்தகுதிகளுக்குச் சமமானவை தானா என்பதை மதிப்பிடுகிறது.

 

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு உத்திரவாதமளிக்காது

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு உத்திரவாதமளிக்காது

இவற்றில் எதுவுமே ஆஸ்திரேலியாவில் வேலைக்கு உங்களுக்கு உத்திரவாதமளிக்காது. அந்த நாட்டில் ஒரு வேலையைப் பெறுவதற்கு ஆஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு முன்பாக இந்த இரண்டு செயல்முறைகளையும் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் செவிலியர் சம்பளம் எவ்வளவு?

ஆஸ்திரேலியாவில் செவிலியர் சம்பளம் எவ்வளவு?

2017 ஆம் ஆண்டு நடைமுறைப்படி ஆஸ்திரேலியாவில் ஒரு பதிவு செய்யப்பட்ட செவிலியர் ஈட்டும் சராசரி வருடாந்திர சம்பளம் ஆஸ்திரேலியா டாலர் 61,000 அல்லது தினார் 169,003 ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 countries with highest salaries for expat nurses

5 countries with highest salaries for expat nurses
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X